"எனது அம்பறாத்தூணியிலிருந்து" நூல் விமர்சனம்- கவிஞர் இரா.இரவி

x.jpg"எனது அம்பறாத்தூணியிலிருந்து" நூல் விமர்சனம்- கவிஞர் இரா.இரவி



நூல் ஆசிரியர் – டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி



அட்டைப்படமே அற்புதமான வடிவமைப்பு. மும்மதத்தையும் குறிப்பிடும் வண்ணம் அதில் இந்து மதத்திற்கு அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் படமும், அருட்பெருஞ்ஜோதியும் மூளையும், இதயமும் நல்ல வடிவமைப்பு. முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் அவ்வை நடராஜன் அணிந்துரை நூலிற்கு மேலும் மெருகூட்டுகின்றன. அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக முனைவர் கி.செம்பியன் அணிந்துரை. கவித்தென்றல் வெங்கடேச பாரதி முத்தாய்ப்பான முத்திரை பதிக்கும் அணிந்துரை நூலாசிரியர் வள்ளல் நேசன், மருத்துவர் ஜெயராஜமூர்த்தியின் என்னுரை என இப்படி நூலை தொடர்ந்து படிக்க வேண்டும் என ஆவலைத் தூண்டுகின்றன.

“திருவெண்காடு ‘ என்ற ஊருக்கு பெயரிலேயே திரு இருந்தாலும் அந்த ஊருக்கு மேலும் திரு சேர்க்கும் வண்ணம் பிறந்த ஊருக்கு புகழ் தேடித் தரும் வண்ணம் திகழ்கின்றார். மருத்துவர் நூல் ஆசிரியர் “திருவெண்காடு” என்று பெயரிலேயே தமிழ்ச் சொல்லின் பெருமையை பறை சாற்றுவதை உணர முடியும். திருவெண்காடு பெருமைகளில் ஒன்றாகிவிட்ட நூலாசிரியர் திருவெண்காடு மக்களோடும் ஒன்றாகி விட்டார். பிறந்த ஊரிலேயே பொது மக்களுக்கு மருத்துவ சேவை செய்து கொண்டு வள்ளலாரின் மனிதநேய போதனைகளைப் பரப்பிக் கொண்டு, கவிதை, கட்டுரை எழுதி தமிழன்னைக்கும் இலக்கிய அணிகலன் ப+ட்டி மகிழ்கின்றார்.

மருத்துவரில் கவிஞர் என்பது மிகவும் அரிது. கடினமான வேலைப் பளுவிற்கு இடையே இவரால் எப்படி? கவிதை எழுத முடிகிறது என வியந்து போகின்றேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதைப் போல இலக்கியத்திலும், ஈடுபாடு கொண்டு மரபு இலக்கணங்களைப் புரிந்து மிகச் சிறப்பாக கவிதை வடித்து இருக்கிறார்கள். மரபுக் கவிதையும் உள்ளது. புதுக்கவிதையும் உள்ளது. இதயம் என்று தொடங்கி உதிரிப்ப+க்கள் என்று முடியும் இந்த கவிதை நூலில் அப்துல்கலாம் வாழ்கிறார். தந்தை பெரியார் நிற்கிறார். ஓவ்வொருவரையும் தனது கவிதை வரிகளால் நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார். அது தான் இந்த நூலின் வெற்றி. முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது கல்வெட்டு வரிகள்.

இதயம்

நெஞ்சமென்னும் மணிக் கூண்டில்
பேட்டரியின்றி இயங்கும் தசை கடிகாரம்

மருத்துவர் என்பதால் இதயம் பற்றி விஞ்ஞானப்ப+ர்வமாக கவிதை வரிகளால் வடித்துள்ளார்.

நூல் முழுவதும் மூட நம்பிக்கைகளைச் சாடி பகுத்தறிவை வலியுறுத்தி மனித நேயத்தை வலியுறுத்தும் வண்ணம் மிகச்சிறப்பான கவிதைகளின் அணிவகுப்பு.

