அருநெல்லிக்காய் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

  • era2.jpg
  • அருநெல்லிக்காய் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


    நூல் ஆசிரியர் : திருமதி விஜயலெட்சுமி மாசிலாமணி

  • நூலின் அட்டைப்படமே மிகவும் வித்தியாசமாக உள்ளது.மூன்று தலைமுறை முதுபெறும் எழுத்தாளர் கலைமாமணி விக்கிரமன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் வந்துள்ள சிறுகதை தொகுப்பு நூல்.11 சிறுகதைகளின் தொகுப்பு. சிறுகதை எப்படி ? எழுத வேண்டும் என்று வகுப்பு எடுப்பது போன்ற சிறுகதைகள். பாரதி கண்;ட புதுமைப் பெண்ணாக இலக்கியத் துறையிலும் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை பறைசாற்றும் விதமாக நூல் ஆசிரியர் திருமதி. விஜயலெட்சுமி மாசிலாமணி கதைகளை எழுதி உள்ளார்.

    அருநெல்லிக்காய் சுவைப்பது சுகம், அதன் பின் தண்ணீர் அருந்தினால் தித்திப்பு. அதுபோல, இந்த அருநெல்லிக்காய் நூல் சிறுகதை படிப்பது சுகம், படித்து முடித்த பின் கதைகளை அசை போட்டு பார்ப்பது தித்திப்பு. ஊடகங்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த விட்டக் காலத்திலும் நல்ல நூலைப் படிப்பது சுகம். இதனை நூலை வாசிக்கும் நல்ல பழக்கம் உள்ள அனைவரும் உணர்வார்கள். அருநெல்லிக்காய் அளவில் சிறிதாக இருந்தாலும், சுவைக்க ருசி அதிகம். சிறுகதைகளாக இருந்தாலும் சிந்திக்க வைக்கின்றன. கதை நூலின் பெயரே நன்றாக உள்ளது.

    �ஒரு வாழ்க்கை� என்ற முதல் கதையிலேயே முத்திரை பதிக்கின்றார். பணத்திற்காக உழைக்க வெளிநாடு செல்பவர்களி;ன் துன்பங்கள், அந்த நாட்டின் சட்டதிட்டங்கள், ரஹீம் என்ற சாதாரண உழைப்பாளி, வேலைக்கு சென்ற வெளிநாட்டில் இறந்து விட, அவர் உடல் தாயகம் வருவதில் உள்ள மனப் போராட்டத்தை, ஏழைக் குடும்பம் பொருளாதார கஷ்டம் இருந்தாலும், கடைசியாக அவர் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற மனிதாபிமானத்தை, மனித நேயத்தை நூலாசிரியர் திருமதி.விஜயலட்சுமி மாசிலாமணி நன்கு உணர்த்துகின்றார். நெகிழ்ச்சியான சிறுகதைகளின் அணிவகுப்பு.

    சிறுகதை படிக்கின்றோம் என்பதையே மறந்து, கதையோடு நம் மனசை பயணிக்க வைத்து விடுகிறார், இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. எல்லொரும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய நடை. காட்சிகளைச் சொல்லி, பாத்திரங்களை பேச வைத்து, கதையை நகர்த்தும் நடை பாணி சிறப்பு. பழிக்குப் பழி வாங்கும் வக்கிர எண்ணங்களை, தொலைக்காட்சித் தொடராக எடுத்து, காசு குவிக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மனிதனை நெறிப்படுத்தும், பண்படுத்தும் இதுபோன்ற சிறுகதைகளை ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளாக தயாரித்து வழங்கினால் நாடு நலம் பெறும். நூலாசிரியர் இனி வரும் காலங்களில் ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    சிதம்பர ரகசியமா? என்ற சிறுகதையில் மகனைப் பார்க்க, அமெரிக்க செல்ல, விசா கேட்டு விண்ப்பிக்கும் தாயிடம், நீங்கள் திரும்ப வருவீர்கள் என்பதற்கு என்ன நிச்சியம் என்று கேட்டு விட்டு, விசா தர மறுக்கும் அமெரிக்கனை வசை பாடும் தாயுள்ளம் இன்று நாட்டில் நடக்கும் அவலத்தைத் தோலுரித்தது. சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது தான், ஆனால் இதைத் தவறாக புரிந்து கொண்டு, சட்டம் பேசிய மக்களைத் துன்புறுத்தும் கொடுமைக்கு, எதிராக உரக்க குரல் கொடுத்துள்ளார் கதையில். கதையின் இறுதியில் உள்ள வசனம் உங்கள் பார்வைக்கு!

