படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

பராசக்தி: திரையில் எரிந்த பகுத்தறிவுத் தீ! 🔥 தமிழ் சினிமா வரலாற்றை "பராசக்திக்கு முன், பராசக்திக்கு பின்" என்று இரண்டாகப் பிரிக்கலாம். 70 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இந்தப் படம் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருந்தவர் கலைஞர் கருணாநிதி எனும் ஒப்பற்ற பேனா வித்தகர். ⚖️ அந்த நீதிமன்றம் இன்றும் சாட்சி சொல்கிறது! "கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக..." என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் அந்த அனல் பறக்கும் வசனங்கள், வெறும் சினிமா வசனங்கள் அல்ல; அவை அடக்கப்பட்ட மக்களின் ஆக்ரோஷக் குரல். போலி பக்தியின் முகத்திரை கிழிப்பு; பக்தியை பகல் வேஷமாக்கி, அதன் பின்னால் ஒளிந்துகொண்டு சமூகக் குற்றங்களைச் செய்யும் கயவர்களைத் தோலுரித்துக் காட்டியது. பெண்ணுரிமை முழக்கம்; வறுமையும், வஞ்சகமும் ஒரு பெண்ணைத் தற்கொலை வரை துரத்தும் அவலத்தை, சமூகத்தின் மனசாட்சியிடம் கேள்வி கேட்டது. பகுத்தறிவுப் பாடம்; விதியின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டத்தையும், பஞ்சத்தை மஞ்சத்திற்கு அழைக்கும் வஞ்சகர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. 🛡️ திராவிடச் சித்தாந்தத்தின் திரை வடிவம் பராசக்தி என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு சமூக மாற்றம். அதிகார வர்க்கமும், மூடநம்பிக்கை கும்பலும் இந்தப் படத்தைப் பார்த்து இன்றும் நடுங்குகிறார்கள் என்பதற்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் புறக்கணிக்கப்பட்டதே ஒரு சாட்சி. ஆனால், மக்களின் இதயங்களில் இருந்து இந்தப் படத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது. ✨ கலைஞரின் காலத்தால் அழியாத படைப்பு பராசக்தி 🔥 தமிழ்நாடு இன்று பல சமூக முன்னேற்றங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்கு விதை போட்டது கலைஞரின் பேனா முனைதான். எளிய மக்களுக்கும் புரியும் வகையில் அரசியலையும், பகுத்தறிவையும் திரைப்படங்கள் வாயிலாகக் கடத்திய திராவிடக் காவலன் கலைஞரின் பராசக்தியை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம். "இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை." திரைக்கதை வசனங்களால் சமூகத்தைச் செதுக்கிய கலைஞரின் புகழ் ஓங்குக! 🖋️🖤❤️ #நீங்கா_நினைவுகளுடன் - கலைஞரிஸ்ட்

கருத்துகள்