‘வாழ்க அப்துல்கலாம் ” என் கவிதைகளில் உள்ள இரண்டு வரிகள் போதும் மாமனிதர் கலாமின் சிறப்பை உணர்த்த

ஏவகணைகள் பல ஏற்றிவிட்ட எங்கள் கலாம்
தாவு குழந்தை கண்டால் தாவி வந்து கொஞ்சும் கலாம்

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த ஊர்; பற்று வேண்டும். “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா?” என்பார்கள். ஆனால் நூலாசிரியருக்கு அவர் பிறந்த ஊர் தான் சொர்க்கம் என்பதை விளக்கம் அழகிய கவிதை இது.

எனது ஊர்

வண்டுகள் மொய்க்கும் வகையில் மலர்க்கூட்டம்
மண்டுகிற சோலைய+ர் மக்களெல்லாம் -கண்டு மகிழ்
தேரோடும் வீதியிலே தெய்வம் விளங்கிடு நல்
காரோடும் ஊர் திரு வெண் காடு

எளிமை பேணு வன்முறை நீக்கு, அன்பை ஊட்டு, செல்வம் சேர், ஊருக்கு உதவு, புகை உனக்கு பகை இப்படி கவிதையின் தலைப்புகளே அவ்வையின் ஆத்திச்சூடி போல நம்மை சிந்திக்க வைக்கின்றன.

புகை எனக்கு பகை

புகைப்பிடித்தல் நீக்கதுவே புற்றுநோயைச் சேர்க்கும்
புகையாகி உன்னுடலைப் பாழாக்கும் – மானிடா
புற்றுக்குள் தீயவை நீக்கிப் புதுத் தெம்பால்
சிந்தித்து நல்லவற்றைச் செய்

புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் இந்தக் கவிதையை படித்து சிந்தித்து உணர்ந்தால் புகைபிடிப்பதை விட்டு விடுவார்கள் என்பது உண்மை.

மகாகவி பாரதியார் பற்றி “பாவுக்கு அதிபதி” என்ற தலைப்பில் மூன்று மூன்று வரிகளாக ஹைக்கூ போல மிகச்சிறப்பாகப் பாடி உள்ளார்.

எக்காலமும் அழியாத
எண்ணங்களை எழுத்தால்
எக்காளமிட்டவன் வாழ்க

என்று முடிக்கிறார். வரிகளில் தனி முத்திரை பதிக்கிறார். கர்மவீரர் காமராசர் பற்றிய கவிதையில் “பாரத ரத்னா காமராஜர்” என்று தலைப்பிட்டு வரிக்கு வரி காமராஜரை கவிதைச் சிலையாக செதுக்கி உள்ளார்.

பெரியார் மெச்சிய பச்சைத் தமிழர்
சரியாய்த தமிழகம் ஆண்ட முதல்வர்
விரியும் உன் புகழ் விண்ணாய் நிச்சயமே

வள்ளல் நேசரான இவர், அண்ணல் நபிகள் நாயகம் பற்றியும் பாடி உள்ளார்.மருத்துவர் என்பதால் உணவு பற்றி மிகவும் உணர்ந்து எழுதி உள்ளார். மிகச்சிறந்த எழுத்தாளரும் சிந்தனையாளரும், பேச்சாளருமான திரு.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் சொல்வார்கள். இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும் போது எழுந்து விட வேண்டும். வயிறு முட்ட சாப்பிடுவது உடலுக்கு கேடு. என்பார்கள் அதுபோல நூலாசிரியர் கவிஞர் மருத்துவர் வலியுறுத்தும் கருத்து இதோ.

