கிலுகிலுப்பை (சிறுவர் பாடல்கள்) * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : கன்னிக்கோவில் ராஜா
“கிலுகிலுப்பை ஓசையில் மகிழ்ந்திடும் மனசு� முற்றிலும் உண்மை. குழந்தைகளுக்கு மட்டுமல்;ல,பெரியவர்களுக்கும் இனிமை தருவது கிலுகிலுப்பை.அதுபோல் இந்நூல் குழந்தைகள் பாடல்களாக இருந்தாலும்,பெரியவர்களும் ரசித்து படிக்கலாம். மழலையர்களுக்கு பாடநூலாக வைக்கும் தகுதி இந்த நூலுக்கு உண்டு.குறைந்த பட்சம் தமிழர்கள் இந்நூலை வாங்கி தம் குழந்தைகளை படிக்க வைத்தால் தமிழ் மொழி அறிவு வளரும் என்பதில் சந்தேகமில்லை.என் குழந்தைக்கு தமிழ் வராது என்பவர்கள்,இந்நூலை வாங்கி,உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்,தமிழ் வரும்.குழந்தை இலக்கியத்திற்கான இடத்தை மிகக் குறைவானவர்களே நிரப்பி வருகின்றனர்.அந்த வரிசையில் இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவும் இடம் பிடித்து விட்டார். மரியாதைக்கும்,மதிப்பிற்கும் உரிய சிறந்த சிந்தனையாளர்,எழுத்தாளர்,பேச்சாளர் திரு.வெ.இறையன்பு, இஆப.சொல்வார்கள்,�இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்,சோர்ந்து விடக் கூடாது.சேர்ந்தால் காணாமல் போய் விடுவோம்.விதைகளை விதைத்துக் கொண்டே போனால் நிச்சயம் விளையும்� என்பார்கள். அது போல இயங்கி வரும் ஓய்வறியா உழைப்பாளி நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா. இந்த விளக்கு ஒளிர்ந்திட தூண்டுகோலாக இருப்பவர் இந்நூலின் பதிப்பாளர்,பொதிகை மின்னல் ஆசிரியர் வசீகரன். இந்த இருவரும் இயந்திரமயமான சென்னை மாநகரில் வாழும் மனிதநேயமிக்க நல்லவர்கள். இவர்களின் இந்த இலக்கியக் கூட்டணி தொடர்ந்து வெற்றி வாழும் மனித நேயமிக்க நல்லவர்கள்.இவர்களின் இந்த இலக்கியக் கூட்டணி தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல்.சகலகலா வல்லவர் என்பதை நிரூபித்து உள்ளார் நூலாசிரியர்.
நூலாசிரியர் தனக்கு முதல் வகுப்பெடுத்த ஜானகி ஆசிரியைக்கு இந்நூலை காணிக்கை ஆக்கி இருப்பது முற்றிலும் பொருத்தம். இவர் குழந்தையாக இருந்த போது,தனக்கு தமிழை அறிமுகம் செய்து வைத்த ஆசிரியைக்கு தான் எழுதிய குழந்தைப் பாடல்களை காணிக்கை ஆக்கியது சிறப்பு.கவிதைக்கான தலைப்புகள் மிகவும் இனிமையாக உள்ளது.மரம் நடு:மழை பெறு,மாற்றம் காணுவோம்,எறும்பு அண்ணனும் – குறும்பு தம்பியும்,கல்விப்பாதை இப்படி தலைப்புகளைப் பற்றியே தனி ஆய்வு நடத்தலாம். அவ்வளவு சிறப்பாகவும்,பொருத்தமாகவும் பாடல்களுக்கான தலைப்பைச் சூட்டி உள்ளார்.பாடல் வரிகள்,குழந்தைகளுக்கு விஞ்ஞானம் புகட்டும் விதமாக கல்வியின் மேன்மையை உணர்த்தும் விதமாக,நெறிப்படுத்தும் விதமாக இனிமையாக உள்ளது.
மரம் நடு:மழை பெறு
பசுமையைக் காக்க முயல்வோமே
பறவை இனங்களை வளர்ப்போமே!
இருக்கும் இயற்கை வளங்களையே
இயன்ற வரையில் காப்போமே
இப்படி முதல் பாடலே முத்தாய்ப்பாக உள்ளது.இன்றைக்கு வனத்தை அழிப்பதாலும்,சுற்றுச்சுழலை மாசுபடுத்துவதாலும் தான் மனித இனம் நோயால் அழிந்து வருகின்றது.சுனாமி என்ற பேரழிவையும் கண்டது.வருங்கால சமுதாயம் வளமாக இருக்க,குழந்தைகளுக்கு விழிப்புணர்வை விதைக்கின்றது.மழையின் அவசியம் உணர்த்துகின்றார்,எறும்பின் சுறுசுறுப்பு,போலியயோ விழிப்புணர்வு,தன்னம்பிக்கை இப்படி பல அவசியமான கருத்துக்களை மிக எளிதாக குழந்தைகளின் மனதில் விதைப்பதற்கு இந்நூல் உறுதியாக உதவும்.
முடியும்
முடியுமா நம்மால் என்றே வியந்தால்
முடிகிற செயலும் முடியாது
விடியுமே என்றே சூரியன் இருந்தால்
வுpடியலும் இங்கே இருக்காது.
இந்த வரிகளை திரைப்படத்திற்கு பாடலாகக் கூட வைக்கலாம்.மிகச்சிறந்த வைர வரிகள் கவிஞாயிறு தாராபாரதியின் அற்புத வரிகளான �வெறுங்கை என்பது மூடத்தனம்,விரல்கள் பத்தும் மூலதனம்�என்பதற்கு இணையான வரிகள்.பாராட்டுக்கள்.�சென்னைவாசி�என்ற லிமரைக்கூ நூல் எழுதி புகழ் பெற்றவர்.உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா பற்றியும் நல்ல பாடல் பாடியுள்ளார்.ஆமையோடு பேசுவது போல உள்ள�ஆமை அக்கா� பாடல் மிக நன்று.எலி,ஆமை,ஆடு,மயில்,கிளி இப்படி விலங்குகள்,பறவைகளை குழந்தைகளுக்கு பாடல்களின் மூலம் அறிமுகம் செய்து வைக்கின்றார். இப்பாடல்களைப் படிக்கும் போது குழந்தைகளுக்கு தமிழ்மொழி அறிவுடன் பொது அறிவும் வளர்கின்றது.
சுற்றுச்சூழல் மாசுக்கும்,பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் முழு முதற்காரணம்,இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்கள்.மிதிவண்டி ஓட்டலாம் என்ற பாடலில்,மிதிவண்டியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
பெட்ரோல் டீசல் தேவையில்லை
பெரிய செலவு ஒன்றும் இல்லை
உடலுக்கு பயிற்சி மிதிவண்டி
உற்சாக பயணம் மிதிவண்டி
இப்படி சிக்கனம் போதித்து மனித குலத்துக்கு நலம் பயக்கும் நல்ல பல பாடல்களின் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல, நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவிற்கு ஒரு வசீகரன். இந்த இருவரின் கூட்டணி இலக்கிய உலகில் நல்ல பல சாதனைகளை நிகழ்த்தும்.கிலுகிலுப்பை ஒலி கேட்டால் இனிமை.கிலுகிலுப்பை நூல் படித்தால் இனிமை
கருத்துகள்
கருத்துரையிடுக