கல்வி வள்ளல் கலசலிங்கம் வாழ்க்கை வரலாறு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef5be24a89dcd&attid=0.6&disp=inline&realattid=f_gbulby9j5&zw
கல்வி வள்ளல் கலசலிங்கம் வாழ்க்கை வரலாறு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : எஸ்.எம்.நயினார் பி.காம்.,


உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர் கல்வி வள்ளல் கலசலிங்கம் புகைப்படம் முன் அட்டைப்படத்தை அலங்கரிக்கின்றது. பின் அட்டையில் அவரது குடும்பத்தினர் புகைப்படமும் உள்ளது. ஒரு சிலரின் வரலாற்றைப் படிக்கும் போது நமக்குள் சக்தி பிறக்கும். மண்ணில் பிறந்தோம், இறந்தோம் என சராசரி வாழ்க்கை வாழாமல், பிறந்தோம், சாதித்தோம் என சாதனை வாழ்க்கை வாழத் தூண்டுகோலாக இந்த நூல் உள்ளது. நூலாசிரியர் எஸ்.எம். நயினார் பாராட்டுக்குரியவர். கல்வி வள்ளல் கலசலிங்கம் வாழ்க்கை வரலாறு அறிந்து, உள் வாங்கி, உணர்ந்து எழுதி உள்ளார். நூல் படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்து, இரசாயண மாற்றத்தை நிகழ்த்துகின்றது. அது தான் நூலின் வெற்றி.ள பட்டுக்கோட்டையின் பாடல் வரியான �அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொள்ளும் மனிதர்கள்� அவசியம் படித்துத் திருந்த வேண்டிய அற்புத நூல்.

உழைப்பால் உயர்ந்தவரின் வரலாற்று நூலிற்கு, உழைப்பால் உயர்ந்த டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியாரின் அணிந்துரை மிகப் பொhருத்தமாக உள்ளது. அவரது அணிந்துரையில் உள்ள வைர வரிகள், �நெசவுக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வி கற்க வழியில்லாத நிலையில் சக மாணவர்களிடமே சிலேட்டுக்குச்சி, மிட்டாய் போன்றவற்றை விற்றுச் சிறுகச் சிறுக காசு சேர்த்த சாமர்த்தியம், பின்னாளில் அவரை ஒரு பெரிய தொழிலதிபர் ஆக்கியது. செய்யும் தொழிலோடு நின்று விடாமல் கல்விப் பணியும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால், அவர் பல கல்விக்கூடங்களைத் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வருவதை ஆசிரியர் சுவைபடக் குறிப்பிட்டிருக்கிறார்� அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். 16 தலைப்புகளில் நூலாசிரியர் எழதிய வரலாற்றுக் கட்டுரையை சில வரிகளில் அணிந்துரையில் அழகாக குறிப்பிட்டுள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார். �தூங்கும் போது காண்பதல்ல கனவு, தூங்க விடாமல் செய்வதே கனவு� என்ற அப்துல்கலாமின் வைர வரிகளுக்கு விளக்கம் இந்த நூல்.

நூலாசிரியர் பல நூல்களைத் திரட்டி திரட்டுப் பாலாக சுவைபட எழுதி உள்ளார். நூலாசிரியர் எஸ்.எம். நயினார் புராணங்களைப் படித்து அனுபவம் இருப்பதால் புராணக் கதைகளுடன் நன்கு தொடங்கி உள்ளார். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என முத்தாய்ப்பாக உள்ளது. இராமச்சந்திராபுரம் என்ற சிற்றூரில் பிறந்த கல்வி வள்ளல் கலசலிங்கம், அவர் நினைத்து இருந்தால் கல்வி நிறுவனங்களை சென்னையிலோ மும்பையிலோ தொடங்கி இருக்க முடியும். ஆனால் பிறந்த மண் பாசத்தோடு பிறந்த மண்ணை ஒட்டியுள்ள கிருஷ்ணன் கோயிலில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி அழியாப் புகழை பிறந்த மண்ணிற்கு சேர்த்து உள்ளார். எண்ணிலடங்காத மாணவ, மாணவியரை பொறியாளர்-களாக்கி அனுப்பி வைத்து, நாட்டிற்கும் ஏன் உலகிற்கும் அளப்பரிய பணியை செய்து வருகின்றார். இந்திய முழுமைக்கும் கிருஷ்ணன் கோயில் என்றால் அறியும் அளவிற்கு கல்வி நிறுவனங்கள் புகழ் பெற்று உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் மாமனிதர் அப்துல்கலாமின் பாராட்டைப் பெற்றுள்ள சிறந்த கல்வி நிறுவனத்தின் கல்வி வள்ளல் கலசலிங்கம் வரலாறு இளைய தலைமுறைக்கு பாடமாகும்.

