படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தமிழச்சி தங்கப்பாண்டியன் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மேடும், பள்ளமுமாயிருந்த தமிழ்நாட்டின் பட்டி தொட்டிக்கெல்லாம் ஈரோட்டிலிருந்து ஒரு பகுத்தறிவுத் தார் ரோடு போட்டது சுயம்புவாய்த் தோன்றிய ஒரு சுயமரியாதைக் கனல். வெண்தாடி நெய்த அத் தார்ச்சாலை - திராவிடத்தின் தமிழ்ப் பாதங்களுக்குத் தரு நிழல்; ஆரியத்தின் அதிகாரத் தலைப்பாகைக்கோ கொடுங்கானல்; வெண்தாடி நெய்த அத் தார்ச்சாலை - தன் தடிக்கொரு கைப்பிடியாய் ஒரு பகுத்தறிவு நெசவாளரையும், காஞ்சீபுரத்தில் கண்டெடுத்தது! அதுவரை, பட்டுக் கடலிலும், பஞ்சுப் பொதியிலும் அமிழ்ந்திருந்த தமிழகத்தின் பாமரத்துத் தறியை இடம் பெயர்த்து, ஈரோட்டிற்கு எடுத்து வந்த அந்தக் காஞ்சிபுரத்துக் கலைக் கரம், இனமான ஆடையொன்றைத் தமிழருக்குத் தனியாகத் தயாரித்துத் தர, அதுவரை ஆட்சி செய்த, மேல்சாதி ஆயத்த ஆடைகள் ஒழிந்து போய், அன்று முதல், தோளிலே நீண்ட துண்டு அணிந்த கம்பீர உடை அமுலுக்கு வந்தது! பேரறிஞரையும், முத்தமிழ் அறிஞரையும் வார்த்தெடுத்த வெண்தாடி வேந்தருக்கு வீர வணக்கம் 🙏

கருத்துகள்