காதல் ஹைக்கூ

காதல் ஹைக்கூ
  • தனிமையில் உன்னினைவோடு
  • என் பார்வையில் காதல்...!
  • காதல் வைரஸ்
  • மலர்ந்த காதல் என்றும் என்னுள் மாறாது
  • நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!
  • தனிமையில் உன்னினைவோடு
  • தனிமையில் உன்னினைவோடு

காதல் ஹைக்கூ

அன்றும் இன்றும்
என்றும் இனிக்கும்
காதல்

உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்

கற்காலம் முதல்
கணிப்பொறி காலம் வரை
காதல்

செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்

கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்

காவியத்திலும்
கணினியுகத்திலும்
இனிக்கும் காதல்

விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்

இரசாயண மாற்றம்
ரசனைக்குரிய மாற்றம்
காதல்

விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்

சிந்தையில் ஒரு மின்னல்
உருவாக்கும் ஒரு மின்சாரம்
காதல்

வானில் மிதக்கலாம்
உலகை மறக்கலாம்
காதல்

பெற்றோரை விட
பெரிதாகத் தோன்றும்
காதல்

- கவிஞர் இரா.இரவி

கருத்துகள்