புதுமனம் புகுவிழா* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.8&disp=inline&realattid=f_gbswj6oh7&zwபுதுமனம் புகுவிழா* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பாப்பனப்பட்டு முருகன்



புதுமனை புகுவிழா அழைப்பிதழ் கேள்விப்பட்டு இருக்கிறோம்.”புதுமனம் புகுவிழா அழைப்பிதழ்” இப்போது தான் கேள்விப்படுகிறோம். நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. உள்ளே உள்ள கவிதைகளும் காதல் ரசம் சொட்டக் சொட்ட இலக்கிய விருந்து வைத்துள்ளார் நூல் ஆசிரியர். பாப்பனப்பட்டு முருகனுக்கு சமுதாய அவலம் சாடவும் தெரியும். காதல் நுட்பம் பாடவும் தெரியும் என நிரூபித்து இருக்கிறார். நூலை மறக்காமல் தனது குரு கொங்குநாட்டு ராசா திரு.கே.பாக்கியராஜ் அவர்களுக்கே காணிக்கையாக்கி இருக்கிறார். மலிவு விலை மது என்றே சொல்லலாம். அந்த மது உடலுக்கு கேடு. இந்த மது உள்ளத்திற்கு இன்பம் தருகின்றது.படிக்கும் வாசகர்களை அவரவர் காதலை அசைபோட வைத்து விடுகின்றன. நூலின் கவிதை வரிகள் அது தான் நூலின் வெற்றி. திரு.சேரனின் ஆட்டோகிராப் திரைப்படம் எப்படி? படம் பார்ப்பவர்களுக்கு அவரவர் காதலின் மலரும் நினைவுகளைத் தோற்றுவித்ததோ அது போல இந்நூலை படிப்பவர்களுக்கு மலரும் நினைவுகளைத் தோற்றுவிக்கின்றது. விரிவுரையாளர் இரா.தமிழரசி அவர்களின் அணிந்துரை நூலிற்கு அணி சேர்க்கின்றது. முத்தாய்ப்பான வரிகளால் நூ�லிற்கு பெருமை சேர்த்து உள்ளார்கள். என்னுரையில் ஆசிரியரின் தன் அடக்கம் நன்கு விளங்குகின்றது. இயக்குநர் திரு.கே.பாக்கியராஜ் குருகுலத்தில் உருவான வித்தகக் கவிஞர் பா.விஜய் போல பாப்பனப்பட்டு முருகன் அவர்களுக்கும் இலக்கிய உலகில் சிறந்த இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உன் இதழ்களைத் தழுவும் திமிர் அதற்கு
மற்ற ஆடைகளை அது மதிப்பதேயில்லையாம்
உன் கைக்குட்டையை கொஞ்சம் அடக்கிவை

காதலன் தன்னை காதலி காதலிக்க ஆரம்பித்தவுடன் கவிதை எழுதத் தொடங்குவது இயல்பு.அப்படி எழுதத் தொடங்கியதும் அவனது கற்பனைக் குதிரையை அவிழ்த்து விடுவான்.அந்தக் குதிரை எப்படி எல்லாம் ஓடும்? என்பதை எடுத்துக்காட்டுகின்றன கவிதைகள்.

உனக்கென்ன வயலைப் பார்த்து விட்டு

திரும்பிவிட்டாய்
வரப்பிடம் சண்டை போடுகிறது வாய்க்கால்
உன் பாதம் படாததால்

உச்ச கட்ட கற்பனை என்பது இதுதானோ? காதலன் பொய் பேசுகிறான் என்பது காதலிக்குத் தெரியும்.இருந்த பொழுதும் அந்தப் பொய்யையும் மிகவும் ரசிப்பாள் காதலி.அதனால் தான் “காதலுக்குப் பொய் அழகு” என்றார்களோ?

