infosys நாராயணமூர்த்தி, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12a0403863ef8402&attid=0.2&disp=inline&realattid=f_gc0bl6e6&zw


infosys நாராயணமூர்த்தி, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : திரு.என்.சொக்கன்


1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்போசியஸ் நிறுவனம் ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கி, இப்போது ரூ10,000 கோடி வருமானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமான திரு.நாராயணமூர்த்தியின் வரலாற்றை திரு.என்.சொக்கன் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.இளைய தலைமுறை படித்து உணர வேண்டிய சிறந்த நூல்.

உழைத்து உயர வேண்டும், இலட்சியம் அடைய வேண்டும் என்ற தேடல் வேட்கை உள்ளவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நூல் உள்ளது. திரு.நாராயணமூர்த்தியின் அப்பா ஆசிரியர் என்பதால் அவர் சராசரி தந்தையாக மட்டும் இல்லாமல் ஆசிரியரகாவும்,பலவற்றை புகட்டினார். குழுவாக இசைக்கும் சிம்பொனி பற்றி தந்தை விளக்கியதன் விளைவாக, பின்னர் அந்த விதை, கணிப்பொறி உலகில் ஒரு சிறந்த குழு மனிதராக, குழு வேலை என்ற யுத்திக்கு உதவியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தின் 4 வது இடம் பெற்றதற்காக தந்தை பாராட்டவில்லை. முதல் மூன்று இடங்கள் என்னாச்சு? என்றார்,அடுத்த பொதுத் தேர்தலில் மாநிலத்தில் மூன்றவாதாக வந்தார். அப்போதும் அவர் தந்தை பாரட்டவில்லை. மூன்றாவது இடம் தானா? என்று உதட்டை பிதுக்கினர். பிறகு தான் அவருக்கு புரிந்தது,எதிலும் முதல் இடம் அடைய வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம். எனவே எதிலும் முதல்நிலை அடைவதே இலட்சியம் என உழைக்கத் தொடங்கினார். முதல்நிலை அடைந்தார்.

ஆங்கில நூல்கள் வாசிக்கும் பழக்கத்தையும், ஷேக்ஸ்பியரை வாசிக்கவும் தந்தை பழக்கினார். திரு.நாராயணமூர்த்தி வெற்றியில் அவரது பெற்றோர்களுக்கும் பங்கு உள்ளது என்பதை இந்நூலின் மூலம் நன்கு உணர முடிகின்றது. தன் மகன் சாதனையாளராக வர வேண்டும் என்றால் பெற்றோர்களும் ஊக்கம் தர வேண்டும் என்பதை உணர்த்துகின்றது நூல்."ஒவ்வொரு பிரச்சனை எதிர்ப்படும் போதும், அதைச் சமாளிப்பதற்காக தனது உழைப்பைப் பல மடங்காகப் பெருக்கிக் கொள்வதன் மூலம் அந்தத்; தடைகளைத் தாண்டி விடலாம் " என்று அவர் உறுதியாக நம்பினார்.

வருங்கால சாதனையாளர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய கல்வெட்டு வார்த்தை நூலில் உள்ளது. மனதில் பதியும் மந்திரச் சொற்கள் போல பல கருத்துக்கள் நூலில் உள்ளது. ஒரு வெற்றியாளரின் உண்மை வரலாற்றைப் படிக்கும் போது படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் நாமும் வெற்றியாளராக வேண்டும் என்ற உத்வேகம் தருகின்றது.

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது ஐ.ஐ.டி. கனவை விடுத்து மைசூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசிய பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் வகுப்பில் சேர்ந்தார் நாராயண மூர்த்தி. பின்னர் கான்பூரிலிருந்து ஜ.ஜ.டியில் முதுநிலைப் படிப்புக்குச் சேர்ந்தார் என்ற தவல் நூலில் உள்ளது.

