எச்சில் துளிகள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் பாப்பனப்பட்டு முருகன்
நிலவை கையில் பிடிக்கும் அட்டைப்படமே அற்புதம், நூலை குருநாதர்
திரு.கே.பாக்கியராஜ் அவர்களுக்கு காணிக்கையாக்கி இருக்கிறார்.நூலை படித்து
முடித்தவுடன் மனம் வலிக்கின்றது.ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனங்களை படம்
பிடித்துக் காட்டி இருக்கிறார்.இட ஒதுக்கீடு வந்து விட்டது எல்லாம் சமநிலை
வந்து விட்டது என சமாதானம் பேசுவோரின் தலையில் கொட்டும் வண்ணம் கவிதை வடித்து
இருக்கிறார், தாழ்த்தப்பட்டவர்களின் மன வலியை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்து
உள்ளார். இன்றைக்கும் சாதியக் கொடுமைகள் நடைபெற்று வருவதை ஊடகங்கள் நமக்கு
அவ்வப்போது பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன.
இருபத்தி ஓராம் நூற்றாண்டு, நவீனயுகம், கணிப்பொறியுகம் என ஒரு புறம்
மார்தட்டிக் கொண்டாலும் இன்றைக்கும் சேரிகள் தீவுகளாகத்தான் இருக்கின்றன,
அரசியல்வாதிகளின் கால்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே சேரிக்குள் செல்லும்.
தேர்தல் முடிந்தவுடன் சேரியை மறந்து விடுவார்கள், மற்ற மனிதர்களும் சேரிக்குள்
செல்ல யோசிக்கவே செய்கின்றனர் ஏன்? இந்த இழிநிலை ஆடு,மாடு கோழிகளுக்கு உள்ள
சுதந்திரம் கூட ஆறறிவு படைத்த மனிதனுக்கு ஏன் இல்லை?, இன்றைக்கும்
சுடுகாடுகளும், இடுகாடுகளும் இரண்டாக,மூன்றாக இருப்பது ஏன்? இது போன்ற அவலங்களை
தோலுரித்துக் காட்டும் வைரவரிகள் நூல் முழுவதும் உள்ளது. கவிதைகள் மட்டுமே
இருந்தால் சலிப்பு வந்து விடும் என்று எண்ணி ஓரளவிற்கு பொருத்தமான
புகைப்படங்கள் நூலிற்கு அழகு சேர்க்கின்றன. இந்த நூலை படிப்பவர்கள்
தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் உணர்ச்சி பிறக்கும், வீரம் பிறக்கும், வலிக்கு
மருந்து கிடைக்கும். மற்றவர்களாக இருந்தால் சகமனிதனை மனிதனாக மதிக்க
வேண்டுமென்ற மனிதநேயம் நிச்சயம் பிறக்கும்.உயர்சாதி வெறி இருந்தால் செத்து
விடும். அது தான் இந்த நூலின் வெற்றி. நூலின் உள்ள கவிதை வரிகள் சில உங்கள்
பார்வைக்கு முடி திருத்துபவர்களின் உள்ளத்து உணர்வைப் பதிவு செய்த வைர வரிகள்.
உணவில் ஒரு மயிரு இருந்தாலே
உறவு அதிகம் என்பார்கள் ஆனால்
உணவெல்லாம் மயிரு மயிராய் இருந்தும்
ஊராரின் உறவே கிடைக்காமல் ஒதுக்கப்பட்டவர்களாய் நாவிதர்கள்
நம்மை அழகுப்படுத்திப் பார்க்கும் நாவிதர்கள் வாழ்க்கை அழகாக இல்லை அவலம்
நிறைந்ததாக உள்ளது என்பதை நுட்பமாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்
பாப்பனப்பட்டு முருகன் “கூந்தல் முதல் கொலுசு வரை” நுõலின் காதலைப் பாடியவர்
இந்நூலில் சமுதாய அவலத்தை தோலுரித்துக்காட்டி இருக்கிறார். “கம்பன் வீட்டு
கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். பாக்யா இதழில் நிரூபராகப் பணிபுரியும்
பாப்பனப்பட்டு முருகன் கவிதை எழுதுவதில் வியப்பில்லை. பாக்யா என்ற பட்டறையில்
உருவானவர்தான் இன்று கவிதை உலகில் அளப்பரிய சாதனை செய்து “தேசிய விருது” பெற்ற
என் இனிய நண்பர். வித்தகக்கவிஞர் பா.விஜய் பாக்யா பட்டறையில் உருவாகி வரும்
பாப்பனப்பட்டு முருகனுக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை பறைசாற்றும்
விதமாக கவிதைகள் உள்ளன.
இங்கே குலம் விசாரித்து சிறுமைப்படுத்த
கோடி பேர் உண்டு
எங்களை நலம் விசாரித்து பெருமைப்படுத்தத்தான்
ஒருவருமே இல்லை
என்ன? சாதி என்று கேட்போரின் கன்னத்தில் அரையும் விதமாகவும் மனிதநேயத்தை
வலியுறுத்தும் விதமாகவும் நூல் முழுவதும் நிறைய கவிதைகள் என்று சொல்வதை விட
பாடங்கள் என்றே சொல்லலாம்.
காதலர்கள் கண்கள் மட்டுமல்ல இங்கே
சாதி வெறியர்களின் கண்களும் சாடையில் பேசும்
பிறந்த மண்ணில் நடக்கவே எங்கள் கால்களும் கூசும்
இந்த வரிகளைப்படிக்கும் போது உயர்சாதிக்காரர்கள் கிராமங்களில் இன்றைக்கும்
கண்களால் பேசுவதை நான் பார்த்து இருக்கிறேன். தாழ்த்தப்பட்ட சகோதரனின்
உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக்காட்டி இருக்கிறார்.
என் பெயர் என்னவென்றே தெரியாதவனுக்குக் கூட
தெரிந்திருக்கிறது என் சாதியின் பெயர்
இந்த வரிகளைப் படிக்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு சாதியை கற்பித்த
கொடூரர்களை நினைத்துப் பார்க்கும் போது உள்ளம் கொதிக்கின்றது. சாதியைக்
கற்பித்த சதிகாரர்களின் மீது கோபம் கொப்பளிக்கின்றது.
இந்நூலை படிப்பவர்கள் மேலோட்டமாக படித்து விட்டு நூலாசிரியர் பாப்பனப்பட்டு
முருகன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வக்காலத்து வாங்கியே அதிக கவிதைகள் எழுதி
இருக்கிறார் என எண்ணலாம். ஆனால் உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து,
வளர்ந்து இன்று வரை பட்ட அவலங்கள் நினைத்துப் பார்த்தால் நன்கு விளங்கும். சக
மனிதனை இந்த சமுகம் எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தி இருக்கிறது. இன்னும் இந்தக்
கொடுமைகள் முடிவிற்கு வரவில்லை. புரட்சியாளர்கள் பெரியாரோ,அம்பேத்காரோ இனி
பிறந்து வரப்போவதில்லை.ஆனால் இது போன்ற கவிதை நூல்கள் அவர்கள் விட்டுச் சென்ற
பணியினைத் தொடரும்.சாதிமத பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைந்திட இது போன்ற நூல்கள்
வழி வகுக்கும்.நூலின் கடைசி கவிதையை மறக்க முடியாது,மறுக்கவும் முடியாது.
எனது உணர்வு கொப்பளிக்கும் சாதி மறுப்புக் கவிதைகளைப் படித்து விட்டு பட்டென
கேட்டார்கள் நீ எந்த சாதி?
சாதி பார்க்கும், கேட்கும் தீயபழக்கத்திற்கு முடிவு கட்டுவோம் நூல்
ஆசிரியர் : கவிஞர் பாப்பனப்பட்டு முருகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

சாதி பார்க்கும், கேட்கும் தீயபழக்கத்திற்கு முடிவு கட்டுவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக