» பகத்சிங் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef5be24a89dcd&attid=0.3&disp=inline&realattid=f_gbulaos02&zw
பகத்சிங் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி


* நூல் ஆசிரியர் : திரு.முத்துராமன்


பகத்சிங் என்ற பேரைக் கேட்டாலே, கேட்டவர்களுக்கு வீரம் பிறக்கும். பகத்சிங்கின் வாழ்க்கைக் காலம் மிகவும் குறிகியது. அவருடைய புகழ் என்பது காலத்தால் அழியாதது. முப்பெரும் வீரனின் வரலாற்றை எளிய தமிழில், எல்லொருக்கும் புரியும் விதத்தில் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் திரு.முத்துராமன். மாவீரன் பகத்சிக் பற்றிய முகத்தான கருத்துக்களை நல்ல நடையில், கையில் நூலை எடுத்தவர்கள் படித்து முடித்து விட்டுத் தான் கீழே வைப்பவர்கள், அந்த அளவிற்கு ஆர்வமாக உள்ளது நூல். அட்டைப் படத்தில் பகத்சிங் படத்தைப் பார்த்தவுடனேயே நூலை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது. மலிவு விலையில் ரூ.25.00-க்கு பிரசுரம் செய்த பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள. இந்த நூலை இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படித்துப் பயன் பெற வேண்டும். விடுதலைக்கான விலையை உணர பேண்டும்.

பகத்சிங்கின் வாழ்வும், மரணமும் சொல்லும் செய்தி ஒன்று தான், “வா, வந்து போராடு”
துடிதுடிப்பும், விறுவிறுப்பும் கொண்ட வீர வரலாறு. நம் நாடு விடுதலையடைந்ததற்கு அகிம்சை வழியில் போரடிய காந்தியடிகள் ஒரு காரணம் என்றால், புரட்சி வீரர்களான நேதாஜி, பகத்சிங் மறு காரணம் என்பதை உணர்த்தும் நூல்.

சுதந்திரம் என்றால் என்ன அப்பா ? என்று பகத்சிங் தனது தந்தை கிஷன்சிங்கிடம் கேட்கும் கேள்வியோடு நூல் தொடங்குகின்றது. மாவீரன் பகத்சிங் 1907-ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் 27 அன்று பிறந்தார் என்று தொடங்கி,1931- ஆம் ஆண்டு மார்ச் 24- ஆம் தேதி தூக்கில் போடுவதாக இருந்தார்கள். மார்ச் 23-ஆம் தேதி மாலை சிறைவாசலில் பெரும் கூட்டம், மாவீரன் பகத்சிங்கையும், தோழர்கள் ராஜகுரு, சுகதேவையும் காண கூடினார்கள் என்ற தகவல் வரை முழுமையாக உணர்ந்து எழுதி உள்ளார்.

மாவீரன் பகத்சிங் அப்பா விடுதலைக்காக போராடுகிறார். சித்தப்பாவை இந்த நாட்டை விட்டே வெளியேற்றி விட்டார்கள். ஒரு சித்தப்பா சிறையிலேயே இறந்து விட்டார். இதனைக் கண்டு உள்ளம் கொதித் பகத்சிங் இந்த ஆதிக்க வெறி பிடித்த ஆங்கிலேயர்களை எப்படியாவது நாம் ஒட ஒட விரட்ட வேண்டும் என்று கோபம் கொப்பளித்தது. டி.ஏ.வி. பள்ளி வாழ்க்கையும் ஒரு வருடம் தான், அதன் பிறகு மீண்டும் உள்ளுரில். ஜாலியன் வாலாபாகில் நடந்த சம்பவம் தான் பகத்சிங்கின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.

ஜாலியன் வாலாபாக் நேரில் ஒரு முறை பார்க்க வேண்டும் போல் இருந்தது பகத்சிங்கிற்கு. கிளம்பி வந்து விட்டார். அந்த மைதானம் அப்போது அமைதியாக இருந்தது. சிறிது தூரம் நடந்தார், காலை மடக்கி உட்கார்ந்தார். கைகளால் மண்ணை அள்ளி தான் கொண்டு வந்திருந்த சீசாவில் நிரப்பிக் கொண்டார்.

இந்திய மண், இந்திய ரத்தம். மண்ணுக்காகச் சிந்தப்பட்ட ரத்தம். அந்த சீசாவை பத்திரமாக ஒரிடத்தில் வைத்தார். மாவீரன் பகத்சிங் உரை மாணவர்கள் மத்தியில் புரட்சிக்கான விதையைத் தூவியது.

புரட்சித் தோழர்கள், சந்திரசேகர ஆசாத் அறிமுகம், கைதாகுதல், பகத்சிங் எழுதிய கட்டுரைகள், மாணவர்கள்-இளைஞர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டக்கியது. லாலாஜியை கொன்றவனை நாம் கொலை செய்ய வேண்டும் என்ற கோபம் வந்தது. சாண்டர்ஸ் என்பதை அறிந்து 1928 டிசம்பர் 17 அன்று திட்டமிட்டு சுட்டு வீழ்த்தினர்.

நீதிமன்றத்தில் நமது கருத்துக்களைச் சொல்ல வேண்டும். நீதிமன்றத்தைப் பிரசார மேடையக்கிக் கொள்ள வேண்டும் என்று பகத்சிங் குழுவினர் திட்டமிட்டது. ஆதிக்கத்திற்கு அடங்காத சிங்கம் பகத்சிங். நான் ஏன் நாத்திகன் ஆனேன்?

“கடவுள் நம்பிக்கை என்பதே ஒரு போதை
போதையால் வரும் மயக்கம், நான்
யதார்த்தமானவன்,
எனது சொந்த அறிவோடும்,பகுத்தறிவோடும் இந்தப் போதை மயக்கத்தை வெல்ல நினைக்கிறேன்.

இந்த வரிகள் நம்மைச் சிந்தக்க வைக்கின்றது.
மாவீரன் பகத்சிங் கடைசிக் கடிதத்தின் வைர வரிகள் இதோ!
“தைரியமாக தூக்குமெடைக்கு போவதே இந்தியத் தாயின் உணர்வுகளைத் தூண்டும். ஒவ்வொரு தாயும் தன்னுடைய பிள்ளை பகத்சிங் போல ஆக வேண்டும் என்று விரும்புவார்கள். நம் நாட்டின் விடுதலைக்காத் தாங்கள் உயிரையும் தியாகம் செய்யத் துடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். ஏகாதிபத்தியத்தால் இந்தப் புரட்சியை எதிர்க்க முடியாது அவர்களால் எந்த வகையிலும் தடுக்க முடியாது “நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்டு போராடிய போராளி பகத்சிங்.

மாவீரன் பகத்சிங் தனது பூத உடல் அழிந்தாலும், புகழ் உடல் அழியாது என்பதை உணர்ந்து இருந்தான். அதனால் தான் கடிதத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் பதிவு செய்துள்ளான். ஏகாதிபத்தியத்தின் ஆயுதங்கள் கண்டு அஞ்சாது, ஆயதம் ஏந்திய வேங்கை பகத்சிங்.

இந்த நூலில் மாவீரன் பகத்சிங்கின் வரலாற்றை மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் நூல் ஆசிரியர் நன்கு பதிவு செய்துள்ளார். பகத்சிங் பற்றிய வைர வரிகள் இதோ.

மாவீரன் பகத்சிங் கடுமையான போராளி தீவிர காலனி ஆதிக்க எதிர்ப்பாளர், விடுதலை வேட்கை கொண்ட உன்னதமான ஜனநாயகவாதி, புரட்சியாளர், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக பகத்சிங் நிகழ்த்திய யுத்தம் அசாத்தியமானது, அபாயகரமானது, துப்பாக்கி சுமந்தவராக மட்டுமே பகத்சிங் இன்று அறியப்படுவது வேதனையானது, மாபெரும் கனவுகளை, வீரியமிக்க சிந்தனைகளை, தெளிவான எதிர்காலத் திட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சோடு சுமந்து திரிந்தவர் பகத்சிங்.

பகத்சிங்கிற்கு மரணமில்லை.பகத்சிங் வழியில் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் வீரர்கள் உள்ளத்தில் எல்லாம் வாழ்கிறார் பகத்சிங். பலர் சொல்ல கேள்விப்பட்ட ஒரு வீரனின் வரலாறை, நூலாகப் படித்து முடித்த பின்பு, நம்முள் ஒரு மாற்றம் நிகழ்கின்றது. இது தான் நூலாசிரியரின் வெற்றி. இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும், பகத்சிங்குக்கு மரணம் இல்லை. பகத்சிங்
போராளிகளுக்கும் மரணம் இல்லை.


கருத்துகள்