11.1.2026. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் கிளையின் கீழடி ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தில் சமத்துப் பொங்கல் திருவிழா மற்றும் கடம்ப மரம் நடும் விழா என மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . குழந்தைகள் , பெற்றோர் , செயற்குழு உறுப்பினர்கள் என அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . தசிஎகச தலைவர் ச.நஜுமுதீன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்க முனைவர் கீழடி கரு முருகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பரதம் , வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், கதைசொல்லல் , சிலம்பம், சுருள் என பல்வேறு வகையான நிகழ்வுகளை சிறார்கள் நிகழ்த்தினர் . ஹுஸ்னாரா பானு வரவேற்புரையாற்ற மாணவி லிபி நேத்ரா நன்றியுரை கூறினார் . நிகழ்வில் பசுமை பாரதிதாசன், தமிழ்ச்செம்மல்இரா. இரவி, திருமதி சாந்தி, முனைவர் ஜோஸபின் மேரி , கவிஞர் துளிர் , விஸ்வநாத தாஸ் , அனுசுயா , அமுதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தசிஎசக செயலாளர் மு.சுலைகா பானு செய்திருந்தார். படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன், மோகன் கை வண்ணம்.
11.1.2026. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் கிளையின் கீழடி ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தில் சமத்துப் பொங்கல் திருவிழா மற்றும் கடம்ப மரம் நடும் விழா என மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .
குழந்தைகள் , பெற்றோர் , செயற்குழு உறுப்பினர்கள் என அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . தசிஎகச தலைவர் ச.நஜுமுதீன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்க முனைவர் கீழடி கரு முருகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பரதம் , வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், கதைசொல்லல் , சிலம்பம், சுருள் என பல்வேறு வகையான நிகழ்வுகளை சிறார்கள் நிகழ்த்தினர் . ஹுஸ்னாரா பானு வரவேற்புரையாற்ற மாணவி லிபி நேத்ரா நன்றியுரை கூறினார் . நிகழ்வில் பசுமை பாரதிதாசன், தமிழ்ச்செம்மல்இரா. இரவி, திருமதி சாந்தி, முனைவர் ஜோஸபின் மேரி , கவிஞர் துளிர் , விஸ்வநாத தாஸ் , அனுசுயா , அமுதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தசிஎசக செயலாளர் மு.சுலைகா பானு செய்திருந்தார். படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன், மோகன் கை வண்ணம்.




























































































கருத்துகள்
கருத்துரையிடுக