தன்னம்பிக்கையின் உறைவிடம் - டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் நினைவு நாளில்..,*
தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆன இவர், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?', ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை எழுதியவர். இவர் எழுதிய *"என்னைச் செதுக்கிய எண்ணங்கள்"* எனும் படைப்பு பெரும்பான்மையான வாசகர்களை கவர்ந்தது. எனது கல்லூரி பருவத்தில், மிகவும் பிடித்த மற்றும் முக்கியமான வரிகளை, பென்சிலால் அடிக்கோடிட்டு குறித்து வைத்து அடிக்கடி படித்து வந்திருக்கிறேன். பின்பு கட்டுரை தொடரை சேகரித்து பாதுகாத்து விரும்பும் போதெல்லாம் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரின் சிந்தனைகள் என்னுள் ஆழப்பதிந்து வேரூன்றியது, நான் +2 முடித்திருந்த பருவத்தில்.
ஒரு ஆழமான சமூக சிந்தனையுடன் செயல் பட்ட சமூக சீர்திருத்தவாதி. அவருடைய தன்னம்பிக்கை கட்டுரைகள் இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒருமித்து இருக்க வேண்டும், தொடர் எண்ணங்கள், நேர்மறை சிந்தனையுடன் வெளிப்படவும், விடாமுயற்சியுடன் செயலில் ஈடுபட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
'உன்னால் முடியும் தம்பி' என்ற சொல்வழக்கு இவர் காலத்தில்தான் பிரபலம் ஆனது. ஆனால் நம்முடைய சமூக கட்டமைப்பில் அரசியல் வழியொற்றி வரும் சிந்தனைதான் பெரிய அளவில் பாமர மக்களை சென்றடையும் ஒரே வழி. அரசியல் இவரை போன்றவர்களுக்கு ஒத்துவராத செயல்பாடு. அறிவும், அர்ப்பணிப்பும் இருந்தும் – அரசியல் பார்வை இல்லாமல் மறக்கப்பட்ட நாயகன் அவர். “மக்கள் சக்தி இயக்கம்" – ஒரு முன்னோடி கனவு, மக்கள் கவனிக்காதது, டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி அவர்களை முழுமையாகக் கண்டு கொள்ளாதது,
அவரை பயன்படுத்திக் கொள்ளாதது மக்களுக்கே ஒரு நெறி இழப்பு. இருப்பினும் அவரின் முயற்சி, அவரது சிந்தனைகள் பலரிடம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியது
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக