உறவில் சலனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef61e03e504ab&attid=0.1&disp=inline&realattid=f_gbulk6bd0&zw


உறவில் சலனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : திரு. எக்ஸ்.பி.ஒய்ட்


ஊடகங்களின் தாக்கத்தால்,உலகமயத்தால்,பண்பாட்டுச் சீரழிவால் இன்று நீதிமன்றங்களில் மணமுறிவு வழக்குகள் குவிந்து உள்ளது. உறவில் சலனம் வருவதால்தான் மண முறிவுகள் பெருகுகின்றன. உளவியல் ரீதியாக உறவில் சலனம் வராமல் இருக்க என்ன வழி என்பதை மிகச் சிறப்பாக விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர் திரு.எக்ஸ்.பி.ஒய்ட்.

நூலாசிரியருக்கு இது இரண்டாவது நூல். இன்றைய சூழ்நிலையில் பலருக்கும் தேவையான நல்ல கருத்துக்கள் அடங்கிய நூல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த தமிழ்ப்பண்பாட்டை வலியுறுத்தும் நூல். அட்டைப்படம் அற்புதம், மிக நேர்த்தியான வடிவமைப்பு. முதல் நூலில் இருந்த குறைகளை எல்லாம் நீக்கி விட்டு மிக நிறைவாக வந்துள்ள நூல். நூலை வடிவமைத்த அரிமா.திரு.ஆர்.என்.முத்து அவர்களுக்கு மறக்காமல் நன்றி கூறி உள்ளார் ஆசிரியர்.

நிலை உயரும் போது பணிவு வந்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்

இப்படி புகழ்பெற்ற வைர வரிகளை எல்லாம் மேற்கோள் காட்டி, குடும்ப உறவு பற்றி நன்கு விளக்கி உள்ளார்.இந்நூலிற்கு அணிந்துரை வழங்கி உள்ள மதுரை வானொலியின் தலைமை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திருமதி.ஜோதிமணி இளங்கோவன் பாராட்டுக்கு உரியவர்.இனிய சொல் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை எழுதி உள்ளார். விட்டுக் கொடுத்தல் பண்பை உருவாக்குவது பிறந்து வளர்ந்த சூழ்நிலை தான் என்கிறார். அவ்வப்போது ஆங்கில மேற்கோள்களும் நூலில் இடம் பெற்றுள்ளது.

“ceaser�s wife should be above suspicion”�சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆண்,பெண் என்ற பேதமில்லை. இருவருமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத் தான் இருக்க வேண்டும். இந்த சந்தேகப் பேய் நுழையாமல் காப்பதும் உரையாடல்தான். இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது.

உறவில் விரிசல்கள் தொடங்கி,பின்னுரை வரை 13 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் தன் வாழ்வில் சந்தித்த இணையர்களுக்கு நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை எடுத்துக் கூறி நிம்மதியான வாழ்க்கைக்கு தீர்வும் கூறி உள்ளார். மிக எளிய உதாரணங்களுடன் குடும்பத்தில் தினசரி நடக்கும் உரையாடல்களுடன் நன்கு விளக்கி உள்ளார். விட்டுக் கொடுத்து வாழ கற்றுத் தரும் நல்ல நூல் இது.

பாலுணர்வு அற்றுப் போயிருந்தால் நிச்சயம் உடல் குறையோ,மனக்குறையோ உள்ளதென்பது தெளிவு. இந்தக் குறைகள் தான் நரம்பு மண்டலத்தை ஊடுருவி நோய்க் குறியீடுகள் தொடரக் காரணியாகின்றன.

உளவியல் மருத்துவர் போல மிகச்சிறப்பாக நூல் முழுவதும் நன்கு விளக்கி உள்ளார். படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி புத்தகம் அல்ல இது. படித்துப் பயன்பெறும் நூல் இது. பண்பாடு உணர்த்தும் நூல்,தாம்பத்யம் உணர்த்தும் நூல்.

பாலுறவு ஒரு செயல் என்றல்,அதன் எதிர் செயல் தான் புத்துணர்ச்சி.மனச் சோர்வை முற்றிலும் நீக்கும் ஆற்றல் கொண்டது இந்தப் பாலுறவு. அன்பு தான் உறவு,உறவு தான் அன்பு என மிகத் தெளிவாக, நாகரிகமாக உறவுகள் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

உலகப் பொதுமறையாம் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்குகின்றார்.

மனம் என்ற மரத்தை, காற்று என்ற சூழ்நிலை அசைக்கிறது,ஒழுக்கம் என்ற வேர் ஆழமாக வளர்ந்திருந்தால் தடுமாற்றம் ஒரு போதும் வராது.

கல்வெட்டு வார்த்தைகள்,இதைக் கடைப்பிடித்தால் உறவில் சலனம் வராது.நூலின் பின் அட்டையில் உள்ள அரிய வாசகம் இதோ!

என் துணைவரை துணைவியை நான் தான் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள முடியும் என்று இறைவன் எண்ணியதால் எனக்கு இந்தச் சுமையைக் கொடுத்திருக்கிறான். சுகமான இந்தச் சுமையை விரும்பி ஏற்றுக் கொண்ட நான் முழு விருப்பத்துடன் தொடர்ந்து சுமப்பேன்.

இப்படி வாழ்க்கைத் துணையை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால்,வாழ்க்கை இனிக்கும்.எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,மனதிற்குள் வைத்து நோய் உருவாகக் காரணமாக்கி விடாதீர்கள் என பல்வேறு தகவல்களைப் பயனுள்ள ஆலோசனைகளை ஆசிரியர் பட்டறிவுடன் மிகவும் உணர்ந்து எழுதி உள்ளார். படிக்கும் வாசகர்களைப பக்குவப்படுத்தும் நூல். சில சந்தேகங்களைப் போக்கும் நூல்.

வாழ்க்கை ஒருவனுக்குப் போராட்டம்
வாழ்க்கை மற்றவருக்குத் தேரோட்டம்

வாழ்க்கை ஒருவருக்கு வேதனை
வாழ்க்கை மற்றவருக்கு சாதனை.

நம் வாழ்க்கை நம் கையில்,வாழ்க்கையை ரசித்து,ருசித்து, இன்புற்று வாழுங்கள். ஒழுக்கமாக வாழுங்கள் என உணர்த்தும் உன்னத நூல்…

கருத்துகள்