மதிப்புரை கவிஞர் வசீகன் ஆசிரியர் பொதிகை மின்னல்.மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை,சென்னை.17. கவிஞர் இரா.இரவி வழங்கும் "கவிதாசனின் வெற்றி முழக்கம்"
மதிப்புரை கவிஞர் வசீகன் ஆசிரியர் பொதிகை மின்னல்.மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை,சென்னை.17. கவிஞர் இரா.இரவி வழங்கும் "கவிதாசனின் வெற்றி முழக்கம்"
கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு அறிமுகம் தேவையி ல்லை. 35க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்து இருப்பவர். தமிழ், சமுதாய மேம்பாடு என்று இணைய தளங்கள் மற்றும் ஊடகங் களின் வழியே இயங்கிவருபவர். இவர் எழுதி 37 ஆவது நூலாக வெளிவந்தி ருக்கின்றது “சிந்தனைக் கவிஞர் கவி தாசனின் வெற்றி முழக்கம்” என்ற இலக் கியச் சுவை கொட்டும் நூல்.
சிந்தனைக் கவிஞர் என்ற சிறப்பு பெற்ற கவிஞர் கவிதாசனின் 20 நூல் களை எடுத்துக் கொண்டு அவற்றை மதிப்பிட்டு ஆய்வு செய்து 20 கட்டுரை கள் மூலம் சிறப்பான நூலாக வழங்கி யுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் இரா. இரவியின் பார்வையில் நூலின் சிறப்பை மேலும் உயர்த்துகின்றது. கவிதாசனின் கருத்துக்களோடு தனது கருத்துக்க ளையும் தக்க வகையில் கோர்த்து வழங்கி உவகை ஊட்டுகின்றார்.
கவிதாசன் தனது நூல்களில் சொல்ல வருவதை, மிக எளிமையாக்கியும் சொல் லித் தந்துவிடுகின்றார். அது ‘கவிதாசனின் நூல்களை படிக்க மாட்டோமா?’ என்ற ஆர்வத்தை ஊட்டுகின்றது. ஒவ்வொரு நூல்களின் தலைப்பிலேயே கட்டுரை களை தந்து கிடைக்கும் இடம் முகவரியும் கொடுத்துள்ளார். சக நூலாசிரியரை உயர் த்திப் பிடித்து அவரை மேலும் உயர்த்த துடிக்கும் அரும் குணம் யாருக்கு வரும்.
நிறைவில் வெற்றி, தன்னம்பிக்கை குறித்த 3 கவிதைகளையும் இணைத்து வழங்கி நூலை ஒளிர வைத்திருக்கின்றார் நூலாசிரியர் இரா.இரவி. இந்நூல் நிச்சயம் அனைவராலும் போற்றப்ப்டும்.
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 102 பக்க இந்நூலின் விலை ரூ 100/-& மட்டுமே. பேச: 044 24342810.

கருத்துகள்
கருத்துரையிடுக