ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி

ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி



ஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் தோல்வி
இந்தியா


அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு


தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்


இலஞ்சம் ஒழிப்பவரே
இலஞ்சம் வாங்கி கைது
காவல்துறை


ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்


அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்


நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்


பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்


வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்


போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்


குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்


வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்


கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா


சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்


கருத்துகள்

  1. உங்க‌ள் ப‌டைப்புக‌ள் அனைத்தும் சிந்த‌னைக்குரிய‌து,
    உங்க‌ள் சிந்த‌னை தொட‌ர‌ என் வாழ்த்துக்க‌ள்...!!!

    இப்ப‌டிக்கு,
    சிந்த‌னை இலா - "கிங்மார்டின்"

    பதிலளிநீக்கு
  2. உங்க‌ள் இணைய‌த‌ள‌த்தில் நேர‌ம் த‌வறாக‌ காட்டுகிற‌து. அத‌னை ச‌ரி செய்ய‌வும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக