மகாகவி பாரதியார் 125 வது ஆண்டு விழாச் சிறப்பு மலர் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef4be7cdd17a2&attid=0.2&disp=inline&realattid=f_gbukoah61&zw
மகாகவி பாரதியார் 125 வது ஆண்டு விழாச் சிறப்பு மலர் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : விழாக்குழுவினர்



கவிதையே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே கவிதையாகவும் வாழ்ந்த ஈடு இணையற்ற
மகாகவிக்கு மகுடம் சூட்டிய மலர் என்றால் மிகையன்று. பிரான்சு பாரிசில் வாழும்
தமிழர்கள் பாரதியாரின் 125வது பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடும் விதமாக
உலக அளவில் இனிய நந்தவனம் உள்பட பல்வேறு இதழ்களில் அறிவிப்பு செய்து முண்டாசுக்
கவி பாரதியார் பறி புதுக்கவிதை, மரபுக்கவிதை, கட்டுரை, கதை என நான்கு
பிரிவுகளில் போட்டி நடத்தி வெற்றி பெற்ற படைப்புகளை மலராகத் தொகுத்து
வெளியிட்டுள்ளனர். பாரதியாரைப் பற்றி எத்துணையோ நூல்கள் வந்த போது இந்த மலர்
காலத்தால் அழியாத அரிய கருத்துப் பெட்டகமாக பாரதியாரைப் பற்றி புரிதலை
உண்டாக்கும் குறிஞ்சி மலராக மலர்ந்துள்ளது.

உலக அளவில் போட்டி தேர்வு செய்து பரிசுகள் வழங்கி மலராக வெளியிட்ட
விழாக்குழுவினர் தலைவர் திரு.பா.தசரதன் துணைத் தலைவர் திரு.அலன் ஆனந்தன்.
செயலர் பாரிசு பார்த்த சாரதி ஒருங்கிணைப்பாளர் திரு.பாரிசு ஐமால் உள்பட
விழாக்குழு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

தன்வீடு தன் குடும்பம் என்று சுருங்கி விடாமல் “*தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ
வேண்டும் *” என்று கர்ஜனை செய்த கவிதைச் சிங்கம் பாரதியார் புகழ் உலகெல்லாம்
பரவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் விழா நடத்தி, மலர் வெளியிட்டு,
பரிசளிப்பு விழாவை மிகவும் கோலாகலமாக பாரதி வாழ்ந்த மண்ணாம் புதுவையில் நடத்தி
மகிழ்ந்தனர். புதுக்கவிதை பிரிவில் எனக்கு பாராட்டுப் பரிசு கிடைத்ததால்
பரிசளிப்பு விழாவிற்கு புதுவைக்கு நான் நேரில் பரிசினைப் பெற்று விழாவின்
சிறப்பை கண்டு களித்தேன்.

மலரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்த்துச் செய்தி தொடங்கி, புதுவை முதல்வர்
மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துரை இனிய நந்தவனம் ஆசிரியர் கவிஞர் த.சந்திரசேகரன்
வாழ்த்துரை வரை முத்தாய்ப்பாக உள்ளது.

மகாகவி பாரதியார், தனது செல்ல மனைவி செல்லம்மாள், மகள்கள் சகுந்தலா, தங்கம்மாள்
நண்பர்கள் ராமு, விஜயராகவன் ஆகியோருடன் உள்ள அரிய புகைப்படமும் மலருக்கு அழகு
சேர்க்கின்றது. பாரதியாரின் தம்பி சி. விசுவநாதன் வாழ்த்துரையும் மலரை
சிறப்பிக்கின்றது.

இம்மலரில் நாடறிந்த நல்ல எழுத்தாளர் சிந்தனையாளர், பேச்சாளர் செயலர்
திரு.வெ.இறையன்பு இஆப அவர்களின் “*பாரதி ய விஷ்னரி*” என்ற தலைப்பில்
ஆங்கிலத்தில் மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற கவிதைகளின் மேற்கோள்களுடன் மிகச்
சிறப்பாக உள்ளது. பாரதியின் கவிதைகளை மிக நுட்பமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து
இருக்கிறார்கள். இக்கட்டுரை படிக்கும் பிற நாட்டவர்களும், மொழியினரும்
பாரதியைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

போட்டியில் வென்ற “பாரதி கனவு பொய்த்தது” என்ற என் கவிதையும் மலரில் இடம்
பெற்றுள்ளது. பெரிய அறிஞர்கள் இடம் பெற்றுள்ள மலரில் எனது படைப்பும் இடம்
பெற்றது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும் உந்து சக்தியையும் தந்தது.
சொல்லிற்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லா வேந்தன் பாரதிக்கு தந்த மரியாதை இந்த
மலர்.

புதுக்கவிதையின் தலைப்புகள் அக்கினி குஞ்சுக்கு ஓர் அஞ்சலி, பாரதி நீ வருவாயோ
மறுபிறவி எடுத்து. புதியதோர் உலகம் செய்வோம் பாரதி கனவு பொய்த்தது. அமரகவி
பாரதி வல்லமை தாராயோ. உண்மைக்கவிஞர் *பாரத் பாரதி* பாவங்கள் போக்கவா பாரதி,
பாரதியின் பாப்பா பட்டு, இப்படி தலைப்புகளே ஆயிரம் பொருள் தரும் என்றால்
புதுக்கவிதைகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? கவிதைகள் அத்துணையும் கனிச்சாறு,
கற்க்கண்டு, பூச்செண்டு

மரபுக்கவிதையின் தலைப்புகள் தேசமிட்ட யுகக்கவியே திரும்பி வா வா, மனதிலுறுதி
வேண்டும், பாரதி புகழ் வாழும் தலைப்பாசை கவிஞன், பாரதி எனும் சாரதி, பாரதி பாட
வேணும் போர் முரசு, தேசம் வழங்கிய தீர்ப்பு சமத்துவம் பாடிய தனிப்பெரும்
கவிஞன், பாரில் பட்டினி வேரொடொழியும், பாரதியாரின் பார்வையிலே என்று மரவு
மாறாமல் மிகவும் நேர்த்தியான பலாச்சுளை கவிதைகள் பிரமிக்க வைக்கின்றன.

கருத்துகள்