தன்னம்பிக்கை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : திரு. விமலநாத்
கண்ணதாசன் பதிப்பகத்தின் தரமான வெளீடு. அட்டைப்படமே பார்த்ததும் தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது. நூல் ஆசிரியர் விமலநாத் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். ” தன்னம்பிக்கை நிரம்பியவன் தரணி ஆள முடியும்” என்பது பழமொழி என்ற வரியோடு தொடங்கி, ஒரு மனிதன் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பதை விளக்கமாக உணர்த்தும் நூல். பல்வேறு உதாரணங்களுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விளக்கி, தாழ்வு மனப்பான்மை தகர்த்து, தன்னம்பிக்கை விதைக்கும் நூல். கூச்சம், அச்சம் தவிர்க்க வேண்டியது என்பதை விளக்கி உள்ளார்.
“கூச்சமுள்ளவனிடம் நீங்கள் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்கும் பொழுது அவன் அறிவுக் கூர்மையுடையவனாக இருந்தும் கூட பதிலளிக்காமல் ஊமையாகி விடுவதைக் காணலாம்.” எனவே கூச்சம் என்பது நமது வெற்றிக்கு சாதனைக்கு மிகப்பெரிய தடையாக அமைந்துவிடும் என்பதை சிறப்பாக விளக்கி உள்ளார். கூச்சம் பலவகை உண்டு. அவையாவன, மேடைக் கூச்சம், பால் இனக் கூச்சம், பொய்க் கூச்சம், தற்காலிக கூச்சம் இவற்றை விளக்கிக் கூறி ஆலோசனையும் வழங்கி உள்ளார்.
பாராட்டு என்பது மிகவும் அவசியம், பாராட்டு பற்றி நூலாசிரியர் கருத்து இதோ!”பாராட்டு என்பது மிகச் சக்தி வாய்ந்த ஊக்குவிப்பான்” என்பதை நாம் நன்கு அறிவோம். மனிதன் தனது வீட்டில் பெற்றோரின் பாராட்டுதலை விரும்புகிறான். தன் மனைவியும், குழந்தைகளும் தன்னைப் பாராட்ட வேண்டும் என ஆசைப்படுகிறான். ஒவ்வொருவரும் தனது சுற்றத்தார்கள், நண்பர்கள், மேலதிகாரிகள் சமூகத்தினர் அனைவரும் தன்னைப் பாராட்ட வேண்டுமென ஆசைப்படுகின்றனர்.இதுஇயற்கை.
பறரை பாராட்டுவதில் கஞ்சத்தனம் தேவையில்லை நமக்கு வார்த்தை தான் செலவு. பணம் செலவாவதில்லை. எனவே மனைவியும் மனம் திறந்து பாராட்டினால் உளவியல் ரீதியாக நல்ல பலனைத்தரும் என்பதை நூலில் நன்கு விளக்கி உள்ளார்.
தன்னம்பிக்கை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு, பிறருடன் பேசும் பொழுது, அவரது கண்களை நேருக்கு சேர் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விரிவாக விளக்கம் உள்ளது.கூச்சமுடையவர்கள் சிலவற்றைத் தவிர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவை,
சிறிய விஷயங்களை மனதில் பெரிதாக்கிக் கொள்வது
நினைத்தவுடன் செயல் புரிவது, சிறு சப்தத்தை கேட்க இயலாமல்குதிப்பது
விரைவில் குற்ற உணர்வு கொள்வது அல்லது மனக் கலக்கம் அடைவது
எளிதில்கோபமடைவது
மனஎழுச்சியடைவது
பொறுமையின்மை
அனைத்தையும் மேலெழுந்த வாரியாக நோக்குவது
இப்படி பட்டியலிட்டு இவற்றைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை நூல் ஆசிரியர் அறிவியல் பூர்வமாக விளக்கி உள்ளார். எளிமையான உதாரணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துக்கின்றன.
இறுதியாகக் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதனை மாற்ற என்ன வழி என்பதற்கு தீர்வும் கூறி உள்ளது நூலின் சிறப்பம்சம்.
தீவிரமான விஷயங்களை மாத்திரம் தீவிரமாக எண்ணுவது
அமைதியுடன் யோசித்து செயலாற்றுவது.
அனைத்துச் சூழ்நிலையிலும் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது.
பிறர் தனக்குத் தீங்கு விளைவிப்பவர் அல்லர் என உணர்ந்து கொள்வது.
எப்பொழுதும் அமைதியுடன் இருப்பது.இருப்பது. பணியை மகிழ்வுடன் ஏற்று செயலாற்றுவது.
இது என்னால் முடியும்? என்று மலைக்காதீர்கள், முடியவில்லை என்றால் இயல்பாக அதை ஒதுக்கி விடுங்கள்.
இது கூட நான் செய்ய லாயக்கற்றவனா? என்று எண்ணிக் குமையாதீர்கள். அது தான் தாழ்வு மனப்பான்மையை குற்ற உணர்வை மனதில் உருவக்கும்.
இப்படி பல விதமான பயனுள்ள தகவல்களுடன் இந்நூல் உள்ளது. படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி நூல் இல்லை. நமக்குள் தன்னம்பிக்கை என்ற சக்தி குறைவது போல, உணரும் நேரங்களில் எல்லாம் படித்துப் பார்த்து தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்ள உதவும் நூல், படித்து பாருங்கள், நீங்களும் உணர்வீர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக