மனித அவமதிப்புக்கு முடிவுகட்டிய சமூக சீர்திருத்தம்!
பராசக்தியில் எழுதிய 'வசனம்'... ஆட்சியில் நடத்திய 'சாதனை': கை ரிக்ஷா ஒழிப்பு - ஒரு சமூகப் புரட்சி!
1952-ம் ஆண்டு 'பராசக்தி' திரைப்படத்தில் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய ஒரு வசனம் அன்றைய சென்னை மாநகரின் அவலத்தை தோலுரித்துக் காட்டியது.
அந்த வசனத்தில் ஒரு போலீஸ்காரர் சிவாஜி கணேசனைப் பார்த்து கிண்டலாகச் சொல்வார்: "மெட்ராஸுக்கு நீ மேயரா வர்ற காலத்தில் மிருகத்தையெல்லாம் மனுஷனாக்கலாம்" என்று.
அன்று பேனாவால் எழுதிய அந்த அறச்சீற்றத்தை, தான் ஆட்சிக்கு வந்தபின் அதிகாரத்தால் நிஜமாக்கிக் காட்டினார் கலைஞர்.
🎬 அன்று பராசக்தியில் கலைஞர் தீட்டிய வசனம்:
சிவாஜி கணேசன்: "மாடு செய்த புண்ணியம் கூட இந்த மனுஷன் செய்யலையா!"
"ஆமா... மதராஸ்ல மனுஷன் மிருகமாத்தான் இருக்கான்."
போலீஸ்காரர்: "ஏய்!"
சிவாஜி கணேசன்: "உங்களைச் சொல்லலைங்க... முதுகெலும்பு ஒடிய மூட்டை வண்டி இழுக்கிறானே... குதிரைக்குப் பதிலாக நரம்பு தெறிக்கத் தெறிக்க ரிக்ஷா இழுத்துக் கூனிப் போயிருக்கிறானே... நாயைப் போலச் சுருண்டு நடைபாதையில் குடும்பத்தோடு தூங்குகிறானே... அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலுகால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனைச் சொன்னேன்.
சென்னை புனிதமான நகரம்... இங்கே மனிதன் மிருகம்."
போலீஸ்காரர்: "சரிதான் போடா! மெட்ராஸுக்கு நீ மேயரா வர்ற காலத்தில் மிருகத்தையெல்லாம் மனுஷனாக்கலாம்."
சிவாஜி கணேசன்: "ஏன்? இப்பவும் எத்தனையோ மிருகங்கள் மனுஷ உருவத்தில்தானே இருக்கு!"
பராசக்தி திரைப்பட வசனம் நிஜமான தருணம்;
திரையில் சொன்னதை நிஜத்தில் செய்ய கலைஞர் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை.
1967-ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபோதே இதற்கான சிந்தனைகள் தொடங்கின. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் ஆட்சி என்பது நிர்வாகம் மட்டும் அல்ல,
மரியாதையை மீட்டெடுக்கும் கருவி என்ற புரிதலோடு செயல்பட்டார்.
தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் சில முடிவுகள் ஆட்சி தீர்மானங்கள் மட்டும் அல்ல; அவை மனித மரியாதையை மீட்டெடுத்த மனிதநேய புரட்சிகள்.
அத்தகைய ஒரு முக்கியமான, ஆனால் போதுமான அளவு பேசப்படாத சமூக மாற்றம் தான் கை ரிக்ஷா (Hand-pulled Rickshaw) முறையை ஒழித்து,
மனிதனை மனிதன் இழுக்கும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த அவலத்தை சட்டத்தாலும், அரசியல் துணிவாலும் முடிவுக்கு கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்.
சரியாக ஜூன் 3, 1973 அன்று தனது 50-வது பிறந்தநாளை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதனை மனிதன் இழுக்கும் அந்த 'கை ரிக்ஷா' முறையை முற்றாக ஒழிப்பதாக அறிவிப்பை வெளியிட்டார் தலைவர் கலைஞர்.
கை ரிக்ஷா ஒரு தொழில் அல்ல – ஒரு அவமதிப்பு;
கை ரிக்ஷா என்பது ஒரு மனிதன், மற்றொரு மனிதனை அல்லது பலரை
விலங்கு போல இழுத்துச் செல்லும் ஒரு நடைமுறை.
