மதுரை அழகர்கோவில் பொய்கரைப்பட்டி மூனூரில் அமைந்துள்ள மூன்றாம் பார்வை அறக்கட்டளையின் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நிறுவனர் திரு பழனியப்பன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளும், பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அழகர்கோவில் பொய்கரைப்பட்டி மூனூரில் அமைந்துள்ள மூன்றாம் பார்வை அறக்கட்டளையின் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நிறுவனர் திரு பழனியப்பன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளும், பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதி மாணவர் சக்தி முருகனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாயிற்று. விடுதி மாணவர் கார்த்திக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி, தொழிலதிபர் L.K. சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மற்றும் இந்நிகழ்வில் பார்வை மாற்றுத்திறனாளி 30 குடும்பங்களுக்கும் மற்றும் விடுதி மாணவர்களுக்கும் புத்தாடையும் இனிப்பும் வழங்கப்பட்டது. இவ்விடுதியின் ,இயக்குநர் கோபி , APL பாஸ்கர் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். .படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

கருத்துகள்