பிரியும் நேரத்தில்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர்.- நாணற்காடன்
கடுகு சிறிது தான், காரம் பெரிது. அதுபோல ஹைக்கூ வடிவம் சிறிது தான், ஆனால்
அதன் தாக்கம் பெரிது. படித்து முடித்தவுடன் வாசகர்களின் உள்ளத்தில்
ஏற்படுத்தும் அதிர்வுகள் அதிகம். அதனால் மிகக்குறுகிய காலத்தில் ஹைக்கூ வடிவம்
மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிறந்த ஹைக்கூ
கவிஞர்களில் கவிஞர் நாணற்கோடனும் ஒருவர். தொடர்ந்து இயங்கிக் கொண்டே
இருப்பவர்.பல்வேறு சிற்றிதழ்களில் ஹைக்கூ எழுதி வரும் சிறந்த படைப்பாளி.
ஓய்வறியா உழைப்பாளி.
“பிரியும் நேரத்தில் “என்ற இந்த ஹைக்கூ கவிதை நூலிற்கு 2007ம் ஆண்டிற்கான
கவிஞர் ‘தாராபாரதி’ விருதும் புதுச்சேரி ‘சுந்தராம்பாள்’ விருதும்
கிடைத்துள்ளது. நூலிற்கான அணிந்துரையை ஹைக்கூ கவிதைகளின் முன்னோடிகள் கவிஞர்
மு.முருகேஷ்,கவிஞர் பொன்குமார் எழுதி இருக்கிறார்கள். நூல் என்ற மகுடத்தில்
பதித்த வைரக்கற்களாக ஜொலிக்கின்றன. நூலைப்படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்
வண்ணம் உள்ளது. இந்நூலை படித்துக்கொண்டே வருகிறோம். படித்து முடித்தவுடன் நூலை
விட்டு பிரியும் நேரத்தில் மனம் நூலை மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத்
தூண்டும் வண்ணம் அற்புதமாக படைத்து இருக்கிறார். ஹைக்கூவை பொய்க்கூ
என்றவர்களின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் வாழ்வியல் உண்மையை,நடப்பை,
எதார்த்தமாக, இயல்பாக நறுக், சுறுக் என்ற பாணியில் சொற்சிக்கனத்துடன் சுவைபட
வடித்து இருக்கிறார். பத்துப்பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய செய்திகளை மூன்றே
வரிகளில் முத்தாய்ப்பாக சொல்லி விடுகிறார்.
இவர் பாடாத பொருள் இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி
இருக்கிறார். வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி நுட்பமாக
ஹைக்கூவாக வடித்து இருக்கிறார். சுண்டக் காய்ச்சிய பாலாக சுருங்கிச் சொல்லி
விளங்க வைத்துள்ளார்.
கல்லூரி மாணவன்
புத்தக நடுவில்
தாயின் கடிதம்
கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனுக்கு தாயின் மடல் பொக்கிஷம்
அதை அனுபவித்தவர்கள் நன்கு உணர்வார்கள். அந்த இனிமையான உணர்வை மிக அழகாக பதிவு
செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கணிணி யுகத்திலும் விலைமதிப்பற்ற மனித உயிர்கள்
பலியாவதை மனித நேயத்தில் பற்றுள்ள மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடிவில்லை.
தமிழரின் வீரத்தை உயிரை பலி கொடுத்துத்தான் நிரூபிக்க வேண்டுமா?இப்படி பல
கேள்விகளை நம்முன் எழுப்புகின்ற ஹைக்கூ இதோ.
அப்பாவின் திதி நாள்
ஊரெங்கும்
ஜல்லிக்கட்டு விழா
இருபத்தி ஓராம் நூற்றாண்டு விரைவில் வல்லரசு ஆக உள்ளோம். பத்து ஏவுகணைகளை ஏவி
சாதித்து விட்டோம். அணுகுண்டு சோதனை நடத்தி விட்டோம் என ஒருபக்கம்
பெருமைபட்டுக் கொண்டாலும் மறுபக்கம் ஒருவேளை உணவு இன்றி பலர் வாடுகின்றனர்.
அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. வறுமை ஒழிந்தபாடில்லை.
கிராமத்திற்கு கல்வி இன்றும் போய் சேரவில்லை என்பதை எடுத்து இயம்பிடும் ஹைக்கூ.
கிராமத்து மாணவன்
இறுதியாண்டு படிப்பு
அய்ந்தாம் வகுப்பு
பெண்மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு மகளைப் பிரிந்து பெற்றோர்கள் படும்
கவலையை பதிவு செய்யும் ஹைக்கூ. மகளும் கண்ணாடி பார்க்கவில்லை. மகளைப் பிரிந்த
பெற்றோர்களும் கண்ணாடி பார்க்கவில்லை.
புகுந்த வீட்டில் மகள்
பார்க்க ஆளில்லாமல்
நிலைக் கண்ணாடி
குழந்தைப் பருவத்தில் நண்பனுடன் விளையாடிப் பெற்ற தழும்புகளின் மூலம் மலரும்
நினைவுகளைத் தோற்றுவிக்கும் ஹைக்கூ.
வெளியூரில் தோழன்
ஞாபக வெற்றி
கிட்டிப்புல்லின் தழும்பு
கிரிக்கெட் மோகத்தால் இன்று பாரம்பரியம் மிக்க நமது கிட்டிப்புல் விளையாட்டு
வழக்கொழிந்து போனதையும் சுட்டிக் காட்டுகின்றது.குளிர் பிரதேசத்தில் அணிய
வேண்டிய ஆடைகளை வெப்ப பூமியில் அணிந்து விளையாடும் கிரிக்கெட்டை சாடும்
விதமாகவும் உள்ளது.
நன்றாக வாழ்ந்தவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவது மிகவும் சோகமான ஒன்று. அந்த
உணர்வை வெளிப்படுத்தும் சிறந்த ஹைக்கூ.
கொத்துச்சாவி
கைமாறியது
வீடு விற்பனை
ஏழை ஏழையாகவே இருக்கின்றான். அவன் வாழ்வில் விடியல் ஏற்படவே இல்லை என்பதை
விளக்கும் நுட்பமான ஹைக்கூ.
ஒன்றில் கூட
சேமிக்கவில்லை
உண்டியல் விற்பவன்
பேருந்துகளில் ஆண்கள் கண்ணியமாக நடந்து கொள்ளததால் பெண்களுக்கு நேரும் இன்னலை
விளக்கும் ஹைக்கூ.

கருத்துகள்
கருத்துரையிடுக