நம்மை பெயர் சொல்லி பிறந்தது முதல் பெற்றோர் உறவினர், நண்பர் என பலர் அழைத்து இருப்பார்கள்.ஆனால் காதலி நம் பெயர் சொல்லி அழைக்கும் போது அடையும் இன்பத்திற்கு அளவே இருக்காது இந்த உண்மை அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே விளங்கும் அதனை விளக்கும் அழகிய கவிதை இது.

என் பெயர் எவ்வளவு அழகென்று எனக்குத் தெரிந்தது… எதையோ கேட்டு நீ என்னை அழைத்த போது

காதலில் சில மூடநம்பிக்கைகளும் வந்து விடும் என்பது உண்மை.காதலிக்கும் போது நாம் செய்த குறும்புகள் இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பு வந்து விடும்.

பத்து ரூபாய் கொடுத்து வாங்கினேன்
பஞ்சுமிட்டாய்காரரிடம் நீ கொடுத்த ஒரு ரூபாயை

பிறருக்கு இது வைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். காதலனுக்கு அப்படி அல்ல. இப்படி காதலியின் நினைவாக நினைவுப் பொருட்கள் வைத்து இருப்பவர்களும் உண்டு. எந்தவித நினைவுப் பொருளும் இன்றி “அவள் பற்றிய நினைவை” மட்டும் பொருளாக வைத்திருப்பவர்களும் உண்டு. காதலை அறிவியலோடு இணைத்துப்பார்க்கும் அழகிய கவிதை இதோ!

அன்பே அறிவியல் ஆசிரியர் சொன்ன போது நம்பவில்லை
நீ வந்து தங்கிய போது தான் அறிந்து கொண்டேன்
இதயத்திற்கு அறைகள் உண்டென்பதை

காலம் காலமாக காதல் என்றால் இதயம் என்று பாடி வருகிறோம்.ஆனால் இன்று உலோகத்தில் செயற்கை இதயங்கள் வந்து விட்டன என்பதை கவிஞர்கள் உணரவேண்டும்.

நான் சிலுவை சுமக்காத இயேசு
அதற்குப் பதில் உன் நினைவை சுமந்து

காதல் நினைவுகள் சுகமானவை, சுவையானவை, உயிர் உள்ளவரை மறக்க முடியாதவை, உடல் சார்ந்த காதலை விட, உள்ளம் சார்ந்த காதல் நினைவுகளுக்கு அழிவு என்பது என்றும் இருப்பதில்லை. உடலில் உயிர் உள்ள வரை நீரு பூத்த நெருப்புப்போல் என்றும் இருப்பவை. அந்த உணர்வை வெளிப்படுத்தும் கவிதைகள்,கல்வெட்டு வார்த்தைகள்,கற்கண்டுச்சொற்கள், கனிகளை விஞ்சும் இனிமைமிக்க வரிகள்.

இப்படி நூல் முழுவதும் காதல் கவிதைகள், படிக்க படிக்க இன்பம் பிறக்கின்றது. இளமை துளிர்க்கின்றது, மனம் லேசாகின்றது, மனக்கவலைகள் பறந்தோடுகின்றது.காதல் உலகத்தில் மனம் உலாவருகின்றது. கவிதைகள் அழகு என்று சிலரும் புகைப்படங்கள் அழகு என்று சிலரும் படித்த வாசகர்கள் வழக்காடு மன்றம் தொடங்கிவிட்டனர்.

ஆயிரம் பெண்கள் உள்ள கூட்டத்தில் காதலி எங்கு? இருக்கிறாள் என்பதை காதலன் கண்கள் உடன் கண்டுபிடித்து விடும். அந்த உணர்வை வெளிப்படுத்தும் அழகிய கவிதை இது.

மகளிர் கூட்டத்தில் மற்ற பெண்கள் கவிதையென்றால்
நீ கவிதைத் தலைப்பு

நூலின் கடைசிக் கவிதை இது. ஆனால் பாப்பனப்பட்டு முருகனுக்கு அல்ல. தொய்வின்றி தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி, இலக்கியப்பணி.மலிவு விலையில் உடலுக்குத் தீங்கு தராத மது விற்கும் பணி தொடரட்டும்

கருத்துகள்