இங்கு தான் கணிப்பொறியை முதன்முதலாகப் பார்த்து நம்ப முடியாத ஆச்சிரியத்தோடும், பரபரப்பு கலந்த ஆவலோடும் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்றைக்கு ஆரம்பக் கல்வியிலேயே கணிப்பொறி அறிமுகம் செய்து வைத்து விட்டார்கள். இன்றைய தலைமுறைக்கு சகல வசதிகளும் மிக எளிதாக கிடைத்து விட்டது.

1969ஆம் ஆண்டு அகமதாபாத் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் கணினித் துறையில் பணிக்கு சேர்ந்தார். அங்கே அவருடைய முதல் சம்பளம் மாதத்துக்கு எண்ணூறு ரூபாய் மட்டுமே. ஆனால் இன்றைக்கு இலட்சக்கணக்கில் ஊதியம் பெறுகின்றனர். இப்படி அவர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு நூலில் உள்ளது. அவருக்கும் சுதாவிற்கும் ஏற்பட்ட காதல், சுதாவின் தந்தையிடம் ஏற்பட்ட முரண்பாடு, தானும் ஆறு நண்பர்களுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்று முனைப்போடு இறங்கினார். இதற்கு அவரது மனைவி சுதா கூட சற்று தயங்கினார். இருந்தபோதும் சுதா அம்மா சொன்ன அறிவுரைப்படி, அலமாரியில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கணவருக்கு தந்து உதவினார். அந்த சிறுதுளி தான் பெருவெள்ளமானது.

" சிறிய சேமிப்பு தான் அவசரத்திற்கு உதவும் " என்ற சுதாவின் அம்மா அறிவுரை நமக்கும் உதவும். சேமிப்பு என்பது மிகவும் அவசியம். அவசர, அவசிய காலங்களில் அது உதவும் என்பதை உணர்த்துகின்றது. அந்த சிறிய சேமிப்பு தான் முதலீடு ஆகி பல கோடிகளாகப் பெருகிட உதவியது.

ஏழு பேர் வெற்றிக் கூட்டணியின் பெயர்கள் 1)நாகவர ராமராவ் நாராயணமூர்த்தி, 2) நந்தன் நீலகனி, 3)கே.தினேஷ், 4)எஸ். கோபாலகிருஷ்ணன், 5)என்.எஸ்.ராகவன், 6)எஸ்.டி.ஷிபுலால், 7)அஷோக் அரோரா.

இவர்கள் அனைவரும் 1980 ஆண்டு இறுதியில் தங்களின் வேலையைத் துறந்தார்கள். 1981ம் ஆண்டு ஜீலை மாதம் புதிய நிறுவனம் தொடங்கி வெற்றிக் கொடி நாட்டினார்கள், இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது.

திரு.நாராயணமூர்த்தி பெற்ற விருதுகளின் பட்டியல், பதவி வகித்த நிறுவனங்களின் பட்டியல், இன்போசியஸ் நிறுவனம் பெற்ற விருதுகளின் பட்டியல், இன்போசியஸ் அறக்கட்டளை பொறுப்பாளர் சுதாமூர்த்தி பெற்ற விருதுகளின் பட்டியல் யாவும் நூலில் உள்ளது. நூலின் கடைசிப்பகுதியில் திரு.நாராயணமூர்த்தி சொன்னவை என்ற தொகுப்பும் உள்ளது.

தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் தான் நல்ல தலைவர்களாக முடியும்
தயாராக இருக்கிறவர்களுக்குத் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன
எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும், எதற்காகவும்,
நாம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை விட்டுத்தரக்கூடாது
தடைகளைக் கூட நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்

திரு.நாரயணமூர்த்தியின் வெற்றியின் ரகசியத்தை பறைசாற்றும் விதமாக மிகச் சிறப்பாக நல்ல நடையில் எழுதிய நூல் ஆசிரியர் திரு.என்.சொக்கன் பாராட்டுக்கு உரியவர், அவரது உழைப்பை உணர முடிகின்றது.

கருத்துகள்