சிடி சினிமா மதுரையிலிருந்த பழமையான தியேட்டர். ஊமைப்படங்களாக திரைப்படங்கள் வந்தபோதே மதுரை தெற்குமாசி வீதியில் சிடி சினிமா தொடங்கப்பட்டது.
ஊமைப்படங்கள் திரையிடப்படும்போது அப்படத்தின் கதையை சொல்ல ஒருவரை திரையரங்குகளில் நியமித்திருக்கிறார்கள். திரைப்படங்கள் பேசத்தொடங்கியதை குறிக்கும் சொல்லே டாக்கி. 1930களுக்குப்பின் பேசும்படம் வந்தபோது “படமே பேசும், ஆள் கதை சொல்வது கிடையாது, இந்த அதிசயத்தை சிடி சினிமாவில் பாருங்கள்” என்று தண்டோரா போட்டு துண்டுபிரசுரம் வழங்கியுள்ளனர்.
இராயல் டாக்கீஸ் தயாரித்த 1937இல் தயாரித்த சிந்தாமணி எனும் திரைப்படம் 3 ஆண்டுகள் சிடி சினிமாவில் ஓடிய லாபத்தைக் கொண்டு கீழவெளிவீதியில் சிந்தாமணி திரையரங்கம் கட்டப்பட்டது. மேலும், சிடி சினிமாவில் மாயாமாயவன், தியாகபூமி, கோவலன் நாடகம், மாயா மச்சீந்திரா, சக்குபாய் போன்ற பல படங்கள் வெளியாகியுள்ளன. எம்.ஜி.ஆரின் பல படங்கள் இங்கு வெளியாகியுள்ளன. Madurai Thoonganagaram

கருத்துகள்
கருத்துரையிடுக