இது வெறும் வறுமை அல்ல,
இது வெறும் வேலை வாய்ப்பின்மை அல்ல,
இது மனித மரியாதைக்கே எதிரான அமைப்பு!
திராவிட இயக்கம் ஆரம்ப காலம் முதலே, இந்த வகை மனித அவமதிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த இயக்கம்.
“மனிதனை மனிதன் இழுக்கக் கூடாது”
என்பது வெறும் வாசகம் அல்ல —
அது ஒரு அரசியல் கோட்பாடு.
இந்த முடிவு எடுக்கப்பட்டபோது,
“இது பாரம்பரிய தொழில்” என்ற வாதமும் எழுந்தது
“வேலை வாய்ப்பு போய்விடும்” என்ற அச்சமும் கூறப்பட்டது
ஆனால் கலைஞர் எடுத்த நிலைப்பாடு தெளிவானது:
மனித மரியாதையை இழக்கும் எந்தத் தொழிலும் அரசின் பாதுகாப்பில் இருக்க முடியாது.
மாற்றாக வழங்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்கள்;
கை ரிக்ஷாவை ஒழித்துவிட்டு அந்த தொழிலாளர்களை அவர் வீதியில் விட்டுவிடவில்லை.
👉 மாற்றுத் தொழில்
👉 மாற்று உபகரணம்
👉 மாற்று வாழ்வாதாரம்
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தொழிலாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் ரிக்ஷாக்களையும், தையல் இயந்திரங்களையும் தலைவர் கலைஞர் வழங்கி, "மிருகமாய் ஆக்கப்பட்ட மனிதர்களை" நிமிர்ந்து வாழ வைத்தார்.
பல இடங்களில்
அரசு ஆதரவுடன் சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன.
அரசு ஆதரவுடன் வழங்கப்பட்ட இந்த மாற்றத்தால், தொழிலாளர்கள் விலங்கு போல இழுக்கும் நிலையிலிருந்து, தன்னம்பிக்கையுடன் சைக்கிள் மிதிக்கும் சுய உழைப்பாளர்களாக மாற்றப்பட்டனர்.
இந்த முடிவு, ஒரு போக்குவரத்து மாற்றம் மட்டும் அல்ல; இது சமத்துவத்தின் அறிவிப்பு. மனித மரியாதையை இழக்கும் எந்தத் தொழிலும் அரசின் பாதுகாப்பில் இருக்க முடியாது என்ற கலைஞரின் அரசியல் துணிவு இது.
தலைவர் கலைஞரின் அரசியல் – மனிதனை மையமாக வைத்தது;
தலைவர் கலைஞரின் ஆட்சியில் மனிதனை இழுக்கும் கை ரிக்ஷாவும் மறைந்தது.
மனிதனை அடக்கும் சுவர்களும் உடைக்கப்பட்டன.
மனித மரியாதை அரசின் கொள்கையாக மாற்றப்பட்டது.
தலைவர் கலைஞர் எழுதிய நூல்களில், திரைப்பட வசனங்களில் மட்டுமல்ல, அவர் நடத்திக் காட்டிய ஆட்சியிலும் இந்த சிந்தனை தெளிவாக இருந்தது.
மரியாதையை அரசியல் செய்த தலைவர்;
இன்றும் சில சமூக அவலங்களை “இது வேலை வாய்ப்பு” என்று நியாயப்படுத்த முயல்கிறோம். ஆனால் தலைவர் கலைஞர் காட்டிய பாதை சொல்வது ஒன்றே: மனித மரியாதையை அழிக்கும் எந்த அமைப்பும் எத்தனை காலம் இருந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டியது தான்.
கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாவை வழங்கிய முடிவு, தலைவர் கலைஞரை ஒரு முதல்வராக மட்டுமல்ல, மனித மரியாதையின் அரசியல் தலைவராக வரலாற்றில் நிலைநிறுத்துகிறது!
#நீங்கா_நினைவுகளுடன்
- கலைஞரிஸ்ட்
#பராசக்தி #திராவிடஅரசிய

கருத்துகள்
கருத்துரையிடுக