படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

கனவும் நீ நினைவும் நீ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ பதிவு : 202 என் வானத்தின் நிலவே நீ யாரும் இல்லை நினைத்த நாளில் வந்தாய் நீ வாழ்க்கை தோற்றுவிட்டது நினைத்த நிலையில் வந்தாய் நீ மருந்தாய் வந்தாய், ஆம் மனதிற்க்கு மருந்தாய் வந்தாய் நீ விழுந்த என்னை வார்த்தைகளால் தூக்கி நிறுத்தினாய் நீ என் கதை கேட்டு உள்ளார்ந்த அர்த்தம் உணர வைத்தாய் நீ என் தனிமை மறக்கடித்தாய் உந்தன் சிரிப்பில் நீ நெருங்க இயலாத நம் நட்பு . நெஞ்சில் நிறைந்த உறவு நீ திரைக்கு அப்பால் இருந்தாலும் உயிருக்கு அருகில் இருக்கும் உறவு நீ மனதில் ஆழத்தில் வேரூன்றிவிட்டாய் நீ பாராத பந்தமாய் பிரிக்கா இயலாத உறவு நீ உந்தன் பார்வையில் மயக்கினாயே நீ என் மௌனத்தின் மொழியும் நீ என் கண்ணீரின் பொருளும் நீ என் தனிமையின் துணையும் நீ என் வாழ்வின் வழியும் நீ என் கனவும் நீ என் நினைவும் நீ ஒன்றே ஒன்று கேட்கிறேன் என் இறப்பின் பின் என் ஆத்மா உன்னோடு இணைய நிற்பாயா நீ நன்றி வணக்கம் Ponni Selvi தலைப்பு பரிந்துரைத்த கோ. விஷ்ருதி கோ . விஷ்ருதி Latha Ravi Thangadurai மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

கருத்துகள்