படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

வணக்கம் ." 'மதுரைக் காஞ்சி'யில் மன்னன் எவ்வாறு சிறு எதிர்ப்பும் கிளம்பாமல் இருக்கப் புத்திக் கூர்மையுடன் செயல்பட்டான் என்பதை விளக்க அவன் எப்படிப் பகைவர்களை அழித்ததோடு அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் துணை வழியையும் அழித்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் போலவே அந்நகரில் காவலர்கள் இரவுப் பொழுதின் மூன்றாம் பகுதியில் கள்வர்களிடமிருந்து அந்நகரைக் காப்பாற்ற அக்கறையோடு பணியில் ஈடுபட்டு உயிருக்கு இறுதி பற்றி எண்ணாமல் காவலில் சிறந்து விளங்கினார்கள் என்றும் 'மதுரைக்காஞ்சி' சித்தரிக்கிறது. முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 419..இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும். வணக்கம் ." சிறந்த மேலாளர் கடினமான இலக்கை நிர்ணயிப்பார் .பிறகு அதை அடைவதற்கான திட்டத்தை மிகவும் கச்சிதமாக வகுப்பார். அந்தத் திட்டத்தின் பல்வேறு உட்பிரிவுகளை வரிசைக் கிரமமாகப் பட்டியலிடுவார். அதற்குப் பிறகு அதைச் செயல்படுத்துவார். அந்தத் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் முழு வீச்சில் தீவிரம் காட்டிச் செயல்படுத்தும் போது கண்காணிப்பையும் அதன் முன்னேற்றத்தையும் முறைப்படுத்துவார். ஒவ்வொரு நாளும் அது எந்த நிலையை அடைந்திருக்கிறது என்பதை, தான் வகுத்த அட்டவணையோடு பொருத்திப் பார்ப்பார். பின்தங்குகிறபோது தொய்வுக்கான காரணத்தை கலந்தாலோசித்து மூலதாரங்கள் மூலமோ, பணியாளர்கள் மூலமோ சரிக் கட்டுவார். அந்த செயல் தரமாக இருக்கிறதா என்பதையும் வல்லுநர்களைக் கொண்டு உறுதிப்படுத்துவார். திட்டம் முடிந்ததும் அதன் பலன்களைக் கூர்மையாக ஆய்வு செய்வார். போதிய அளவிற்குப் பலன்கள் இல்லையென்றால் தேவையான மாற்றங்களைச் செய்து அதை மறுபடியும் செயல்படுத்தி வெற்றியானதாக மாற்றுவார். முற்றிலும் பயனற்றது என்று முடிவு செய்தால் அதைத் தூக்கியெறிந்து விட்டு அதில் ஏற்பட்ட தவறுகளைப் பட்டியலிட்டு அதற்குப் பிறகு அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்ளுவார். முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 418&419..இந்த நாள் கடின இலக்கிற்காக உழைக்கும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்