"சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்களின் வெற்றி முழக்கம்" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .வாழ்த்துரை சிந்தனைக்கவிஞர் கவிதாசன்

"சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்களின் வெற்றி முழக்கம்" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .வாழ்த்துரை சிந்தனைக்கவிஞர் கவிதாசன் `என் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டுகிறார்’ - சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இயக்குனர் மற்றும் தலைவர் மனிதவள மேம்பாட்டுத்துறை ரூட்ஸ் நிறுவனங்கள், கோவை. “சிக்கனத்தில் சிறந்த சிக்கனம் சொற்சிக்கனம்” என்பார் முதுமுனைவர். இறையன்பு, இ.ஆ.ப அவர்கள். அதற்கு ஏற்ப தனது சிந்தனையில் மலரும் குறுங்கவிதைகளால் என்னுள் நிறைந்தவர் கவிஞர் இரா. இரவி அவர்கள். அவருடைய கவிதைகளுக்கு நானும் தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன். அவர் என் மீது கொண்டுள்ள எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாக எனது படைப்புகளை வாசித்து வாசித்து வாழ்த்துப் பொழிவில் என்னை எப்பொழுதும் நனைய வைத்து, மகிழ வைப்பதில் முந்திக் கொள்வார். மேதகு ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், அவர்களுடன் 1994 முதல் 2014 வரை எனக்கு நிகழ்ந்த அனுபவங்களுடன், பல்வேறு அறிஞர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், கவிஞர்கள், உயரதிகாரிகள், என 18க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தொகுத்து “உலக உத்தமர் கலாம்” என்ற நூலினை 2015ம் ஆண்டு கோவையில் வெளியிட்டோம். அந்நூலுக்கு அழகு சேர்க்கும் விதமாக, கவிஞர். இரா. இரவி அவர்கள் வழங்கியுள்ள மாமனிதர் அப்துல்கலாம் என்ற கட்டுரை பாராட்டுக்குரியது. சமீபத்தில், கோவை, இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நடத்திய எனது படைப்புகள் மீதான பன்னாட்டு ஆய்வில், கவிஞர் இரா.இரவி அவர்களும் பங்கேற்று, ”கவிதாசனின் தன்னம்பிக்கை சிந்தனைகள்” என்ற தலைப்பில் வழங்கிய கட்டுரை, ஆய்வுக் குழுவினரால், மிகச்சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டு பரிசும் பாராட்டும் பெற்றது, மகிழ்வான தருணம். அதைத் தொடர்ந்து, எனது பல்வேறு நூல்களை நீங்கள் ஆய்வு செய்து, நூலாக்கினால், வாசகர் உலகம் மட்டுமல்ல நானும் மகிழ்வேன் என அவரை வேண்டிக் கொண்டதன் விளைவாக உருவாகியுள்ளதுதான் இந்நூல். இந்நூலை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ள கவிஞருக்கும், இந்நூலை வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்தாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன். என்றென்றும் தன்னம்பிக்கையுடன் (கவிதாசன்) 24, கவியரங்கம், பிருந்தாவன் கார்டன் மணியகாரம்பாளையம் சாலை கணபதி, கோவை – 641 006. அலைபேசி : +91 98946 83013 (காலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டும்)

கருத்துகள்