8.8.2026. நன்றி. இனியநண்பர் புகைப்படக் கலைஞர் எழுத்தாளர் தன்னம்பிக்கை பயிற்சியாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ்

மதுரை புத்தகக் குழுமத்தின் (புக் கிலிட்ஸ் ஆப் மதுரை) சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹைக்கூ கவிதைகள் குறித்து கவிஞர் எழுத்தாளர் விமர்சகர் என்ற பன்முகப் பார்வை கொண்ட கவிஞர் இரா. இரவி சிறப்புரை ஆற்றினார் .பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஹைக்கூ கவிதை எழுதுவது குறித்து கலந்துரையாடினர். எழுத்தாளர்களான மு. முருகேசன் , சின்மயானந்தம், திருமதி பத்மாவதி, முதுநிலை தமிழாசிரியர் கோபாலகிருஷ்ணன், ,குகன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் இயக்குனர் யோகராஜன், நத்தம் கள்ளழகர் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் திரு சுந்தர், யாதவர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா. சத்யபாமா , குகன் மெட்ரிகுலேஷன் பள்ளிதமிழ் ஆசிரியர் வாணி ஆகியோர் கலந்து கொண்டனர். சிந்தனை கவிஞர் கவிதாசன் காட்டும் வெற்றிப் பாதை மற்றும் நமது இலட்சியம் ,ஆங்கில புத்தகங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. தேயிலை தொழிலாளர் வாழ்வு குறித்த எரியும் பனிக்காடு -பி .எச். டேனியல் தமிழில் இரா .முருகவேல் எழுதிய நூல் மதிப்புரை செய்யப்பட்டது இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை மதுரை புத்தகக் குழுமத்தின் இயக்குனரும் பிரான்சிஸ் பதிப்பகத்தின் உரிமையாளருமான திரு. பிரான்சிஸ் நிக்கோலஸ் செய்திருந்தார்

கருத்துகள்