அரங்க மின்னல்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

d.jpg
அரங்க மின்னல்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி


அட்டைப்படமே அற்புதம்.நூலை கவிபாடும் சக கவித்தோழைக்கு சமர்ப்பித்தது வித்தியாசமான சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.சங்கக்கவி பிரபாகரபாபு அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பா உள்ளது. நூலின் சிறப்பை எடுத்து இயம்புவதாக உள்ளது.ஆசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி கவியரங்களில் கைதட்டல்கள் இடையே வாசித்த வைர வரிகளை நூலாக்கி இருப்பது பாராட்டுக்குரிய பணி. என்னுரையில் மறக்காமல் உதவிய உள்ளங்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்து இருப்பது ஆசிரியரின் உயர்ந்த உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு 32 தலைப்புகளில் கவிதைகள். மனிதனுக்கு பற்கள் 32 இந்நூலின் கவிதை தலைப்பு.32 பல் போனால் சொல் போகும் என்பார்கள். ஆனால் இவர் சொற்களை தேர்ந்தெடுத்துத் தொகுத்து பாமாலை படைத்து பல் போன முதியவர்களும் வாசித்து மகிழும் வண்ணம் அற்புதமாக படைத்து இருக்கிறார்.கவிதை ரசிகர்களுக்கு இந்நூல் அருஞ்சுவை விருந்து என்றே சொல்லலாம். ஆசிரியரின் பெயரில் பாரதி இருப்பதால் மகாகவி பாரதியைப் போல எளிமையாகவும் இனிமையாகவும் குறிப்பாக படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் படைத்து இருக்கிறார். இவரது கவிதைக்கு தெளிவுரை விளக்கவுரை தேவை இல்லை.முதல் கவிதையிலேயே இளைஞர்களுக்கு விழிப்புணர்வு விதைக்கின்றார்.

வேண்டாத செயல்பாட்டால்

திறமைகள் வீணாக்கப்படுகிறது

படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.புத்துணர்வு தருகிறார்.மூட நம்பிக்கைகளை சாடுகிறார்.

இது கலியுகம் என்பதெல்லாம் வெறும் பேச்சு

இது கணிணியுகம் என்று சொல் அது வீச்சு

இவரது வரிகளில் எதுகை மோனை இயைபு மட்டுமல்ல கருத்துக்களும் சிறப்பாக உள்ளது. சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்தைப் போல சொற்களைச் செதுக்கி கவிதை சிலை வடித்து இருக்கிறார். “பாரதி எனும் புரட்சித் தீ” கவிதையில் பாரதியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார். இது தான் படைப்பாளியின் வெற்றி வெற்றிநிச்சயம் கவிதையில் கல்வெட்டென மனதில் பதியும் வைரவரிகள்

சாதனை எல்லையை நீ அடைய விரும்பினால்

கடந்து தான் தீர வேண்டும் சங்கடப்பள்ளங்களை

நல்லவை விதைப்போம்,முயன்றால் முடியுமே, நம்பிக்கை கொள்ளுங்கள், வாழ நினைத்தால் வாழலாம், சிந்தையில் செம்மொழி, நல்லதே நடக்கட்டும்.

இப்படி கவிதைகளுக்கான தலைப்புகளே மிகவும் சிறப்பாக உள்ளது.தலைப்பை படிக்கும் போதே கவிதையைப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது. நூலாசிரியர் ஹைக்கூ கவிஞர் என்பதால் தேவையற்ற சொற்கள் எதுவும் சேர்க்காமல் மிகவும் நூட்பமாக கவிதையை படைத்துள்ளார். “சிந்தையில் செம்மொழி” கவிதையில் கவிஞரின் தமிழ்ப்பற்று நன்கு விளங்குகின்றது. பின் அட்டையில் நூலாசிரியர் கவியரங்கில் கவி முழங்கும் புகைப்படமும், கவிஞரின்

வைரவரிகளும் நூலின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. இந்நூலை வடிவமைத்த உழைப்புத் திலகங்கள் இனிய இதயங்கள், கன்னிக்கோயில் இராஜா, திரு.வசீகரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். “அரங்க மின்னல்கள்” கவிதைகள் மின்னல்கள் போல ஒளிவீசும் கவிதைகளாக இருந்தாலும், மின்னல்போலஉடன் மறையவில்லை.நூலை படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் நிலவு போல நிலைத்து விடும் வைரவரிகள். மயிலாடுதுறை இளைய பாரதி தமிழகத்தின் இளையபாரதியாக உயர்ந்து இருக்கிறார். பாராட்டுக்கள் தொடர்ந்து படையுங்கள். இலக்கிய உலகில் விரைவில் நூலாசிரியருக்கு உயர்ந்த இடம் கிடைக்கும் என்பதை பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன. சொற்கள் நடந்தால் வசனம் சொற்கள் நடனமாடினால் கவிதை.இந்நூலில் சொற்கள் களிநடனமிடுகின்றன. நேர்முறை சிந்தனைகளையே கவிதையாக எழுத வேண்டும் என்பார் தன்னம்பிக்கை எழுத்தாளர் திரு.மெர்வின்,கவிஞர் இந்நூல் முழுவதும் நேர்மறை சிந்தனைகளையே விதைத்து இருப்பது பாராட்டுக்குரியது. புகழ்பெற்ற பதிப்பகங்களின் நூல்களை விஞ்சிடும் வண்ணம் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து உள்ளனர். “வானத்து மின்னல்கள் விழிக்கு ஆபத்து”, “அரங் மின்னல்கள் விழிக்கு விருந்து”. வாடிய இதயத்திற்கு மருந்து நூலாசிரியர் நண்பர் மயிலாடுதுறை இளையபாரதியின் உடலின் நிறம் வெள்ளை. அவரது உள்ளமும் வெள்ளை எனப் பறை சாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன.

கருத்துகள்