நூலின் பெயர் : பொறிகள் , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.16&disp=inline&realattid=f_gbswj6p815&zw
நூலின் பெயர் : பொறிகள் , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

நூல் ஆசிரியர் : கவிஞாட ஜனசிந்தன்


நூலின் அட்டைப்படம் சிறப்பாக சிறப்பாக உள்ளது. பேனாவிலிருந்து மை தான் வரும், ஆனால் பொறிகள் வருவது போல் ஓவியம். நூலிற்கு தீப்பொறிகள் என்று கூட பெயர் வைத்து இருக்கலாம். கவிதை வரிகள் தீப்பொறியாக உள்ளது. சமுதாயத்தின் மூடநம்பிக்கை இருள் போக்கும் ஒளியாக உள்ளது. கவிஞர் ஜனாசிந்தன மதுரையில் இலக்கிய விழாக்களில் தொடர்ந்து கவிதை மழை பொழியும் சிறந்த படைப்பாளி. ஓய்வில்லா உழைப்பாளி. மூட்டா பார்த்த சாரதி அவர்களின் அணிந்துரை முத்தாய்;ப்பாக உள்ளது.


“மதம் ஒரு அபின்” என்றார் லெனின் , அந்தக் கூற்றை மெய்யாக்கும் விதமாகவே இன்று நிகழ்வுகள் நடந்து வருகின்றது. இதோ மதம் பற்றி கவிஞரின் பார்வை


மதம் சிந்தனையை மூடும் கதவு
மதம் பொய்யர்களின் புனித வேதம்
மதம் சுரண்டல்காரனின் புனித வேதம்
மதம் சுரண்டல்காரனின் கேடயம்
மதம் வஞ்சகர்களின் வலை
மதம் மனிதனின் அடிமை சாசனம்
மதம் மனிதனைப் பிரிக்கும் எல்லைக் கோடு


மதத்தின் பெயரால் நடக்கும் மோதல்களையும், வன்முறைகளையும் பார்க்கும் போது மேலே உள்ள கவிதை வரிகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.


நீரின்றி அமையாது உலகு


காவிரியும், கிருஷ்ணாவும், முல்லைப் பெரியாறும்
தமிழன் வீட்டுக்குத் தடையின்றி வர வேண்டும்.


கவிஞரின் இந்தக் கனவு நனவானால் தமிழன் உலகிற்கே சோறு போடுவான். நதி நீர் இணைப்பு என்பது காலத்தின் கட்டாயம். குறைந்தபட்சம் தென் இந்திய நதிகளையாவது இணைத்தால் நாடு செழிக்கும். ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் இதனை உணரவேண்டும். சில கத்துக்குட்டிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன, திருந்த வேண்டும்.


நூலின் நூலாசிரியர் ஜனசிந்தன் தன் பெயருக்கேற்றபடி ஜனங்களின் மனக்குமறலை பறைசாற்றும் விதமாக சாட்டையடிக் கவிகைளை சமரசத்திற்கு இடமின்றி துணிவுடன் படைத்து உள்ளார். பாராட்டுக்கள்.


அமெரிக்க வல்லரசு பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவுதும், தான் தயாரித்த ஆயதங்களை விற்றி பிறர் சண்டையிட்டு மடிய வேண்டும் என்னும் ஆசையில் நடத்தும் முறைகேடுகளை தோலுரிக்கும் விதமான கவிதை இதோ!


அழகும் அழுகலும்


அமெரிக்கா ஒர் அழகிய நகரம்
ஆர் ஆதிக்க மனிதனால் – இன்று
ஆழகிய நகரம்


புஸ்சின் அணுகுமுறையிலிருந்து காந்திய சீடர் எனச் சொல்லும் நோபல் வென்ற ஒபாமாவின் நிலையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. பலமுறை கவனத்திற்கு கொண்டு சென்றும் இலங்கைப் படுகொலையைத் தடுக்கவில்லை, ஈராக்கில் உள்ள படைகளை முழமையாகத் திரும்பப் பெறவும் இல்லை. மனிதநேய ஆர்வலர்களிடம் நன்மதிப்பைப் பெறவில்லை ஒபாமா. இது போன்ற பல சிந்தனை பல சிந்தனைகளை விதைக்கின்றது கவிதை. இனியாவது.


செம்பிடரிகள்


நாங்கள் சிங்கத்தின் செம்பிடரிகள்
காலத்தின் ஞாலம்
வரலாறுகளைப் புரட்டி புரட்சி செய்வோம்


இப்படி துணிவுமிக்க வரிகள் ஏராளம், தாராளம், எது கவிதை என்பதற்கு நூலாசிரியரே விளக்கம் தருகிறார் பாருங்கள்.


ஏது கவிதை!


உணர்வு உசுப்பி, உணர்ச்சி எழுப்பி,
உண்மை சொல்லி,ஓங்கி உரைப்பதே கவிதை!


கவிஞன் என்பவன் நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன், மனதில் பட்டதை துணிவுடன் எடுத்து இயம்புபவனாக இருக்க வேண்டும். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மன்னன் தவறு இழைத்தால், பாடலால்; தட்டிக் கேட்க தயங்குவதே இல்லை. ஆனால் இன்றைக்கு பல கவிஞர்கள் ஆட்சியாளர்களுக்கு லாலி பாடும் கவிஞர்களாக இருப்பது வேதனை. துவறைச் சுட்டிக்காட்டத் தயங்குகின்றனர்.


ஜனசந்தன் போன்ற கவிஞர் பட்டாளம் வீறு கொண்டு எழ வேண்டும். எங்கு அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்கும் தைரியம் வேண்டும். அந்த வகையில் நூல் முழுவதும் கவிஞர் ஜனசிந்தனின் கவிதைகள் தீப்பொறி பறக்கின்றது, சிந்தனை விதைக்கின்றது.


புரட்சி முடிவு


தூக்கு கயிறும், துப்பாக்கியும்
தியாகிகளுக்கு எதிரியல்ல
இறவா வாழ்வுக்கு
இவைகளே மூலதனம்
காந்தியும்,பகத்சிங்கும்
இன்றும் உயிருடன்


மக்களுக்காக சுயநலமின்றி வாழ்ந்த தியாகிகளுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு உண்டு. மக்களின் மனங்களில் என்றும் நிலைத்து வாழ்வார்கள் என்பதை நன்கு பதிவு செய்துள்ளார்.


மூளையின் அழகு


ஆயிரம் ஆண்டுகளாய் அழுக்கும் அழுகும் மனித மூளை
குடவுள் கருத்தாலும் சாதியச் சனியனாலும்,
முனை மழுங்கிய மூளை
மார்க்ஸ் எனும் மாமருந்து சோப்பால் கழுவி
கற்போம் அறிவியலை காணாத கல்வியைக் கண்டெடுப்போம்

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மோதி விழும் மனிதன் பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை. பகுத்தறிவைப் பயன்படுத்தடா என தலையில் கொட்டுவதைப் போல, கொட்டு முரசு போல கவிதை முரசு கொட்டி உள்ளார். குவிஞர் ஜனசிந்தன் அவர்களின் முதல் படைப்பு முத்திரை பதிக்கும் விதமாக வந்துள்ளது. விளாங்குடியில், வாழும் கவிதை விளக்காக ஒளிர்கின்றது. தீப்பொறி பரவட்டும், மூடநம்பிக்கை எனும் குப்பைகளை எரிக்கட்டு

கருத்துகள்