உரைகல்லின் விழுதுகள்
========================
சர்வதேச பிரெயில் எழுத்து முறை நாள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
லூயி பிரெய்ல்
********************
-----------------------------------------------------------------
பிறந்த தினம் ஜனவரி 4- 1809
நினைவு தினம் ஜனவரி 6- 1852
-----------------------------------------------------------------
இவரின் சிறப்பு
^^^^^^^^^^^^^^^^^^^^
**பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர்.
பிரெய்ல் எழுத்துமுறை உருவாக்கம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிரெய்ல் படித்த பள்ளிக்கு கேப்டன் சார்லஸ் பார்பர் என்ற இராணுவ வீரர் வருகை தந்தார். இரவு நேரங்களில் பேசிக்கொள்ளாமல் இராணுவ வீரர்கள் செய்திகளை பறிமாறிகொள்ள ஒருமுறையை அவர் உருவாக்கியிருந்தார்.பணிரெண்டு புள்ளிகளை கொண்ட இந்த முறையில் எளிய செய்திகளை பறிமாறிகொள்ளலாம்.இந்த முறையை இராணுவம் மறுத்துவிட்டது. பார்வையற்றோர் பள்ளிக்காவது பயன்படட்டும் என்று சார்லஸ் தனது முறையை பிரெய்ல் படித்த அந்த பள்ளியில் விளக்கிக்காட்டினார்.
இதைப் பற்றி ஆராய்ந்தார் பிரெய்ல்.இதில் பல திருத்தங்களையும் மேம்பாடுகளையும் ராணுவ கேப்டன் சார்லஸ் பார்பரிடம் கூறினார். அதைக் கேட்ட கேப்டன் மிகவும் வியந்தார். மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டார்.
லூயி பிரெய்ல் எட்டு ஆண்டுகள் கடுமையாக நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு பல மாற்றங்களைச் செய்தார்.இவருக்கு 15 வயதானபோது ஆறு புள்ளிகளை கொண்ட ஒரு எழுத்துமுறையை கண்டுப்பிடித்தார்.
பிரெய்ல் முறை
^^^^^^^^^^^^^^^^^^^
பிரெய்ல் முறையில் புள்ளிகள் தாளில் உயர்ந்து எழும்பி நிற்கும் தொடுவதன் மூலம் அந்த புள்ளிகளை உணரலாம்.உதாரணத்திற்கு A என்ற எழுத்தைக்குறிக்க ஒரு புள்ளி, B என்ற எழுத்தைக்குறிக்க இரண்டு புள்ளிகள் இதேபோல் ஆறு புள்ளிகளை 64 விதமாக பயன்படுத்தும் முறைதான் பிரெய்ல் முறை. இந்த முறையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்தார் பிரெய்ல். சில ஆண்டுகளில் கணிதத்திற்கும் , இசைக்கும் எழுத்து வடிவங்களை உருவாக்கினார். 1829-ஆம் ஆண்டில் தாம் உருவாக்கிய முறையை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டார்.
இதை ராணுவத்தினர் பயன்படுத்திவந்தார்கள் என்பதால் இது வெறும் சங்கேத மொழியாகவே கருதப்பட்டுவந்தது. இதைக் கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
நாளடைவில் இந்த முறையை உலகம் உணரத் தொடங்கியது. குறிப்பாக பார்வையற்றவர்களின் உலகம் புத்துணர்ச்சி பெற்றது. அதுவரை எழுதவும் படிக்கவும் முடியாமல் இருந்தவர்களுக்கு பிரெய்ல்முறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
பிரெய்ல் எழுத்துக்களின் முக்கியத்துவம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இவர் மரணத்திற்குப் பிறகு இவர் கண்டுபிடித்த ஆறு புள்ளிகளை ஆதாரமாகக் கொண்ட எழுத்து, படிப்படியாகத் தொடர்ந்து
பிரபல மடைந்தது. லூயி பிரெய்ல் இறந்த பிறகுதான் கல்வியாளர்களால், இந்த மொழியின் முக்கியத்துவதை புரிந்துக்கொண்டனர்.
பார்வையற்றவர்கள் மத்தியில் இது தொடர்ந்து அங்கீகாரம் பெற்றது.
இவர் கண்டுபித்த பிரெய்ல்முறை தான் பின்னாளில் John Milton, Helen Keller, sir arthur pearson போன்ற கண் பார்வையற்ற வரலாற்று நாயகர்களை உலகம் சந்திக்க முடிந்தது.
தொகுப்பு ...... முருகுவள்ளி

கருத்துகள்
கருத்துரையிடுக