உண்மை ஒரு வானம்: (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி)

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129eae165a39bf6a&attid=0.3&disp=inline&realattid=f_gbtcboy22&zw
உண்மை ஒரு வானம்: (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி)

நூல் ஆசிரியர் கவிஞர் து.இராஜா கோபால்

நூலின் பெயரே நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. வானம் என்ற ஒன்று இல்லை, மாயை என்பார்கள். ஆனால் �உண்மை ஒரு வானம்� என்று பெயரிட்டமைக்கு முதலில் பாராட்டுக்கள். �அன்புள்ள அப்பாவுக்கு� என்ற கவிதையை படிக்கும் போது வாசகர்களுக்கு அவரவர் அப்பாவின் நினைவு வந்து விடுகின்றது. இது தான் நூலின்; வெற்றி. மழை பொய்த்து விட்டது என்று ஆதங்கப்படுகிறோம். ஆனால் மழைக்கு மூல ஆதாரமான மரம் நடுவதை மறந்து விடுகிறோம். ஆனால், கவிஞர் �மரம் நடு� என்ற கவிதையில்,

அனல் காற்றும் மாறும் தென்றலாய்
பாலை வனமும் பூத்திடும் நந்தவனமாய்
கோடையும் கொட்டிடும் மழைத்துளியாய்;

அறிவியல் உண்மையை அற்புதமான கவிதை வரிகளில் விளக்கும் நுட்பம் பாராட்டுக்குரியது. நூலின் முதல் பக்கம் தொடங்கி,கடைசிப் பக்கம் வரை ஒரே மூச்சில் படித்து விடும் ஆவலைத் தூண்டும் வண்ணம் கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளன, படித்துப் பாருங்கள், புகழ்ச்சி அல்ல உண்மை என்பதை நீங்களும் உணருவீர்கள், �ஏழ்மை� என்ற கவிதையில்,

மனம் உண்டு கற்க, பணம் இல்லை மேல் படிக்க,
பாசங்கள் விளையும் பண்பட்ட நிலம்.

ஏழ்மையைக் கூட மிக இனிமையாக பாடி உள்ளார்.

�சுமை� என்ற கவிதை படிக்கும் போது நமது மனச்சுமைகள் குறைந்து போடுகின்றது. கணினி யுகத்தில் தமிழர் திருநாளை தமிழன் மறந்து வரும் காலத்தில் மறக்காமல் கவிதையில் பதிவு செய்துள்ளார். உடல் ஊனம் உனமன்று, உள்ளத்து ஊனமே ஊனம் என்பதை உணர்த்தும் உன்னதக் கவிதை �ஊனங்கள்:� என்ற கவிதை. புணம் இருக்குமிடத்தில் குணம் இருப்பதில்லை.குணம் இருக்குமிடத்தில் பணம் இருப்பதில்லை என்பதை விதைக்கும் அற்புதக் கவிதை �இல்லை� என்ற கவிதை

உலகில் உறவுகள் பல உண்டு. ஆனால் ஒப்பற்ற தாய்க்கு நிகரான உறவு உலகில் இல்லை. �தாய்� என்ற கவிதையில் மிக அழகாக வடித்துள்ளார்.

கல்விக் கனி கொடுத்து
சுவை தரும் தமிழ்
தீமை இருள் நீக்கி
ஒளி தரும் ஆதவன்

உள்ளத்தில் உள்ளது கவிதை, ஊற்றென வருவது கவிதை, மனித மனங்களைச் செம்மைப்படுத்துவது கவிதை, இலக்கியம் என்றால் கவிதை. கவிதை என்றால் இலக்கியம் சமுதாய அவலங்களைச் சாடி மனித நேயம் விதைத்து அழகிய கவிதை நூலை வடித்து உள்ளார் கவிஞர் து.இராஜா கோபால்

பல்வேறு தலைப்புகளில் புதுக்கவிதை எழுதி உள்ளார். கவிதைகளை படிக்கும் போது நம் சிந்தனையில் சிறு மின்னல்கள் தோன்றுவது உண்மை. கவிஞர் து.இராஜா கோபால் அவர்களுக்கு கவிதை வானம் வசப்பட்ட காரணத்தால் �உண்மை ஒரு வானம்� நேர்த்தியாக உள்ளது. கவிதை எழுதிய போது கவிஞர் அடைந்த உணர்வு, படிக்கும் போது வாசகனுக்கும் ஏற்படுகின்றது.

வெல்

உளி பட்டதால் சிலையானது கல்
வலி பட்டதால் வலிமையானது இதயம்

அற்புத வரிகள். தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். இப்படி நூல் முழுவதும் கவிதை வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. புதுக்கவிதைகள், துளிப்பாக்கள் என பலவகை பாக்களும் உள்ளது. கவிஞரின் திறமையை பறைசாற்றுகின்றன.

நன்மைகள் அழுகாமல்
காக்கும் குளிர்பெட்டி
சமாதானம்.

சமாதானத்தை இந்த கோணத்தில் இதுவரை யாருமே சிந்தித்து இருக்க முடியாது.வித்தியாசமான சிந்தனை �உண்மை ஒரு வானம்� கவிதை நூல் படித்து முடிந்தால், நம் மனதில் நிலவாக ஜொலிக்கின்றார் கவிஞர் து.இராஜா கோபால் என்பது உண்மை. தொடர்ந்து இது போன்ற நூல்களை எழுதி சமுதாயத்திற்கு தொண்டு புரிந்திட வாழ்த்துக்கள்

கருத்துகள்