கனவு மெய்ப்பட வேண்டும்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef4be7cdd17a2&attid=0.4&disp=inline&realattid=f_gbukoahd3&zw
கனவு மெய்ப்பட வேண்டும்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
*
நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்

மகாகவி பாரதியின் புதிய சொல்லான கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழைப்பேசும் பொழுது அருவியென

கொட்டுவதால் தான் இவருக்கு தமிழருவிமணியன் என்பது காரணப்பெயராகவே இருக்க
வேண்டும். இவருடைய பேச்சு தெளிந்த நீரோடை போல இருக்கும். சிறந்த பேச்சாளரான
இவருக்கு பாரதிவிருது வழங்கிய காரணத்தால் “பாரதியைப் பற்றி பேசுவதோடு நில்லாமல்
எழுதவும் வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது தான் இந்த நூல்” என்று நூலாசிரியர்
மதுரையில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் குறிப்பிட்டார்கள்.

பாரதி பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள்.
ஆனால் இதில் பெரும்பாலும் பலர் பாரதியின் கவிதை வரிகளை மட்டுமே மேற்கோள் காட்டி
இருக்கின்றனர். ஆனால் இந்த நூலில் பாரதியின் கட்டுரை வரிகளும் பல மேற்கோள்
காட்டி பாரதி வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை விளக்குகின்றார்.

இந்நூலிற்கு ஓவியம் வரைந்த ஓவியர். ம.செ.சிறந்த ஓவியர் அட்டைப்பட ஓவியத்தை மிக
அற்புதமாக வரைந்து இருக்கிறார். நம் கண்முன்னே விவேகானந்தரையும், பாரதியையும்
கொண்டு வந்த விட்ட உயிரோட்டமான ஓவியம். இந்நுõலை பதிப்பித்த
திரு.மை.பா.நாராயணன் பாராட்டுக்குரியவர். பாரதி பற்றிய பரிமாணங்களை இலக்கிய
உலகிற்கு எடுத்துக்காட்டும் இனிய முயற்சிக்கு துணை நின்ற பணி
போற்றுதலக்குரியது.

அரசியல்வாதிகள் பற்றி மக்களிடையே மதிப்பை விட வெறுப்பே அதிகமாகிவரும். இந்த
காலத்தில் விதிவிலக்காக குறிஞ்சிப் பூ போல, அத்திப் பூ போல நேர்மையான விரல்
விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளில் ஒருவர் திரு.தமிழருவிமணியன். அவர்
காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுதிலும், காங்கிரஸ் கட்சியில் தவறு நடந்தால்
சுட்டிக்காட்டத் தயங்காதவர். இன்றைய வெற்றி பெற்ற அரசியல்வாதிகளின்
தகடுதத்தங்களை வெறுப்பவர். காந்தியவழியில் காமராசரால் பாராட்டு பெற்ற நல்ல
அரசியல்வாதியின் அற்புதப்படைப்பு இந்த நூல். அரசியலை விட்டுவிட்டு முழு நேர
இலக்கியவாதியாக இவர் மாறினால் இலக்கியத்தின் உயர்ந்த விருதுகள் இவருக்கு
கிடைக்க வாய்ப்பு ஏற்படும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வைர வரிகளில் மகுடம்
சூட்டி உள்ளார். மகாகவியின் வைர வரிகளுக்கு இவர் போல வேறு யாரும் இப்படி
விளக்கம் சொன்னதில்லை. “சொல்புதிது” எனப் புதிய சொற்களைத் தேடித் தேடி பாடி
தமிழுக்குப் பெருமை சேர்த்ததைப் போல நூலாசிரியர் பாரதியின் வரிகளுக்கு புதிய
பொருளைத் தேடித்தேடி பதிவு செய்து உள்ளார்.

சொல்வேந்தர், நூலாசிரியரின் இனிய நண்பர் திரு.சுகிசிவம் குறிப்பிட்டது போல இந்த
நூலை இவர் எழுதவில்லை. சிற்பி சிலை செதுக்குவது போல சொற்களால் செதுக்கி
இருக்கிறார். இதில் தேவையற்ற சொற்கள் எதுவுமில்லை. கட்டுரையை அழகிய கவிதை போல
வார்த்துத் தந்துள்ளார். கவிதைக்கு உரிய சொற்ச்சிக்கனம் கட்டுரையில் உள்ளது.
இந்த நூலை படித்து முடித்தவுடன் பாரதியைப் பற்றி புரிதல் இல்லாதவர்களுக்கு
புரிதல் உண்டாகும். பாரதியை சாதிக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்தவர்கள்
தங்கள் கருத்தை உடன்மாற்றிக் கொள்வார்கள். அது தான் நூலின் வெற்றி, பாரதியின்
வாழ்வில் நடந்த புரட்சிக்கரமான நிகழ்வுகள் கனகலிங்கத்துப் பூணுõல் அணிவித்தது,
தாழ்த்தப்பட்ட சகோதர்களுக்கு விருந்து அளித்தது, கோவிலில் அவர்களை அனுமதிக்க
வேண்டுமென்ற “கோவில் திருத்தம்” என்ற நோட்டீஸ் எழுதி துணிவுடன் அன்றைய
காலத்திலேயே வெளியிட்டது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நூலாசிரியர் பாரதி
தொடர்பான அனைத்து நூல்களையும் தேடி அலைந்து திரட்டி நமக்கு திரட்டுப்பால்,
இலக்கியப்பால் வழங்கி உள்ளார். நூலைப்படித்து முடித்தால் வாசகரைப் பண்படுத்தும்
உயர்ந்த நூல்

மகாகவி பாரதியின் கொள்கையான உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் சமம். பகிர்ந்து
அளிக்க வேண்டுமென்ற பொதுவுடமைக் கொள்கை, ஆதிக்கத்தை எதிர்ப்பது இப்படி
பாரதியின் நோக்கத்தை, வீரத்தை, வீரியத்தை தன்னம்பிக்கையை, தொலைநோக்கு சிந்தனையை
சுயமரியாதையை, ஆற்றலை, கம்பீரத்தை மிக ஆழகாக படம்பிடித்து காட்டி உள்ளார்.
கவிமன்னராக அறியப்பட்ட மகாகவி பாரதியை கவிச்சக்கரவர்த்தி நிலைக்கு உயர்த்திக்
காட்டி இருக்கிறார். இதுவெறும் நூல் அல்ல கல்வெட்டு, வரலாற்று ஆவணம், இலக்கிய
இன்பம், காலப்பெட்டகம், கருத்துக்களஞ்சியம்

கருத்துகள்