விளக்குகள் எரியாத வீதி விமர்சனம் கவிஞர்.இராவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef5be24a89dcd&attid=0.4&disp=inline&realattid=f_gbulargq3&zw
விளக்குகள் எரியாத வீதி - நூல் ஆசிரியர் - கவிஞர் கோவை பழநிசாமி,நூல் விமர்சனம் கவிஞர்.இராவி
இரணியன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு பெருமை சேர்க்கின்றது."விளக்குகள் எரியாத வீதி" தலைப்பைப் படித்ததும் நம் நினைவிற்கு வருவது நாம் பார்த்த விளக்குகள் எரியாத வீதி.இருளாக இருக்கும் அந்த வீதி.ஆனால் இந்த வீதி அறிவு ஒளியாக உள்ளது."கடவுள்" என்ற முதல் கவிதையிலேயே படிப்போரின் உள்ளம் கவர்ந்து விடுகிறார்.

கடவுள்

கல்வி கடவுள் கடமை கடவுள்
நல்லவை கடவுள் நன்றி கடவுள்
நன்மை கடவுள் நன்னெறி கடவுள்
அன்பு கடவுள் அறிவு கடவுள்
பண்பு கடவுள் பணிவு கடவுள்
உண்மை கடவுள் உழைப்பு கடவுள்
சமத்துவம் கடவுள் சகோதரத்துவம் கடவுள்
இவை இல்லாமல் ஏதோ கடவுள்?


இந்தக் கவிதையில் எனக்கு மிகவும் பிடித்தது கடைசி வரி தான்.

"எப்படி"

மெல்ல மெல்ல நான் உனக்குள் கரைந்து
உனக்குள் காணாமல் போனது எப்படி?
இப்படி காதலையும் பாடுகின்றார்

நூலில் காதல் கவிதைக்கு பஞ்சம் இல்லை.கொஞ்சம் சமுதாயச் சாடல்களும் உள்ளது.இன்றைக்கு பெண்களை போகப் பொருளாகக் காட்டி பணம் குவித்து வரும் ஊடகங்கள் கவனிக்க வேண்டிய கவிதை இது.

"பெண்மையே" காட்சிப் பொருளில்லை பெண்மை-வெறும்
கவர்ச்சிப் புயலில்லை பெண்மை
சூரியனாய்ச் சுட்டெரித்தும் தாக்கும் - சுடர்
விழியிரண்டில் அன்பும் விளையாடும்.


பெண்ணின் பெருமையை நன்கு பதிவு செய்துள்ளார்.

விளைநிலங்கள் எல்லாம் உலகமயம் என்ற பெயரில் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு போட்டி போட்டு தாரை வார்த்து வருகின்றனர்.இந்நிலை தொடர்ந்தால் மனித இனம் உண்ண உணவின்றி வாடும் நிலை வரும்.

படிப்பினை

காடுக ளெல்லாம் வீடானால்
கழனி களின் கதியென்ன?
கானகம் எல்லாம் வீணானால்
காட்டு விலங்குகள் வாழ்வேது?

இப்படிக் கேள்விக் கணைகள் தொடுத்து நம்மை சிந்திக்க வைக்கிறார்.

இயக்குனர்கள்

அய் பூதங்களின் அய்க்கிய நடனம்
பிரபஞ்சத்தின் சஞ்சாரிகள்
நீங்கள் இயக்குனர்கள் நாங்கள் இயக்குபவர்கள்


இப்படி அய்பூதங்கள் பற்றி மிகச் சிறப்பாக கவிதை பாடி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் கோவை பழநிசாமி.நூலாசிரியர் பெயரிலேயே கோவை என்ற தன் ஊரின் பெயரையும் தாங்கி நிற்பதால் கோவைக்காரர்களுக்கு உரிய குறும்பு,கவிதைகளில் மிளிர்கின்றது.மொத்தத்தில் காதல்,பாசம்,இயற்கை,நேசம் என பல்வேறு தலைப்புகளில் கவிதையை பதிவு செய்துள்ளார்.

விளக்குகள் எரியாத வீதி என்ற இந்த கவிதை நூலைப் படித்து முடித்தவுடன் நம்முள் ஒரு விளக்கு எரிகின்றது.உள்ளத்து உணர்வுகளை ஒளிவு மறைவின்றி புதுக் கவிதையாக வடித்து உள்ளார்.

"துணிக்கடையில்"என்ற கவிதையில்,பெண் குழந்தைத் தொழிலாளியின் உள்ளக் குமுறலைப் பாடி வக்கிர குணம் படைத்த மனிதர்களை அல்ல,விலங்குகளை சாடி உள்ளார்.

"போராடு தோழா" என்ற கவிதையில்,
வாழ்ந்து தான் ஆக வேண்டும்-இந்த
வாழ்க்கை நமக்காகத் தானடா
வெற்றி கண்டாக வேண்டும்-அந்த
வெற்றியுடன் போராடு தோழா
முனைந்து முன்னேறு நீயடா-மூளை முனையும்
மழுங்காது நில்லடா
கனத்த நெஞ்சமே எதற்கடா அது
காரியத்திற்காகாது போங்கடா
சகல சக்தியைத் திரட்டடா-இங்கு
சகலமும் உனதாகும் விரட்டடா


இப்படி படிக்கும் போது உரம் ஏற்றி, தன்னம்பிக்கை விதைக்கும் சிறந்த கவிதை நூலிற்கு சிறப்பு சேர்க்கின்றது.நூலைப் படித்து முடித்த பின்பும் கவிதை வரிகள் நம் நினைவிற்கு வருகின்றன.இது தான் நூலின் வெற்றி.

கருத்துகள்