மனிதமன சோதனை தோல்வி – கவிஞர் இரா.இரவி
ஏவுகணை சோதனை வெற்றி
மனிதமன சோதனை தோல்வி
வல்லரசு ஆவது இருக்கட்டும்
நல்லரசு ஆக முற்படட்டும்
விலைவாசி குறைக்க வழி அறியவில்லை
வறுமையை ஒழிக்க முறை தெரியவில்லை
அரசியல்வாதிகளின் ஊழல் ஒழியவில்லை
அரசியல் வாரிசு சண்டை முடியவில்லை
தாரை வார்த்த கட்சத்தீவை மீட்கவில்லை
தரம் கெட்ட சிங்களனை ஒடுக்கவில்லை
அன்பு அறியாத மாநிலங்களைத் திருத்தவில்லை
அணைகட்டத் துடிக்கும் கேரளாவைத் தடுக்கவில்லை
காவிரி மறுக்கும் கர்னாடகத்தை கண்டிக்கவில்லை
பாலாற்றை விசமாக்கும் ஆந்திரத்தை எதிர்க்கவில்லை
எரிவாயு விலை உயர்வை நிறுத்தவில்லை
எரிபொருள் பெட்ரோல் விலை குறைக்கவில்லை
படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை
படிக்கக் கல்வி இலவசமாகக் கிட்டவில்லை
மதுவிலக்கு நாட்டில் எங்கும் அமுலாகவில்லை
மது குடித்து வீட்டில் நடக்குது பெரும் தொல்லை
விளைநிலங்களை பன்னாட்டினர் அடித்தனர் கொள்ளை
விவசாயி விவசாயம் செய்ய வழியே இல்லை
குடிதண்ணீர் விலைக்கு வாங்கும் அவலநிலை
குடிமக்களுக்கு அடிப்படை தேவை பூர்த்தியாகவில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக