அண்ணா கண்ட அலையாத்திக் காடுகள்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : இரா.முல்லைகோ
பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்துடன் கூடிய அலையாத்திக் காடுகள் அட்டைப்படம் அருமை.இந்நூல் இந்திய மண்ணில் முதன்முதலில் தொழிற்சங்கம் அமைத்து உழைக்கும் மக்களுக்கு முதல் உரிமை முழக்கம் எனும் விதையை விதைத்த நெய்தல் நிலத்து செங்குயில் சிந்தனைச் சிற்பி ம. சிங்கார வேலரின் சாதனையை பறைசாற்றி உள்ளார் நூல் ஆசிரியர் இரா.முல்லைகோ. அருமை இராசகோபால் அவர்களின் அணிந்துரை அருமை. முனைவர் சி.இரா.இளங்கோவன் அணிந்துரை முத்தாய்ப்பு.
நூலாசிரிருக்கு இது இரண்டாவது நூல்.ஆனால் முதுபெரும் எழுத்தாளர் போல சிறந்த நடை, பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி காடுகளின் வளத்தினை வலியுறுத்தி வெளி வந்துள்ள பசுமை நூல் இது. சுனாமி வந்த போது, பல இழப்புகள் நேர்ந்தது. ஆனால் பிச்சாவரத்திலுள்ள இந்த அலையாத்திக் காடு, கடல் சீற்றத்தனைத் தடுத்ததால் காட்டினைச் சார்ந்த கிள்ளை ஊர்ப்பகுதி மட்டும் தப்பியது என்ற வரலாற்று உண்மையைச் சொல்லி காடுகளின் அவசியத்தை வழியுறுத்தும் நூல்
காடுகளை வெட்டி, வீழ்த்தி காசாக்கிக் கொண்டிருக்கும் காலத்தில் காடுகளின் நன்மைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு விதைக்கும் சிறந்த நூல் அறிஞர் அண்ணா உடலால், உயரத்தால் குள்ளமாக இருந்தாலும் அறிவாள், ஆற்றலால், மிகவும் உயர்ந்தவர் அண்ணா பற்றி நூலாசிரியர் தரும் ரத்தினச் சுருக்கமான விளக்கம் பாருங்கள்
“அண்ணா ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல அவர் ஒரு தமிழ் அருவி. அவர் ஓர் இலக்கிய மேதை. அவர் தன்னிகரற்ற நாவலர், மேதைகள் போற்றும் நூலாசிரியர். நாநிலம் போற்றும் நாடகாசிரியர். அகிலம் போற்றும் அருட்கோ. எல்லாற்றுக்கும் மேலாக அவர் பண்பிற் சிறந்த அண்ணன். வானுயர்ந்திருந்த வைதீகத்தை வீதியில் சிரிக்க வைத்தவர். அறிவுப் பணியில் அவர் சாக்ரடீஸ் இப்படி அண்ணாவின் ஆற்றலை, சாதனையை விளக்கும் அற்புத நூல். பேரறிஞர் அண்ணாவின் புகழ் பெற்ற வைர வரிகள் இன்றைக்கும் மேடைப் பேச்சாளர்கள் பலரால் கையாளப்பட்ட வரை வரிகள் நூலில் உள்ளது.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
மக்கள் குரலே மகேசன் குரல்
நூலாசிரியர் அறிஞர் அண்ணாவின் வரலாற்றை ஆய்வு செய்த அற்புத நூலாக வடித்து உள்ளார். “அண்ணா கண்ட அலையாத்திக் காடுகள்” என்ற நூலின் பெயரே வித்தியாசமாக இருந்தது. நூலைப் படித்ததும் தான் புரிந்தது. அண்ணா அவர்கள் தாம் நடத்திய திராவிட நாடு இதழில் தம்பிக்கு மடல் என்னும் பகுதியில் பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றி தீட்டிய கட்டுரையின் ஒரு இந்நூலில் இடம் பெற்றுள்ளது. கூடுதல் சிறப்பு. மண் வகை காடுகளின் நன்மை காடுகளின் வகை, தாவரங்கள் வகை, சிற்றினத் தாவரங்கள் வகை என அறிவியல் ப+ர்வமான, ஆதாரமான நூல்களை பட்டியலிட்டு மிகச்சிறந்த மனித குலத்திற்கு பயன்தரத்தக்க நூலை வழங்கிய நூலாசிரியர் திரு.இரா.முல்லைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நூலாசிரியர் பெயர் முல்லைகோ. இது இயற்பெயரா? புனைப்பெயரா? என்பது தெரியவில்லை. ஆனால் காரணப் பெயராக இருக்க வேண்டும். முல்லை என்ற நிலத்தையும், முல்லை என்ற மலரையும் தாங்கி கோ என்றால் அரசன், முல்லை நிலத்த அரசன் என்ற காரணத்தால் மண் வளம் காக்கும் அலையாத்திக் காடுகள் பற்றி அலை அலையாக தகவல்களைத் தந்துள்ளார்.
பூகம்பத்தை முன்கூட்டியே அறிய அறறிவு படைத்த மனிதனுக்கு இயலவில்லை. ஆனால் பறவைகளும், விலங்களும் முன்கூட்டியே அறிந்து இடம் பெயர்ந்து உயிர் பிழைத்து விடுகின்றன. இலங்கை யாலா- விலுள்ள தேசிய வனவிலங்கு ப+ங்காவும், கடல்கோள் தாக்குதலுக்குள்ளானது. அங்கு சிலர் இறந்து போயினர். ஆனால் ஒரு விலங்கு கூட இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வன விலங்கு ப+ங்காவில் 200 யானைகள் சிறுத்தைகள், கரடிகள் மற்றும் பல அரிய விலங்குகள் உள்ளன. இந்த தகவலையும் நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
இரால்கள் பற்றி, கடல் உணவுகள் பற்றி, நோயை விரட்டும் மீன்கள் பற்றி, பறவைகள் வெளிநாட்டு மரங்களின் விதை பெருக்கம் இப்படி பல விளக்கங்கள் நூலில் உள்ளது. இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி மனித குல நீண்ட கால வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய அற்புதக் காடுகள் பற்றி அறிய விரும்பும் அனைவரும் படிக்க வேண்டி சிறந்த நூல்
இன்னொரு சுனாமி உலகில் நேராமல் தடுக்க காடுகள் காக்க வேண்டிய கடமை, நமக்கு உண்டு என்பதை உணர்த்தும் உன்னத நூல் பிச்சாவரம் சென்று பார்க்காதவர்கள் அவசியம் சென்ற வாருங்கள். பிச்சாவரத்தின் சிறப்பை நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார். பார்க்க வேண்டிய இடங்கள், நீர் ஊற்று சிலைகள், சிற்பங்கள், மீன் ப+ங்கா, படகு சவாரி, ஆராய்ச்சி மையங்கள், உணவகம், தோரண வாயில்கள் என தமிழ்நாட்டின் எழில்வனத்தின் சிறப்பை சித்திரத்தில் ஓவியம் தீட்டி உள்ளார்.
பிச்சாவரம் காடுகள் பற்றி அறிய அரிய வாய்ப்பு நூல் காடுகள் தானே, என காடுகள் பற்றி குறைவாக மதிக்கும் மதிப்பும் தகர்க்கப்பட்டு, காடுகள் மனித வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் வளம் சேர்க்கின்றன. பேரறிஞர் அண்ணா புகழ்ந்த காடுகள் சாதாரணமானது அல்ல என பறை சாற்றிடும் நூல். படித்துப் பார்த்தால் நீங்களும் உணர்வீர்கள், காடு அதை நாடு என்பதை
கருத்துகள்
கருத்துரையிடுக