கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. அப்படி இருந்தாலும் அதுவும் இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் ?
அந்த கடவுள் எந்தத் துகள்களால் ஆனது அதன் மூலக்கூறுகள் என்ன என்று ஆராய்வேன்.
எல்லாம் முன்னரே எழுதப்பட்டுவிட்டது நம்மால் ஒன்றையும் மாற்ற முடியாது என்பவர்கள் கூட சாலையைக் கடக்க இருபக்கமும் கவனிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு மிகச்சிறிய நட்சத்திரக் குடும்பத்தின் ஒரு மிகச் சாதாரணமான ஒரு கிரகத்தில் வாழும் சற்றே மேம்பட்ட குரங்கினம் தான் நாம்.
கடவுளின் மேல் எல்லாம் பயம் இல்லை. அவரை நம்புகிறவர்கள் மீதுதான் பயமே.
கடவுள் இந்த உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்?
இந்தக் கேள்விகளைக் கேட்பவர்களுக்காக ஒரு நரகத்தைப் படைத்துக் கொண்டிருந்தார்.
கடவுள் சொர்க்கம் நரகம் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். இருட்டைக் கண்டு அஞ்சும் மக்களுக்காகச் சொல்லப்பட்ட கட்டுக்கதைகள்.
உடலில் மூளையைத் தவிர வேறு எந்த பாகமும் செயல்படாத ஒரு விஞ்ஞானியின் கூற்றுகள் இவை. இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் விஞ்ஞானக் கருத்துகள் மூலம் உலகில் மிக மோசமான மூடநம்பிக்கையான கடவுள் நம்பிக்கையைச் சராமாரியாகக் கேள்வி எழுப்பியவருமான Dr.Stephen William Hawking கூறியது.
பெரிய அறிவியல் படிப்புகளைப் படித்துவிட்டும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என கூறிக் கொள்பவர்கள் ஹாக்கிங்கைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக