நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef55a39a7cdde&attid=0.1&disp=inline&realattid=f_gbul22vt0&zw
நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

நூல் ஆசிரியர் : அ. இலக்கியராஜா

அட்டைப்பட புகைப்படத்தைப் பார்த்தவுடன் நம் மனம் இயற்கை வளம் நிறைந்த கேரளாவிற்கு சென்று விடுகின்றது. �நிலை� என்ற தலைப்பில் ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைர வரிகள் ஒவ்வொரு படைப்பாளியும் உணர வேண்டியது.

விஷ விதையை தடுக்கும் தார்மீகப் பொறுப்பு
ஒவ்வொரு நல்ல படைப்பாளிக்கும் உண்டு

ஐப்பானிய ஹைக்கூ-விற்கு சில இலக்கணம் உண்டு. அது போல அழகியலை மிக அழகாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் அ.இலக்கியராஜா இலக்கிய ராஜா என்பது இயற்பெயரா? புனைப் பெயரா? என்பது தெரியவில்லை. ஆனால் காரணப் பெயர் என்றே சொல்லலாம். இலக்கியம் என்றால் என்னவென்று உணர்ந்து இலக்கிய விருந்து படைத்துள்ளார். பல கவிதைகள் மூன்று வரி ஹைக்கூவாக உள்ளது. சில கவிதைகள் கூடுதல் வரிகளில் உள்ளது. அவற்றையும் ஹைக்கூ வடிவில் மூன்று வரியாக செதுக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சும்மா கிடந்த கல்
உளி செய்த வேலை
சும்மா இல்லை மனிதர்கள்

பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் �சும்மா� என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். சும்மா என்ற சொல்லை தமிழன் பல இடங்களில் பல பொருட்களில் சும்மா சும்மா பயன்படுத்தி வருவது உண்மை. கவிஞரும் அதனை உணர்ந்து பொருள்பட கவிதை வகுத்துள்ளார். கவிதைக்கு பொய் அழகு, கவிஞனுக்கு கற்பனை அழகு என்பதை மெய்ப்பிக்கும் கவிதை இதோ!

புளியோதரை
கற்கண்டு பொங்கலாய்
உன் கை பட்டதால்

உண்மை தான்! காதலியின் கரம் பட்டதும் காரமான புளியோதரையும் இனிப்பான பொங்கலாக மாறும் என்பது காதலித்தவர்களுக்கே இது புரியும்.

எள்ளல் சுவையும் நிறைய உள்ளது. இந்நூலில் இதோ!

ஏழு கடல், ஏழு மலை, ஏழு உலகம்
கதை சொல்லி கூட்டிச் சென்ற பாட்டி
வெளிய+ர் போனதில்லை இது வரை

ஒரு கவிதைக்கு எடுப்பு, தொடுப்பு, முடிப்பு மூன்றும் முக்கியம் மூன்றும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. முத்திரை பதிக்கும் முடிப்பு நல்ல படைப்பாளி என்பதை பறைசாற்றுகின்றது.

படைப்பாளி ஒவ்வொருவருக்கும் தனது படைப்பை நூலாக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் புதிய படைப்பாளிகளின் படைப்பை வரவேற்கும் நிலை இன்றைய வாசகர்களுக்கு இல்லை என்பது உண்மை. நூலாக்கும் முயற்சிக்கு உறவுகள் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பு. அதனை அழகாக விளக்கும் கவிதை இதோ!

ஓன்றுமில்லை

ஏழுதிய சில கவிதைகளை புத்தகமாய்ப் போட்டேன்
அங்கலாய்க்கிறாள் ஆத்துக்காரி
எல்லோரும் ஒண்ணுமில்லாததை காசாக்குகிறார்கள்
நீங்கள் காசை ஒண்ணும் இல்லாமல் ஆக்குகிறீர்களே!

வளரும் படைப்பாளிகள் இது போன்ற பல அவமானங்களை சந்தித்துப் போராடித் தான் படைப்பை நூலாக்க வேண்டி உள்ளது. வாசகர்களும் பிரபலமானவர்களின் நூல்கள் மட்டுமே விரும்பி வாங்குவது, வளரும் புதிய படைப்பாளிகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் தேக்க நிலை மாற வேண்டும்.

ஊர் கூட தேர் இழுத்து
நாலு பேர் பேசி வம்பு வலுத்தது
நட்ட நடு வீதியில் தேர்

இன்றைக்கு தேர்த்திருவிழா என்ற பெயரில் நடக்கும் சண்டை சச்சரவுகளை விளக்குகின்றது.

தேரும் வேண்டாம்
கலவரமும் வேண்டாம்
அம்மன் வேண்டியது

என்ற என் ஹைக்கூ நினைவிற்கு வந்தது

பழம் ஒன்று தான்
குடும்பம் இரண்டானது
ஞானம்?

எள்ளல் சுவை மிக்க கவிதைகள் ஏராளம், தாராளம் பல்வேறு தலைப்புகளில் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். உள்ளத்து உணர்வுகளை கவிதை வரிகளில் வடித்து உள்ளார்.

புதுக்கவிதை,ஹைக்கூ கவிதை என பல்சுவைக் கவிதைகள் உள்ளது. �நிலை� என்ற இந்தக் கவிதை நூலைப் படித்து முடித்ததும் நூலாசிரியர் அ.இலக்கிய ராஜா நம் மனத்தில் நிலைபெற்று விடுகிறார் என்பது உண்மை. படித்துப் பார்த்தால் நீங்களும் உணருவீர்கள். என்ன வளம் இல்ல நம் தமிழ்நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் பிற மொழியில் என்பதை பறைசாற்றும் விதமாக பிறமொழிச் சொற்கள் கலப்பு இன்றி முடிந்தளவிற்கு நல்ல தமிழில் நல்ல கவிதைகள் படைத்துள்ளார். பாராட்டுக்கள் இந்நூலை வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள்.

கருத்துகள்