சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12a1279549ff3318&attid=0.3&disp=inline&realattid=f_gc1wjhrr2&zw

நூல் ஆசிரியர் : முனைவர் நிர்மலா மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூலின் அட்டைப்படம் வித்தியாசமான இயற்கைக் காட்சியாக உள்ளது. மதுரை செந்தமிழ் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டே, இலக்கியத் துணையாக மட்டுமின்றி இல்லத் துணைவராக இருக்கும் முனைவர் இரா. மோகன் அவர்களுடன் பட்டிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும், உரையாற்றி, முத்திரை பதித்து வரும் முனைவர் நிர்மலா மோகன் உரையாற்றிய 7 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் இலக்கியத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளது.
சங்க இலக்கியம் என்றால் கற்றறிந்த புலவர்களுக்கு மட்டுமே விளங்கும். நமக்கு விளங்காது என்று விளங்கிக் கொள்ளவும் பலர் முயற்சி செய்வதே இல்லை. ஆனால் சங்கத்தமிழ் எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக, மிக எளிமையாகவும், இனிமையாகவும் எழுதி உள்ளார்கள். நூலாசிரியர் திருமதி. நிர்மலா மோகன் காதலித்து முனைவர் இரா. மோகன் அவர்களின் கரம் பிடித்து, காதல் திருமணத்தின் இலக்கணமாக வாழந்து வரும் மணி விழா கண்ட தம்பதியர்கள். நல்ல குறுந்தொகையில் உள்ள உலகப்புகழ் பெற்ற பாடலின் விளக்கம் மிக அருமை.
யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
இதற்கு முன் என் தாயும், நின் தாயும் எத்தகைய தொடர்பேனும் உடையவரா? என் தந்தையும், எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் ஒருவரை ஒருவர் எப்படி அறிந்து கொண்டோம்? செம் மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தையும், சுவையையும் பெற்று ஒன்றுபடுவது போல் அன்புடைய நம் நெஞ்சம் தாமே இயற்கையாகக் கலந்தன என்கிறான் தலைவன். சிறப்பான பாடலுக்கு மிகச் சிறப்பான விளக்கம். இந்தப் பாடலை உலகக் காதலர்களுக்கு காதல் பாடலாக அங்கீகரிக்கலாம். காதலைப் பற்றி இவ்வளவு அற்புதமாக எந்தப் பாடலிலும் இதுவரை கூறவில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.
நற்றிணைப் பாடல்
விளையோடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மரத்தை சகுந்தலை நீருற்றி மட்டுமே வளர்த்தாள். நற்றிணைப் பாடலில் வரும் தமிழ்மகளோ பாலும், தேனும் ஊற்றி வளர்க்கிறாள். இயற்கையுடனான உறவைத் தான் மட்டுமின்றித் தன் மகளும் கொண்டாடுமாறு செய்கிறாள்.
இயற்கையை நேசிக்கும் தமிழ்ப்பண்பை உணர்த்தும் பாடல். தன் தாயால் வளர்க்கப்பட்ட மரத்தை அக்காவாகக் கருதி அந்த மரத்தின் முன் தலைவன் கரம் பிடிக்கத் தயங்குகிறாள். மிகச்சிறந்த இயற்கை நேசத்தை பண்பாட்டை விளக்கிடும் அருமையான பாடலின் விளக்கம் மிக அருமை. இதைப் படித்த போது சங்க காலத்தில் வாழ்ந்த பெண்ணிற்கும், இன்றைக்கு நாட்டில் நடக்கும் அவலத்திற்கும் ஒப்பீடு செய்து பார்த்தேன். சங்க காலம் இங்கே மீண்டும் திரும்ப வேண்டும்.
ஒவ்வொரு சொல்லிலும், தொடரிலும் ஆழ்ந்த கருத்தின் திட்பமும் வாழ்க்கை அனுபவத் தெளிவும் விளங்கக் கணியன் ப+ங்குன்றனார் பாடிய ஒரே பாடல் இன்றும் நிலைத்து நிற்கின்றது. உலக ஐக்கிய நாடுகளின் சபையிலும் அப்பாடல் வரி இடம் பெற்றுள்ளது என்றால் தமிழரின் பெருமை நினைத்து நினைத்து போற்றுதற்குரியது. அப்புறப்பாடல் வருமாறு,
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உலக மனிதர்களை எல்லாம் உற்றவர்களாக, உறவினர்களாக பார்க்கும் பரந்த பார்வை தமிழனைத் தவிர உலகில் யாருக்கும் இல்லை. அதனால் தான் உலகம் முழுவதும் பரந்து விரிந்து தமிழினம் வாழ்கின்றது.
அகம் புறம் அற்புதமாகப் பாடினார்கள் நம் சங்கப் புலவர்கள். பல்லாயிரம் பாடல்களில் தேர்ந்தெடுத்த முத்துமாலையாக வழங்கி உள்ளார் நூலாசிரியர் முனைவர் நிர்மலா மோகன். இலக்கிய ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக நூல் உள்ளது.
சங்கத்தமிழ் என்ற கனியிலிருந்து அற்புத கனிச்சாறாக நூலை வழங்கி உள்ளார்கள்.
சங்கத்தமிழ் முழுவதையும், படிக்க முடியாதவர்களுக்கும், பொருள் விளங்காதவர்களுக்கும், இலக்கிய விருந்தாக வந்துள்ளது. உரையின் தொகுப்பு நூல் என்றாலும், உரை போல் இல்லை, கட்டுரை போல் தௌ;ளத் தெளிவாக உள்ளது. மலரிலிருந்து தேன் எடுப்பது போல சங்கத்தமிழ் நூல்கள் எனும் மலர்களிலிருந்து தேன் எடுத்து வழங்கி உள்ளார்கள்.
சங்க இலக்கியம் தந்த சான்றோர்கள் ஒவ்வொருவரும் கல்விச்சிறப்பின் காரணமாகச் சென்றவிடமெல்லாம் சிறப்புப் பெற்றவர்களாக செல்வாக்கும், சொல்வாக்கும் நிறைந்தவர்களாக விளங்கினார்கள்.
நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வியழகே அழகு என்பதற்கேற்ப நல்லவர்களாக, நடுநிலையாளராக விளங்கினார்கள். புவியாளும் மன்னர்களால் போற்றப்பட்டார்கள். கவியாளும் புலவரால் பாராட்டப்படுவதையே மன்னர்களும் விரும்பினார்கள். இந்த நிலை இன்றும் தொடர்வதைக் காண்கின்றோம். அன்றைய நக்கீரன் போல இன்றைக்கும் சமரசத்திற்கு இடமின்றி ஆட்சியாளர் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் கவிஞர்கள் சிலர் உண்டு. மொத்தத்தில் தமிழர் யாவரும் தமிழராகப் பிறந்ததற்கு பெருமை கொள்ளும் விதமாக நூல் உள்ளது.

கருத்துகள்