கல்வி வள்ளல் கலசலிங்கம் அவர்கள் வரலாறு படிக்கும் போது, பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நினைவிற்கு வந்தார். அவர் வாழ்க்கைக்காக பல தொழில்கள் புரிந்தவர். வாழ்ந்த காலம் குறைவு, வடித்த பாடல்கள் நிறைவு. கல்வி வள்ளல் கலசலிங்கம் அவர்கள் காய்கறி வியாபாரம், ஐவளிக்கடை, தையற்கடை, வெற்றிலை பாக்குக்கடை, கதர் சங்கத்தில் வேலை, கதர் கூட்டுறவு சங்கத்தில் இருமறை செயலர், மது விலக்கில் ஈடுபாடு, கதர் நூல் பயிற்சி, படிப்பு, வருவாய் துறையில் பணி, வருவாய், ஆய்வாளார் பதவி, இரயில்வேயில் பணி, தபால் துறையில் பணி, ரியல் எஸ்டேட், ஆனந்த் பில்டர்ஸ் நிறுவனம், ஆரம்ப பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்துதல் கலசலிங்கம் ஆனந்தம்மாள் அறநிலையம் தொடங்குவதல் இப்படி இவர் பல்துறை வித்தகராக இருந்த காரணத்தால் தொடங்கிய அனைத்திலும் வெற்றி. காலத்தால் அழியாத கல்வியை வழங்கும் வள்ளல்.

புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.வெ.இறையன்பு இஆப குறிப்பிடுவார்கள். �எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி நிச்சயம்� அது போல இந்த நூலின் நாயகர் கல்வி வள்ளல் கலசலிங்கம் எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டோடு செய்த காரணத்தால் தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல அவர்தம் ஒரே புதல்வர் திரு.ஸ்ரீதரன் அவர்களும் அப்பாவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதாகNவு செயல்பட்டு வருகிறார். பேராசிரியர்களும் பெரும் புகழ் சேர்த்து வருகிறார்கள். முதல்வரும் முத்திரை பதித்து வருகிறார்.

கல்வி வள்ளல் தனது மூன்றாம் வயதிலேயே தாளை இழந்தவர். தாய் இல்லாத பிள்ளை தறி கெட்டுப் போகும். என்று பழமொழி கூட உண்டு. தறி நெய்திடும் குடும்பத்தில் பிறந்து தாயின்றி வளர்ந்து உழைப்பால் உயர்ந்த பெருமகனார். இன்று மிக பிரபலமாக உள்ள யோகாவை அன்றே பயின்றவர். குழந்தைப் பருவத்திலும் வீட்டில் தறி நெசவு நெய்வார். சுதந்திரப் போராட்ட துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகம் என நாட்டுப்பற்றுடன் திகழ்ந்தார். இப்படி அவரது வாழ்வில் நடந்து பல்வேறு சுவையான நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டு வந்து காட்டி வெற்றி பெற்று விடுகிறார் நூலாசிரியர்.

இவர் கால் பதிக்காத துறை இல்லை என்று சொல்லுமளவிற்கு சகல துறை அனுபவம் உள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகள் நிகழச்சி உள்ளார். கிருஷ்ணன் கோயில் ஆனந்த நகரில் பிரம்மாண்டமாக உயர்ந்துள்ள கட்டிடங்களைப் பார்க்கும் போது கல்வி வள்ளல் கலசலிங்கம் அவர்தம் அருமைப் புதல்வர் திரு. ஸ்ரீதரன் அவர்களின் உழைப்பை உணர முடியும். உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்கி வருகின்றனர்.

ஓடிக் கொண்டே இருப்பது தான் நதி. இயங்கிக் கொண்டே இருப்பவன் தான் மனிதன். மூச்சு விடுபவன் மனிதன் அல்ல. முயற்சி செய்பவனே மனிதன். இப்படி பல்வேறு மந்திரச் சொற்களின் விரிவாக்கமாக இந்த நூல் உள்ளது. உழைப்புச் செம்மல், கல்வி வள்ளல் வரலாறு படிக்கும் போது ஒவ்வொரு வாசகர்கள் உள்ளத்திலும் உழைப்பின் மேன்மை விதைக்கப்படுகின்றது. முன்னேற வேண்டும் என்ற வேட்கை உள்ள அனைவருக்கும் இந்த நூலைப் படித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம் இந்த நூல் தனி மனிதன் வரலாறு அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கமான பாடநூல்

கருத்துகள்