    தாய் மனம் பிதற்றியது

    ஒரு கணவனைப் பிரி;ந்து வாழ நினைக்காத தமிழ்ப் பெண்ணின் உணர்வும், பெற்ற மகனைப் பல காலம் பிரிய மனமில்லாத தாய்ப்பாசமும், இந்தியப் பண்பாடும், காலச்சாரமும் இந்த அமெரிக்கனுக்கு எங்கே புரியப் போகிறது ? போங்கடா நீங்களும் உங்க ரூல்ஸ்ஸீம், ஒரு பெண்ணாக பிறவி எடுங்கடா ! அதுவும் ஒரு இந்தியத் தாயாகப் பிறவி எடுங்கடா ! அப்போது தான் உங்களுக்கு பெண்ணின் பெருமைன்னா என்ன? தாய்ப்பாசம்னா என்னன்னு புரியும்.� என தாய் மனம் புலம்பியது.

    மனிதாபிமானமற்ற மனிதர்களைக் கதையில் நன்கு சாடுகின்றார். இயந்திரமயமான உலகில் மனிதனும் இயந்திரமாகி விடுகின்றான். மனிதநேயம் மறைந்து வருகின்றது. தமிழ்ப்பண்பாட்டை, தாய்ப்பாசத்தைப் புரிந்து கொள்ளாமல், விசா தர மறுக்கும் அமெரிக்கனின் கன்னத்தில் அறையும் வண்ணம் கதை வகுத்துள்ளார். பானை சோற்றுக்கு பதச் சோறாக இரு கதை பற்றி மட்டும் எழுதி உள்ளேன். நூலாசிரியர் ஏற்கனவே பல கதைகள் எழுதிய நல்ல அனுபவம் இருப்பதாலும், தான் பார்த்து உணர்ந்த நண்பர்களின் மூலம் அறிந்த விஷயங்களை கதையின் கருவாக வைத்துக் கொண்டு முத்தாய்ப்பாக முடிக்கின்றார்.

    நூலாசிhயர் தமிழகத்தின் தலைநகரம் சென்னையில், அரசு அலுவலராகப் பணிபுரிந்துள்ளார். அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வந்த அனுபவங்களையே கதையாக்கி இருக்கிறார். கதையில் கற்பனையே விட உண்மை கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து இருப்பதால், கதை படிக்கும் வாசகர்களின் மனதில் நிற்கின்றது.

    சவுதியில் தற்போது வாழ்ந்தாலும், தமிழ் மண்ணின் மனம் மாறாமல், நல்ல பல படைப்புகளை வழங்கி வருகிறார். புலம் பெயர்ந்த தமிழர்கள் என்றால் பெரும்பாலும் ஈழத் தமிழர்-களையே குறிக்கும். வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும், தமிழை மறக்காமல் இலக்கியத் தொண்டு செய்து வருகின்றனர் என்பது உலகு அறிந்த உண்மை. அந்த வரிசையில் நூலாசிரியர் திருமதி.விஜயலெட்சுமி மாசிலாமணி, சென்னையில் இருந்து சவுதிக்கு புலம் பெயர்ந்த தமிழராக, மண் மனம் மாறாமல் படைத்து வருகின்றார். பாராட்டுக்கள். அடுத்த பதிப்பில் கதைகளுக்கான ஓவியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கருத்துகள்