இருமொழி இருக்க மும்மொழி எதற்கு?
- கவிஞர் இரா. இரவி
*****
உலகின் முதல் மொழியான தமிழும்
உலக மொழியான ஒப்பற்ற ஆங்கிலமும்
இருவிழியாக இருமொழி இருக்க
இன்னல் தரும் மூன்றாம் மொழி எதற்கு?
இந்தியை புகுத்திட சதி செய்கின்றனர்
இந்தியை விரும்பவில்லை தமிழர்கள்
வேண்டாத மொழியை திணிப்பது ஏனோ?
வீண் வம்புக்கு சண்டைக்கு அழைப்பது ஏனோ?
இந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களிடம்
எப்போதும் இருக்கும் அறிந்திடுங்கள்!
வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்
வற்புறுத்தி திணிக்க முயல்வது மடமை!
இருமொழி படிப்பதற்கே இன்னல் வருவோருக்கு
மும்மொழி கொடுப்பது முறையே அன்று
ஏழைக்குழந்தைகளுக்கு எதற்கு இந்தி
இந்தி படித்தோரே இங்கு வருகின்றனர் பிழைக்க
மூன்று மொழியை ஏற்றால் தான் நிதி என்பது
முட்டாள்தனமான மூர்க்கத்தனமான கருத்து!
கல்வி நிதியை தராமல் இருப்பது முறையோ?
கண்மூடித்தனமாக திணிப்பது சரியோ?
சர்வாதிகாரப் போக்கினை விடுத்து
சகமாநில உணர்வை மதித்து நடந்திடு!
உடனடியாக கல்விநிதியை விடுவித்திடுக!
உமக்கு அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டை மதித்திடுக!

கருத்துகள்
கருத்துரையிடுக