உரைகல்லின் விழுதுகள்
******************************
ஜனவரி 24
===========
---------------------------------------------------------------------------
தேசிய பெண் குழந்தைகள் தினம்
---------------------------------------------------------------------------
** 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி நம் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக பதவி ஏற்றார்.
** இவர் பதவி ஏற்ற தினத்தை பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
**2009 ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும் அவர்களின் ஆரோக்கியம் காக்கவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் பல கிராமங்களில் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருதி பெண் குழந்தை பிறந்த பின் அழித்து விடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.மொத்த இந்தியாவினையும் எடுத்துக் கொண்டால் நகரப் புறங்களை விட கிராமப் புறங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சொல்கிறது.பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரம் குறைந்து கொண்டு வருகிறது..
பெண்களுக்கு நல்ல எதிர்காலத்தை படிப்பின் மூலமும் பாதுகாப்பின் மூலமும் கொடுக்க ஆவன செய்ய வேண்டியது எல்லோருடைய கடமை.
பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம் அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு மாணவிகளுக்கும் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. சில இடங்களில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது அவர்கள் பள்ளி செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாசாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணமா இருக்கிறது.
பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது.குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது.குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல் வேண்டும்
உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா வலியுறுத்துகிறது.பெண் குழந்தைகள்
அதிகளவில் கல்வி பெறுவதற்கு அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா வலியுறுத்துகிறது.
பெண் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தும் சமூகத்தில் இருந்தும் பல வகையில் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதிப்புகள் உருவாகின்றன. பெண் குழந்தைகள் தங்களை தற்காத்துக்கொள்ள அடிப்படை கல்வியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் பாரதி செல்வா.
சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் பிறப்புரிமையை நிலைநாட்டவும், பாலியல் வன்புணர்ச்சியில் இருந்து பெண்குழந்தைகளை காக்கவும் கடுமையான சட்டங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையும்
பெண்களை உயர்வாக மதித்து நடத்தும் நாடுதான் முன்னேறும் என்று காந்தியடிகளும்
பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா என்று பாரதியும் பெண்களைப்பற்றி கூறி உள்ளார்கள்.
பெண்குழந்தைகளை பாதுகாப்போம்.
தொகுப்பு... முருகு வள்ளி ....

கருத்துகள்
கருத்துரையிடுக