விருந்துக்கே சென்றாலும்
மருந்து போல் உண்பாய்

இந்த இரண்டு வரியை நாம் கடைபிடித்தால் நோய்கள் வராது என்பது உண்மை.வள்ளல் நேசர் பார்வையில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாருங்கள்

பேச்சினிலே இன மானம் என்றும்
மூச்சினிலே தன்மானம் அறிவினிலோ
அவர் கண்ட வானம்

இப்படி மூன்று மூன்று வரிகளாக மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்கள். நூல் முழுவதும் கவிதை வரிகளில் கருத்துக்கள் ஏராளம். ஏதுகை மோனையோ தாராளம். படித்துப் பார்த்தால் நமது உள்ளம் போகுது கொள்ளை. அவர் கொண்ட கொள்ளையை வலியுறுத்தும் கவிதை இதோ.

வள்ளலார் வழி நடப்போம்

சாதி மதம் தவிர்த்தாலே தரணி தன்னில்
சமாதானப் புறாக்கள் பறக்கும் அன்றோ

இந்த இரண்டு வரிகளை சமுதாயம் கடைபிடித்தால் போதும் நாட்டில் அமைதி நிலவும். வன்முறை இருக்காது. மிக உயர்ந்த தத்துவங்களை,கருத்துக்களை மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் பாடி உள்ளார்கள். நூல் முழுவதும் மேற்கோள் காட்டிக் கொண்டே போகலாம் எதைச் சொல்வது. எதை விடுவது என்பது தெரியாத அளவிற்கு அத்தனையும் சொற்களஞ்சியமாக சுவைமிகு பாக்களாக நம்மை பரவசப்படுத்துகின்றன. சிந்திக்க வைக்கின்றன. நெறிப்படுத்துகின்றன முத்தமிழ் அறிஞர் கலைஞரையும் அவர் தம் மாப்பிள்ளை முரசொலி மாறன் பற்றியும் அழகாக பதிவு செய்து உள்ளார்கள். கும்பகோணம் தீ விபத்து. சுனாமியி;ன் கோரத் தாண்டவம் என எல்லாம் பாடி உள்ளார். “உதிரிப்ப+க்கள்” என்ற கவிதையில் அரசியலில் உள்ள அநாகரீகத்தையும் மிக நாகரீகமாக சாடி உள்ளார். நூலைப் படித்து முடித்ததும் வாசகர்கள் மனதில் நல் மாற்றங்கள் நிகழ்கின்றது என்பது உண்மை.

ஐனநாயகத்தின் சுதந்திரம்
பணநாயகத்தில் முடிந்தது
நாடாளுமன்றத்தில் கேள்வி
கேட்கவும் இலஞ்சம்

நடந்த நிகழ்வு நாடு அறியும். சமுதாயத்தை உற்று நோக்குகிறார். கண்ணில் படும் அவலத்தை கண்டிக்கவும் தயங்குவது இல்லை. இவர் உடல் நல மருத்துவர் மட்டுமல்ல மனநல மருத்துவராக கவிதை வரிகளால் விளங்குகின்றார். கவிதை எழுதிடும் ஆற்றல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அத்தி ப+த்தாற்போல் ஒரு சிலருக்கே வாய்க்கின்றது. அதிலும் மருத்துவரில் கவிஞர் என்பது விரல்விட்டு எண்ணி விடலாம். அத்தகைய ஆற்றல் பெற்ற கவிஞர்,நூலாசிரியர், மருத்துவர் மனிதநேயர்,பன்முக ஆற்றலார் திருமிகு ஜெய ராஜமூர்த்தி அவர்கள் தொடர்ந்து எழுதிட வேண்டும். இது போன்ற நல்ல நூல்களைத் தரவேண்டும். படைப்பிலக்கியம் படைக்கும் அரிய ஆற்றலாளருக்கு பல்வேறு பரிசுகளும் விருதுகளும் வழங்கி அரசு ஊக்குவிக்க வேண்டும். தொய்வின்றி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். பாராட்டுக்கள்.

கருத்துகள்