தோல்வியைப் படி வெற்றியைப் பிடி * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef511819ea4b8&attid=0.5&disp=inline&realattid=f_gbukvnur4&zw
தோல்வியைப் படி வெற்றியைப் பிடி * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி


* நூல் ஆசிரியர் : கவிஞர் கோ.சித்தநாதன்


நூலின் அட்டைப்படம், சூரியனைத் தொட்டு விடும் மனிதன் படம், பின்புறம் கவிஞர்கள் பா.விஜய் பழனிபாரதியின் வைர வரி வாழ்த்துக்கள். மிகச் சிறப்பாக நூலின் பெயர் இப்படி நூலை கையில் எடுத்தவுடன் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.

வளரும் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் வளர்த்து விடும் நோக்கம் கொண்ட மணிமேகலைப் பிரசுரத்தின் மூலம் நூல் வந்திருப்பது கூடுதல் சிறப்பு. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம் போல,கவிஞர் சித்தநாதன் வழங்கி உள்ள கவிதைப் பஞ்சாமிர்தம் இந்த நூல் கவிதை உலகில் வெற்றிக்கொடி நாட்டிய வித்தகக் கவிஞர் பா.விஜய், திரைப்படப் பாடல்களில் புதமை விதைத்த கவிஞர் பாரதி இருவரின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

ஆத்தூர் இரவி, பேராசிரியர் வ. அருணாசலம் ஆகியோரின் வாழத்துரை முத்தாய்ப்பாக உள்ளது. “கண்கண்ட பெண் தெய்வம்” என்ற முதல் கவிதை படித்தவுடன் கடவுள் பக்தி இல்லாதவர்களுக்கும் பெற்ற தாயின் மேல் பக்தி வருகின்றது.

கார்கால வானம் போன்ற அன்னையே
கருவுற்று நீ சுமந்தாய் என்னையே

தாய், தந்தை ஆசான் என இவர் கவிஞராகக் காரணமானவர்களை நன்றியோடு கவிதைகளைப் பதிவு செய்துள்ளார்.

சண்டை போடாத நல்ல நண்பன் நூல் என்ற பொன்மொழியை மெய்யாக்கும் வண்ணம் “உண்மை நண்பன்” என்ற நூல்கள் பற்றிய கவிதை உள்ளது. “உணர்வுகள்” என்ற கவிதையில் மிக நுட்பமாக பாடி உள்ளார். புற்றுநோய் வருவதற்குக் காரணமாக இருக்கும் புகை பிடித்தலைச் சாடுகிறார்கள். பல உயிர்களைக் கொன்ற சுனாமியைத் திட்டுகிறார். “முயற்சி” என்ற கவிதை தன்னம்பிக்கை விதை விதைக்கின்றது

அமைதியாக வாழ்ந்திடு
உன் இலக்கினை அடையும் வரை போரிடு

இந்த வரிகள் மாமனிதர் அப்துல் கலாமின் வைர வரிகளை நினைவ+ட்டுகின்றன. முடியும் வரை முயல்வது மட்டுமல்ல முயற்சி, நினைத்தது முடியும் வரை முயல்வதே முயற்சி.

வேண்டும், வேண்டும் என்ற கவிதை டும் டும் என்ற சந்த நயத்துடன் நயமான பொருளுடன் உள்ளது. உயி;ர் காப்பான் தோழன் என்பார்கள் நட்பு என்ற கவிதை மிகச் சிறப்பாக உள்ளது. ஒருவரிக் கவிதைகள் நம்முள் பல சிந்தனைகளை விதைக்கின்றன.

மதம் வன்முறையைத் தூண்டும் மருந்து br>
மதங்களின் இன்றைய நிலையை மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டி உள்ளார். கவிஞர்களுக்கு காதலைப் பாடுவது, கரும்பு சுவைப்பதைப் போன்றது. கவிஞர் கோ.சித்தநாதனும், காதலைப் பாடத் தவறவில்லை. சிலை பற்றிய கவிதையில் சொற்களைச் செதுக்கி உள்ளார். அறிவியல் புயல் அப்துல் கலாம் பற்றி

“கனவின் உச்சியில் கலாம்” என்ற கவிதையில் பதிவு செய்துள்ளார்

வழி நடத்திச் செல்கின்ற
ஒளி படைத்த இமயமானாய்

கவிஞனுக்கு தாய்மொழிப் பற்று தமிழ்மொழிப் பற்று மிகவும் அவசியம். “எனது தாய்மொழி” என்ற கவிதையில் மிக அழகாக பதிவு செய்துள்ளார். எல்லோருக்கும் கல்லூரி வாழ்க்கை என்பது பசுமரத்து ஆணி போல பதிந்து இருக்கும். “கல்லூரி வாழ்க்கை” கவிதையைப் படித்ததும் அவரவருக்கு கல்லூரியின் மலரும் நினைவுகள் மலர்வது உறுதி. பாட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பகுத்தறிவுப் பாடலான “ஆளும் வளரனும், அறிவும் வளரணும்” என்ற பாடலை நினைவ+ட்டும் விதமாக உள்ளது. “விதியும் உன் காலடியில்” என்ற கவிதை “இலட்சியத்தை நோக்கி” கவிதை படிக்கும் போது படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் உத்வேகம் பிறக்கின்றது.

வளரும் கவிஞரின் வளமான படைப்பு, மாணவர்கள் பலர் நல்ல பல கவிதைகளை படைக்கின்றனர். ஆனால் அவற்றை நூலாக்கி ஆவணப்படுத்தவதில்லை பலர். கவிஞர் கோ. சித்தநாதன் இந்த நூலின் மூலம் தன் கவித்திறமையை நிரூபித்து உள்ளார். இன்னும் தொடர்ந்து நல்ல பல கவிதை நூல்களைப் படைத்து வருங்கால சமுதாயத்திற்கு இலக்கியத் தொண்டு புரிய வாழ்த்துக்கள்.

கருத்துகள்