நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகலைவன்
ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
அட்டைப்படமே அற்புதமாக உள்ளது. ஊனமுற்றவர்களின் எழுச்சிக்காக பாடுபடும் திரு.சிதம்பரநாதன், எளிமையின் சின்னமாகத்திகழும், மதுரையின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும் எழுத்தாளர் திரு.கர்ணன் புகைப்படங்கள் நூலின் அட்டைப்படத்தை அலங்கரிக்கின்றது.பின் அட்டையில் மதுரையில் ஊனமுற்றவர்களின் உயர்வுக்காக உழைக்கும் அமுதசாந்தி முதல் மரண காணா விஜய் வரை எட்டு பேரின் புகைப்படமும் சிறப்பாக உள்ளது.
நல்ல வடிவமைப்பு குடத்து விளக்காக இருந்த ஊனமுற்ற சாதனையாளர்கள் 10 பேரை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட செய்திடும் முயற்சியில் நூல் ஆசிரியர்
கவிஞர் ஏகலைவன் வெற்றி பெற்றுள்ளார். நூலாசிரியர் புகைப்படம் நூலின் அட்டையில் இல்லை. வருங்காலங்களில் வெளியிடும் நூல்களில் நூல் ஆசிரியர்
புகைப்படமும் இடம் பெறட்டும். ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற வேட்கை உள்ள 10 நபர்களின் சாதனைகளைப் படம்பிடித்து காட்டி உள்ளார்.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்து இருப்பது சிறப்பு. கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுங்கள், சாதனை நிகழ்த்துங்கள் எனப்புகட்டிய நல்லவர். அவரிடம் நீங்கள் வாழ்வில் மகிழ்ச்சியடைந்த நேரம் எது? என்று கேட்ட போது “ஊனமுற்ற சகோதரர்களுக்கு மிகவும் குறைந்த எடையில் செயற்கைக்கால்கள் கண்டுபிடிக்கப்பட்ட நேரம்” என்று சொன்னார். அத்தகைய மனிதநேயம் மிக்க அற்புத மனிதர் அப்துல்கலாமிற்கு நூலை சமர்ப்பணம் செய்தது.
நூலாசிரியர் கவிஞர் ஏகலைவனின் கலாம் பற்று புலனாகின்றது.புதுமையின் முதல்வர் திரு.ந.ரங்கசாமி, சேலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன், அமர்சேவா சங்கம் திரு.எஸ்.இராமகிருஷ்ணன், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு, நடமாடும் தகவல் களஞ்சியம் தென்கச்சி கோ.சுவாமிநாதன் ஆகியோரின் அணிந்துரையும், வாழ்த்துரையும் நூõலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. நூலாசிரியரின் திறமையை பறை சாற்றுகின்றன.
நூலாசிரியர் என்னுரையில் நூலின் நோக்கத்தை முத்தாய்ப்பாக பதிவு செய்துள்ளார். இரு கைககள், இரு கால்கள் நன்றாக உள்ள மனிதர்கள் கூட வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு, சோர்ந்து விடுகின்றனர். ஆனால் நூலாசிரியர் தொடர் வண்டி விபத்தில், ஒரு கால், ஒரு விரல் இழந்த போதும் ஊனத்தை பொருட்படுத்தாமல் மனதில் தைரியத்தை, தன்னம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு இவர் வசிப்பது சேலத்தில். ஆனால் எழுத்தாளர் கர்ணன், அமுதசாந்தி வசிப்பது மதுரையில். இப்படி பத்து ஊனமுற்ற சாதனையாளர்களும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்த போதும் அவர்களின் சாதனையை பற்றி அறிந்த தேடிச் சென்று பேட்டி எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார். நூலாசிரியரின் தன்னலமற்ற தொண்டு பாராட்டுக்குரியது. இயந்திரமயமான இன்றைய உலகில் சராசரி மனிதர்கள் எல்லாம் இயந்திரமாகவே மாறிவிட்டனர். தன்வீடு, தன் குடும்பம், தன் தொலைக்காட்சி எனச் சுருங்கி விட்டனர்.
பொதுநலனில் விருப்பம் இல்லை. மனிதநேயம் இல்லை.ஆனால் நூலாசிரியர் மனித நேயத்துடன் தான் ஊனமுற்று இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது ஓடி ஓடி உழைத்த உழைப்பின் வெளிப்பாடு இந்நூல். என் இனிய நண்பர் வித்தகக்கவிஞர் பா.விஜய் சொல்வார்கள் “அவமானங்களை சேகரித்து வையுங்கள் அது முன்னோக்கி செல்வதற்கான சக்கரம்” என்று ஆம் அவமானப்படுத்தியவர்களை மறக்காமல் போய் கத்தியால் குத்துவதோ! வெட்டுவதோ! அல்ல “உன்னால் இது முடியாது” “உனக்கு எதற்கு? இந்த வேலை” அவமானப்படுத்தியவர்களின் முன், என்னால் முடியும் எதையும் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்து வெற்றி பெற வேண்டும். அவமானங்கள் நமக்கு உந்து சக்தியாக இருப்பதை உணர முடியும். பத்து பேரின் பேட்டியை படிக்கும் போது நமக்கு. ஊனத்தை உதாசினப்படுத்தி விட்டு இலட்சியத்தை இலட்சியம் செய்து உழைத்து வெற்றி பெற்றதை உணர முடிகின்றது.
பத்து முத்துக்களைக் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார். பத்து சாதனையாளர்களில் மதுரை சாதனையாளர்கள் இருவரை நான் நன்கு அறிவேன். இந்நூல் படிக்கும் வாசகர்களுக்கு டானிக், உரம், படிக்கும் வாசகர் ஊனமுற்றவராக இருந்தால் அவரது மனக்காயத்திற்கு மருந்தாக இருக்கும் இந்நூல். ஊனமுற்றவர்களாக இருந்தால் நாம் ஏன்?சாதனை செய்யக்கூடாது வாழ்ந்த வாழ்க்கைக்கு சுவடு பதிக்க வேண்டுமென்ற உத்வேகத்தை தரும் உன்னத நூல். நூலின் கடைசி பக்கங்களில் ஊனமுற்றவர்களுக்கு உதவிடும் அமைப்புகளின் முகவரிகள் தகவல் களஞ்சியம்

கருத்துகள்
கருத்துரையிடுக