யாதுமாகி நின்றாய் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் கலாவிசு
நூலின் அட்டைப்படம் அற்புதம். நகரங்களில் பார்க்க முடியாத குருவிகளை வண்ணத்தில் அச்சிட்டு குழந்தைகளுக்கு குருவியை அறிமுகப்படுத்தும் வண்ணம் சிறப்பான வடிவமைப்பு பின் அட்டையில் நூலாசிரியர் கவிஞர். கலாவிசுவின் வண்ணப்படமும் முன் அட்டையை பார்த்தவுடனே நூலை வாங்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது.
சமுதாயத்திற்கு ஏதாவது சேதி சொல்ல வேண்டும். தன்னம்பிக்கை விதை விதைக்க வேண்டும். அது தான் ஒரு படைப்பாளியின் கடமை. சமுதாய அக்கறையுடன் மிகவும் நுட்பமாக 35 சிறுகதைகள் வடித்துள்ள சகல கலா வல்லவர், கவிஞர் எழுத்தாளர் திருமதி. கலாவிசு பாராட்டுக்குரியவர்.
மிகச்சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், நிர்வாக அதிகாரி டாக்டர் திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப சொல்வார்கள் “மனதில் சோம்பல் இன்றி இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்” என்ற அவரது சொற்களை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கிக் கொண்டே இருக்கும்.ஈடு இணையில்லாத உழைப்பாளி திருமதி. கலாவிசு.
எப்படி இவருக்கு நேரம் கிடைக்கின்றது என்று எல்லோரும் வியந்து போகும் அளவிற்கு செயல்படுபவர் எல்லோருக்கம் உலகில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி கிடைக்கும் ஒரே விசயம் 24 மணி நேரம் தான். அந்த 24 மணி நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துபவர்கள் வெற்றி பெறுகிறார்கள். சாதனை புரிகிறார்கள். திட்டமிட்டு செலவிட்டதால் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நூலில் 35 சிறுகதைகள் அனைத்தும் சிறப்பு முதல் கதையான “கன்னித்தாய்” என்ற சிறுகதை மனித நேயத்தையும், தன்னம்பிக்கையையும் வாசகர் நெஞ்சத்தில் விதைக்கின்றது. இன்று ஊனமுற்றவர்கள் என்ற சொல் மறுக்கப்பட்டு மாற்றுத் திறன் படைத்தவர்கள் என்ற சொல் பரவலாகிவிட்ட காலத்தில் கவிதா என்ற கதாபாத்திரத்தைக் கொண்டு பல அறிவுரைகளை வழங்கி உள்ளார். ஒரு தாய் தன் குழந்தை காய்ச்சல் காரணமாக நடக்க முடியாத அளவிற்கு ஊனப்பட்டதும் வெறுக்கக்கூடாது வெறுத்தாலும் ஒரு போதும் மனம் தளரக்கூடாது தாத்தா தந்த ஊக்கம், தன்னம்பிக்கை, உழைப்பு, “கைத்தொழில் கற்றுக் கொண்டால் கவலை இல்லை ” வாழ்வின் ஆதாரம் கைத்தொழில் நாம்பட்ட கஷ்டம் மற்றும் ஊனமுற்றவர்களும் படக்கூடாது என்று உணர்ந்து கவிதா 40 குழந்தைகளுக்க அடைக்கலம் தந்து மனிதநேயம் துளிர்த்தது முதல்வர் கரங்களால் விருது வாங்கும் அளவிற்கு கவிதாவை உயர்த்தியது. இப்படி பல நல்ல விசயங்களை ஒரு சின்ன சிறு கதையில் சிலை போல் நுட்பமாக வடித்து உள்ளார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஒரு கதையைப் பற்றி சொல்லி உள்ளேன்.35 கதையிலும் வாசகர்களை நெறிப்படுத்தும், செம்மைப்படுத்தும், கூர்மைப்படுத்தும், ஆற்றல்படுத்தும் பல அற்புத கருத்துக்களின் குவியலாக உள்ளது நூல். படித்து முடித்தவுடன் சிந்தையில் மறு மின்னல் ஏற்படுத்துகின்றன.
கதை சொல்லும் விதம், எளிய நடை, நல்ல சொற்கள் இப்படி நூலின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம். சிறுகதை உலகிற்கு சிறந்த எழுத்தாளர் கிடைத்து விட்டார் என்பது உண்மை. ஒரு பக்கக் கதை, கார்டு கதை என ஒரு ஜோக்கை கதை என்று சொல்லும் காலத்தில் உண்மையிலேயே சிறுகதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது. சிறுகதை எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் இந்நூலை வாங்கிப் படியுங்கள். நடை தெரியும் பின் உங்கள் கதைக்கருவை உங்கள் வழியில் கதையாக்கிவிடலாம். இந்நூலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கோ அல்லது கல்லூரி மாணவர்களுக்கோ பாடநூலாக வைக்கலாம். இந்நூலை படிப்பவர்களுக்கு படைப்பாற்றலை வளர்க்கும் ஆற்றல் இந்நூலிற்கு உள்ளது.இது வெறும் புகழ்ச்சி அல்ல படித்துப்பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும் கதையின் தலைப்புகள் அனைத்தும் கவித்துவமாக உள்ளது. கவிஞர் என்பதால் சொற்கள் வந்து விழுகின்றன. “எதிர்பாராமல், நினைத்ததும், நடந்ததும், நட்பே எல்லையாக, தேடத் தேட,” இப்படி தலைப்புகளையே ஆராய்ச்சி செய்யலாம் அந்த அளவிற்கு கதைக்கு பொருத்தமான சிறந்த தலைப்புகள்.
பெண்களின் உணர்வுகளை மன வலிமைகளைப் மிகவும் நுட்பமாக பதிவு செய்துள்ளார். கதை படிப்பது போல தெரியவில்லை காட்சிகளைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அது தான் நூலாசிரியரின் வெற்றி சொற்களின் மூலம் காட்சிப் படுத்துவது ஒரு கலை.
திரைப்படத்திற்கான வசனம் போல உயிர்ப்பான சொல்லாடல். தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி சொற்ச் சிக்கனத்துடன் கதை அல்ல சித்திரம் தீட்டி இருக்கிறார்.
தமிழ் கூறும் நல் உலகம் இந்நூலை நிச்சயம் போற்றிப் பாராட்டும். புதுமையின் முதல்வர், எளிமையின் சின்னம் மாண்புமிகு. ந.ரங்கசாமி தொடங்கி புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் வாழ்த்துரையில் மிகச் சிறப்பாக எடுத்து இயமி இருக்கிறார்கள்.இத்தனை பேரிடம் தோழிகள் உள்பட பலரிடம் வாழ்த்துச் செய்தி பெற்ற பணியே நமக்க வியப்பாகத் தோன்றும் நூலை படியுங்கள், வியப்பது உறுதி.
“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் ஒரு பெண் பின் நிற்கிறாள்” என்பது பழமொழி இந்த நூலாசிரியர் கவிஞர் திருமதி கலாவிசுவின் வெற்றிக்கு அவரது கணவர் துணைவர் முன் நிற்கிறார். இது திருமதி கலாவிசு அவர்களே சொன்ன மொழி. இம்மொழியை ஒவ்வொரு ஆணும் உணர்ந்து மனைவியின் வெற்றிக்கு துணை நிற்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக