ராஜகோபாலின் சதங்கை நாதம்-நாட்டியலாயா 30வது ஆண்டு மலர் ,நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி |
நூலாசிரியர் திரு.இ.கே இராசகோபால் |
நூலாசிரியர் திரு.இ.கே இராசகோபால் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.பொன்பாலசுந்தரத்தின் சீடர் குரு மிஞ்சிய சீடர் என்று சொல்லுமளவிற்கு பத்திரிகை உலகில் தனி முத்திரை பதித்து வெற்றி கொடிநாட்டி வருபவர். இலண்டனிலிருந்து புதினம் என்ற இதழை நடத்தி வருபவர். அட்டை முதல் அட்டை வரை அற்புத வடிவமைப்பு. புலம் பெயர்ந்த தமிழர்கள் அழகாக உள்ளது என்பதை,வடிவாக உள்ளது என்பார்கள். அந்த மொழியிலேயே சொல்ல வேண்டுமானால் மலர் வடிவாக வடிவமைத்து இருக்கிறார். ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமதி. ராகினி அவர்கள் திரு.இராசகோபாலின் வெற்றிக்கு பின் நின்ற போதும், திருமதி.ராகினி வெற்றிக்கு திரு.இராசகோபாலன் முன் நிற்கிறார் என்பது முற்றிலும் உண்மை. நல்ல குணம். பழகுவதற்கு இனிமையான நண்பர்.தனது மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு பாரதியின் வழியில் சம உரிமை தந்து நாட்டிய கலை வளர்க்க உறுதுணையாக இருந்து வருகிறார் என்பதற்கு இந்த மலரே சாட்சி தமிழகத்தில் எந்த பத்திரிகை ஆசிரியரும், தனது மனைவிக்காக இப்படி ஒரு பிரமாண்ட மலரை வெளியிட்டது இல்லை. நூல் ஆசிரியர் திரு.இராஜகோபால் அவர்களை மனிதத்தேனீ என்ற சொல்லலாம். தேனீயைப் போல உழகை;கக் கூடியவர். அவரது உழைப்பு மலரில் தெரிகின்றது. மகாபலிபுரத்தில் நாட்டியவிழா நடக்கும்போதெல்லாம் இலண்டனிலிருந்து மனைவியை அழைத்து வந்து நடனம் பார்க்க வைத்து மகிழும் நல்ல உள்ளம் பெற்றவர். ஆண்கள் எல்லோரும் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மனைவியின் உணர்வுகளை மதிப்பதற்கு. புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழ் அழியாமல் காக்கப்படுகின்றது. அது போல சில புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டியக்கலை அழியாமல் காக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு திருமதி.ராகினி இராசகோபால். 30 ஆண்டுகளாக கலைச்சேவை செய்து வருகிறார்கள். தமிழ் கங்கை இளவாலை அமுது அவர்களின் கவிதை ஒன்று போதும் அற்புதம் நினைவுகளின் பாதைகளில் படித்தால், படித்தவரின் கண்களில் கண்ணீர் வரும். வலி மிகுந்த புலம் பெயர்ந்த சோகத்திலும் சோகங்களை மறந்துவிட்டு நடனத்தில் ஈடுபட்டு பல மாணவிகளை உருவாக்கி, நாட்டியாலயா தொடங்கி இலண்டனிலும் தமிழ்க்கலையை வளரும் இளைய சமுதாயத்திற்கு பயிற்றுவித்து, அரிய பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். தனது முதல் நடன அசிரியை லீலா செல்வராஜ் தொடங்கி தனது மாணவிகள் புகைப்படங்கள் வரை மலரை அலங்கரிக்கின்றன. நடனவாரிசு ஷர்மினி கண்ணன் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மிகச்சிறப்பாக கட்டுரைகள் நடனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதக்களஞ்சியம் ஆவணம் போல தொகுத்து இருக்கிறார் மலர் ஆசிரியர் திரு.இராசகோபால் நாட்டிய சேவைக்காக கனடாவின் தமிழர் தகவல் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் திருமதி ராகினி. மனம் திறந்து ராகினி பேசுகிறார். கேள்வி பதிலாக அமைந்த நேர்காணல் மிக நன்று. இவரிடம் நடனம் பயின்று அரங்கேறிய மாணவிகளின் புகைப்படங்களையும் மறக்காமல் மலரில் இடம் பெறச் செய்துள்ளனர். தனது குருவை மதிப்பது மட்டுமின்றி, சீடர்களையும் மதிக்கும் பண்பிற்கு எடுத்துக்காட்டு பத்திரிகைத்துறையில் திரு.இராசகோபாலுக்கு குருவாக இருந்த முதுபெரும் பத்திரிகையாளர் இலண்டன் பொன். பாலசுந்தரம் அவர்களிடமிருந்து கட்டுரை வாங்கி மலரில் பதிப்பித்து உள்ளார். தனித்துவமான நடனக்கலைஞர் என்ற கட்டுரையில் அவர் எழுதியுள்ள வைர வரிகள் இதோ �புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்க்கையில் எமது கலைகள் சாகாவரம் பெற்றவையாக வளர ராகினி ராஜகோபால் போன்றோரின் சேவை என்றும் எப்போதும் தேவை. வாழ்க வளர்க ராகினியின் கலைத்தொண்டு� இலண்டன் வருகை தந்து சிறந்த நடிகை சரோஜா தேவியுடன் ராகினி இணைந்து நிற்கும் அரிய புகைப்படமும் மலரில் உள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்த்துரையும் கட்டுரையும் இந்த இணையர்களின் உழைப்பை பறைசாற்றுகின்றன. கலைகளில் சிறந்தது நாட்டியக்கலையே என்ற மாத்தளை சோமுவின் கட்டுரை, கல்வெட்டு வார்த்தைகள் திருமண வெள்ளிவிழாவில் சதங்கையும் பேனாவும், புகைப்படம் �மேட் ப்பார் இச் அதர்� என்ற சொற்றொடருக்கு ஏற்றவாறு வாழ்ந்து வரும் தம்பதிகள் என்பதை பறைசாற்றுகின்றன. நாட்டிய பேரொளி பத்மினியுடன் உள்ள புகைப்படங்கள் மிக நன்று. விநாய மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஏ.எஸ் கணேசன் �தமிழ்க்கலைகளை வளர்ப்பவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே� என்ற கட்டுரையில் மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்கள். அவரது வரிகள் இதோ �வேற்று மண்ணில் தமிழ் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆங்கில மற்றும் கறுப்பு இன பிள்ளைகளுக்கும் நமது நடனத்தைச் சொல்லி கொடுக்கிற அவர் பணி அறிந்து உள்ளம் நெகிழ்கிறது� இப்படி பாராட்டி விட்டு 30 வது ஆண்டு விழாவிற்கு சென்று மலர் பெற்று சிறப்பித்துள்ளார். இணை வேந்தர் திரு.ஏ.எஸ் கணேசன். பலரின் பண்பான பாராட்டுதல்களுடன் மலர் மலர்ந்து இலக்கியமணம் கமழ்கின்றது. மொத்தத்தில் கலை ஆர்வம் மிக்கவர்கள். நடனம் பற்றி அறிய விரும்புவர்கள் அனைவரும் படித்து மகிழ வேண்டிய வனப்புமிகு வடிவமான மலர். தெளிவான புகைப்படங்கள், நேர்த்தியான அச்சு, என தரமான படைப்பு, பாராட்டுக்கள் |
கருத்துகள்
கருத்துரையிடுக