👀தமிழுக்கு அரும்பணியாற்றிய உன்னதத் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1870 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதியன்று மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் சூரியநாராயணன் என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், கல்லூரிப் படிப்பில் தமிழ் மற்றும் தத்துவத் துறையில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். செந்தமிழ் நடையில் இவர் சுவைபடப் பாடம் நடத்தும் ஆற்றலால் ஈர்க்கப்பட்டு, பிற துறை மாணவர்களும் இவருடைய வகுப்பிற்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்டனர். தமிழ் மீது கொண்ட அளப்பரிய காதலால், 'சூரியநாராயண சாஸ்திரியார்' என்ற தனது வடமொழிப் பெயரை 'பரிதிமாற் கலைஞர்' எனத் தூய தமிழில் மாற்றிக்கொண்டதோடு, சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவி, மாணவர்களுக்குத் தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். ஏராளமான நூல்களை இயற்றிய இவர், உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ் மொழியை 'செம்மொழி' என்று முதன்முதலில் மெய்ப்பித்து, தமிழரின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, தனது 33 ஆவது மிக இளம் வயதிலேயே (1903) மறைந்தார். தமிழ் மொழி உள்ளவரை அவர்தம் புகழும் பெருமையும் நிலைத்து நிற்கும்

கருத்துகள்
கருத்துரையிடுக