துளிப்பா வித்து புதுச்சேரி * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.12&disp=inline&realattid=f_gbswj6ou11&zwதுளிப்பா வித்து புதுச்சேரி * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் புதுவைத் தமிழ் நெஞ்சன்

நூலின் முகப்பை அட்டையே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் விதமாக
அழகிய வடிவமைப்பு பின் அட்டையில் நூல் ஆசிரியர் கவிஞர் புதுவைத் தமிழ் நெஞ்சன்
அவர்களின் புகைப்படம் அலங்கரிக்கின்றது. வளரும் படைப்பாளிகள் ஒவ்வொரு நூல்
வெளியிடும் போது சில ஆயிரங்களை இழந்து, குடும்பத்தில் ஏச்சுப் பேச்சு
வாங்கித்தான் எதிர் நீச்சலாக நூல் வெளியிட்டு வருகின்றனர். நூல் அச்சிட்டத்
தொகை ஆயிரங்களாக நூல் விற்பனையாகி வருவதே இல்லை.சில நூல்கள் இலவசமாக வழங்கி
விடுவார்கள். சிலநூல்கள் விற்பனையாகி சில நூறு மட்டுமே வரவாகும். வரும் சில
நூறும் செலவாகி விடும். ஆயிரமாகச் சேராது. இப்படிப்பட்ட நிலையிலும் தொடர்ந்து
நூல் வெளியிடுவது ஒரு போராட்டம். நூல் ஆசிரியர் தொய்வின்றி நூல்கள்
வெளியிடுவதில் சாதனைப் படைத்துள்ளார் என்றால் மிகையன்று.

நேர்த்தியான அச்சு துளிப்பா (ஹைக்கூ) பற்றி அறிய விரும்புவார்கள் அவசியம்
படிக்க வேண்டிய அற்புத நூல். நூலாசிரியர் ஒரு பகுத்தறிவு வாதி, இன உணர்வு
மிக்கவர் சொல்ல வரும் கருத்தை நறுக் சுறுக் என வெட்டு ஒன்று, துண்டு இரண்டு
எனச் சொல்பவர் துளிப்பா பற்றிய கட்டுரைகள், துளிப்பா வினா விடைகள், துளிப்பா,
நூலிற்கான ஆய்வுரைகள், மதிப்புரைகள், அணிந்துரைகள் ஆகியவற்றை தொகுத்து நுலை
ஆவணப்படுத்தி உள்ளார். மறக்காமல் துளிப்பா கவிஞர்களுக்கு நன்றியைப் பதிவு
செய்து உள்ளார். எழுத்தாளன் என்பதற்கு நூல் ஆசிரியர் தரும் விளக்கத்தை
எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்பவர்கள் அவசியம் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

“உயிர் நேயத்தோடு இயங்குகின்றவனே உண்மையான எழுத்தாளன். எழுத்தை ஆளக் கற்றுக்
கொள்ள வேண்டும்.எழுத்தாளன் என்று போட்டுக் கொள்பவன். எல்லாம் எழுத்தாளன் ஆகான்.
எழுத்திற்கும் செயலுக்கும் தொடாபிருக்க வேண்டும் எழுதுவது மட்டும் தான்
எழுத்தாளர் வேலை என்றால் எழுத வேண்டாம்” இப்படி மகாகவி எப்படி? எழுத்துக்கும்
செயலுக்கும் வேற்றுமையின்றி வாழ்ந்து புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தாரோ? அது
போல நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை தமிழ்நெஞ்சன் தனது பெயரிலேயே பிறந்த மண்ணையும்
தாங்கி, புதுவையின் பெருமைகளால் ஒன்றாகத் திகழ்பவர். முதலில் நல்ல மனிதர்
பிறகுதான் நல்ல படைப்பாளி, இனிமையான மனிதரின் அற்புதமாக படைப்பு இது. துளிப்பா
வரலாற்றில் இவருக்கு தனி இடம் உண்டு பட்டிமன்றங்களிலும். தொலைக்காட்சிகளிலும்,
பட்டிதொட்டிகளிலும் முழங்கிய புகழ்பெற்ற ஹைக்கூ. இதை எழுதியவர் புதுவை தமிழ்
நெஞ்சன் என்பது பெருமைக்குரியது.

கொடி கொடுத்தீர்
குண்டூசி தந்தீர்
சட்டை?

அய்ந்து சொற்களில் அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி தருகின்றனர். இன்னும் ஏழ்மை
ஒழிக்கப்படவில்லை என்பதற்கு அன்று எழுதிய ஹைக்கூ இன்றும் பொருந்தும் விதமாக
உள்ளது.

எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
சன் டிவி

தமிழ் மாலை என்று சொல்லிக் கொண்டு நிறுவனத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைத்துக்
கொண்டு நாளும் தமிழ்க் கொலை புரிவதை மிகச்சிறப்பாக விளங்குகின்றது இந்த ஹைக்கூ

ஹைக்கூ எனக்கும் பிடிக்கும் அதன் காரணம் என்ன? என்பதை நூல் ஆசிரியர்
விளக்குகின்றார் பாருங்கள்.

“ஹைக்கூவின் வடிவம், எளிமை அதனின் உத்தி, ஆளுமை, கருத்தாக்கம், செறிவு,
சொல்லும் முறைமை நெறி அதனின் இலக்கு” இப்படி பல காரணங்களைச் சொல்லி ஹைக்கூ
புலப்படுகின்றது, ஹைக்கூ என்று சொல்லாட்சி ஐப்பானிய மொழியிலிருந்து
பெறப்பட்டது. அதன் காரணமாகவே ஹைக்கூ என்று சொல்லாமல் துளிப்பா என்றும் ஐக்கூ
என்றும் எழுதி வருபவர் நூலாசிரியர் தமிழ்ப்பற்றுமிக்கவர் இவரது படைப்புகளில்
பகுத்தறிவு கருத்துக்கள் இருக்கும். மூட நம்பிக்கைகளைத தகர்க்கும், பிறமொழிச்
சொற்களை பயன்படுத்தாத தமிழ் பற்றாளர்.

ஐப்பானிய ஹைக்கூ கவிதையின் முன்னோடிகளாக மட்சுவோ பாஷோ, யோசாபூசன், இசா, ஷிகி
பற்றிய விளக்கம் இந்நூலில் உள்ளது. ஹைக்கூ கவிதைகளை ஆய்வு செய்யும்
ஆய்வாளர்களுக்கு இந்த நூல் மிகப்பெரிய வழிகாட்டியாக அமையும். ஹைக்கூ பற்றிய
நூல்கள் பல வந்துள்ளன. இந்நூல் ஹைக்கூ பற்றிய முழுமையான புரிதலை வாசர்களுக்கு
உணர்த்துகின்றது. நூல் ஆசிரியர் இந்நூலை தொகுப்பதற்கு பட்ட சிரமத்தை உணர
முடியும்.

ஹைக்கூப்பற்றி தவறாக விமர்சனம் செய்யும் குறைமதியினர் இந்த நூலைப்படித்தால்
தங்கள் கருத்தை மாற்றிக் கொளவ்து உண்மை. அந்த அளவிற்கு நுட்பமான பதிவு. நான்
வாசித்த ஹைக்கூ நூல்களில் இது முழுமையானது.

நூலாசிரியர் வளர்ந்து வரும் ஹைக்கூ கவிஞர்கள் பலருக்கு இல்லை என்றால்,
சொல்லாமல் இன்முகத்துடன் அணிந்துரை தந்து உதவுபவர். “விற்பனைக்கு புத்தன்” என்ற
நூலிற்கு கவிஞர் ஞானசேகரனுக்கு அணிந்துரை தந்தை அந்த நூலில் படித்து வியந்தவன்.

இந்தி பேசினால் இந்தியன்
ஆங்கிலம் பேசினால்
அறிக அவன் தமிழன்

சீனு தமிழ்மணி ஹைக்கூ இந்நூலில் படித்ததும் தமிழன் தமிழனுடன் பேசும் போது கூட
அரைகுறை ஆங்கிலத்தில் பேசித்திரியும் அவலத்தை தோலுரித்தும் அழகிய ஹைக்கூ

சாதியை கற்பித்து மனித இனத்தை பிரித்து மனித நேயத்தை மழுங்கடித்த சதிகாரர்களைச்
சவுக்கால் அடிக்கும் பல ஹைக்கூ இந்நூல் முழுவதும் நிறைந்து உள்ளது.

தொட்டால் பார்த்தால் அண்டினால்
தீட்டு தீட்டு தீட்டு
தீட்டு கத்தியை

தீட்டு கத்தியை என்ற வரிகள் மூலம் புத்தியை தீட்டுகிறார். தீண்டாமை அவலத்தை
வேரறுக்கும் பல ஹைக்கூகள் உள்ளது. மொத்தத்தில் ஹைக்கூ பற்றி அறிய வேண்டிய
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதநூல்.

கருத்துகள்