ூலின் பெயர் : மின்னல் ஹைக்கூ ! நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !

நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூ ! நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீன. தயாளு தெரு,தியாகராயர் நகர்.சென்னை.17.பக்கங்கள் 84 விலை ரூபாய் 80. தொலைபேசி எண்கள் 044 24342810./ 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com மதிப்பிற்குரிய கவிஞர் இரா.இரவி அவர்களின் 35வது நூலாக மலர்ந்திருக்கும் மின்னல் ஹைக்கூ என்ற நூல் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமானது. ஆறு முதல் அறுபது வயதினர் வரை அனைவரும் படிக்கத் தூண்டும் வகையில் உள்ளது, மிக அழகாவும், நேர்த்தியாகவும் வானதி பதிப்பகத்தார் வெளியிட்டிருப்பது மிகச்சிறப்பு. உறவுகள் ஒருவித பலம் என்றால், நட்பு பலவிதத்தில் பலம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திருமதி இர.ஜெயப்பிரியங்கா அவர்களின் கவிதைக்கேற்ற படங்கள். மிக மிக அழகான, பொருத்தமான படங்களைத் தயாரித்த சகோதரி திருமதி இர. ஜெயப்பிரியங்கா அவர்களுக்கு தனிப்பட்ட பாரட்டுக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறேன். சகோதரி சொல்லியிருப்பது போலவே தான் கவிஞர் இரா.இரவி அவர்கள் வளரும் கவிஞர்களை மிகவும் வரவேற்பவர். அவர்களின் சந்தேகங்களையும் போக்கி, உயர்ந்து வளர துணை நிற்பவர் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும். இந்நூலில் இருக்கும் கவிதைகள் உண்மையிலேயே மின்னல் போன்றே பளிச்சென்று தான் உள்ளது. வாழ்ந்தவர்கள் இறந்தனர் இறந்தவர்களுக்காக வாழ்கிறது தாஜ்மகால். என்ற கவிதையை வாசிக்கும் அனைவரும் ஒரு நொடி மனதிற்குள் கவிஞருக்கு ஒரு சபாஷ் போடுவதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருப்பது மிகச்சிறப்பு. தமிழ் என்ற சொல்லின்றி தமிழுக்கு மகுடம் திருக்குறள். என்ற கவிதை வரிகளில் திருக்குறளின் பெருமையையும் தமிழோடு சேர்த்து உயர்த்தியிருக்கிறார். மிக அருமை. பட்டப்பகலில் கூவியது சேவல் கணிணிப் பொறிஞன். என்ற கவிதை வரிகள் தற்போதைய இளைஞர்களின் திறமை. நிலை போன்றவற்றை எடுத்துரைக்கிறது. நூல் முழுவதும் கவிதை விருந்து படைத்திருக்கிறார் கவிஞர் இரா.இரவி அவர்கள். எத்தனையோ பறவைகளைப் பார்த்திருப்போம். நாம் கேள்விப்படாத தகரப் பறவை ஒன்றை இரா.இரவி அவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். வேடந்தாங்கல் செல்லாத தகரப் பறவை விமானம். என்ற சொல்லில் விமானத்தை அழகாக சிறப்பித்திருக்கிறார். பாராட்டுக்கள். வரிவிதிப்பு பலருக்குப் பிடிக்காது. ஆனால் கவிஞர் இரா.இரவியின் வரிமதிப்பு அனைவருக்குமே பிடித்தமானது. தொடரட்டும் உங்களின் முயற்சி! துவங்கட்டும் வாசகரின் மகிழ்ச்சி!

கருத்துகள்