26.4.2026. மாமதுரைக் கவிஞர் பேரவையும் ,புரட்சிப் பாவலர் மன்றமும் இணைந்து நடத்திய சிந்தனைக் கவியரங்கம் நிறுவனர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது .
26.4.2026. மாமதுரைக் கவிஞர் பேரவையும் ,புரட்சிப் பாவலர் மன்றமும் இணைந்து நடத்திய சிந்தனைக் கவியரங்கம் நிறுவனர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது .
விழா மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது.
"தலைநிமிரவைக்கும் நம்தமிழ் " எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மன்றத்தின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.ஆலோசகர் வீர ஆதிசிவத் தென்னவன் வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா . கல்யாணசுந்தரம்,துணைத் தலைவர் முனைவர் இரா. வரதராசன் முன்னிலை வகித்தனர் . துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் .
நிறுவனர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப்பற்றிய உரை நிகழ்த்தினார்கள் .கவிதையும் பாடினார்கள்.
கவி வித்தகர் பொற்கைப் பாண்டியன் ,தமிழ்த் திருமகன் கருங்கல் கி .கண்ணன் முன்னிலை வகித்தனர் .புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் .கவிஞர் பேனா மனோகரன் வாழ்த்துரை வழங்கினார் .
கவிஞர் இரா .இரவி தலைமையில் கவிஞர்கள் ,இரா. கல்யாணசுந்தரம்,முனைவர் வரதராஜன் ,கு .கி . கங்காதரன் ,புலவர் மகா முருகு பாரதி ,கு .பால் பேரின்பநாதன் , கி .கோ .குறளடியான் , பா .பழனி,மா,முனியாண்டி,பா .பொன்பாண்டி , ந .சுந்தரம் பாண்டி ,ச .லிங்கம்மாள், கமலா சந்திரசேகர் ,அஞ்சூரியா க . ஜெயராமன் ,ஜோ .மகாலெட்சுமி ,ம .வேல்பாண்டி ,செ.அனுராதா ,அரங்க கிரிதரன் ,வீரபாகு , ,வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணன், ,சிறுமி ஸ்ரீஜா ,போ .சிவசத்யா,சாந்தி ,நா.குருசாமி ,பறம்பு நடராசன் ,மா .பிரதித் ,நா .வேல்முருகன் என்ற நாவே ,கி .காயத்ரி , மா ,இதயத்துல்லா ( இளையான்குடி ),ம சு .பாஅரசி ஆகியோர் கவிதை பாடினார்கள்.
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் எழுதிய தமிழன்னையே போற்றி , கருங்கல் கி .கண்ணன் எழுதிய அருள்மிகு மண்டைக்காட்டுப் பகவதி அம்மன் திருத்தமிழ்த் திருப்பாமாலை ,கவிஞர் அரங்க கிரிதரன் எழுதிய மரபுத் தமிழ்மாலை ,கவிஞர் பால் பேரின்பநாதன் எழுதிய தமிழும் தமிழரும் ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன .பேரவையின் சார்பில் .நூல் ஆசிரியர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி தென்னவனார் நினைவு விருதுகளை புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் வழங்கினார் .
சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் புலவர் மகா முருகு பாரதி ,அஞ்சூரியா க . ஜெயராமன் ஆகியோருக்கு தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்.
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மனைவி வீர .செந்தாமரை,பள்ளியின் தலைமையாசிரியர் அமுது ரசினி ,கவிக்குயில் இரா .கணேசன் ,மனிதநேயம் மா .பரமானந்தம், தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர் கவிஞர் சித்தார்த் பாண்டியன் ,யாதவர் கல்லூரி பேராசிரியர் பரமானந்தம்,அழகுமலை ,சரண்யாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
படங்கள் புகைப்படக் கலைஞர்கள் மதுரை உலா ,ரெ.கார்த்திகேயன் ,இரமேஷ் கை வண்ணம் .










































































கருத்துகள்
கருத்துரையிடுக