நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூ நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : பேராசிரியர் இ.கி. இராமசாமி .மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் .யாதவர் கல்லூரி திருப்பலை.மதுரை .
நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூ
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : பேராசிரியர் இ.கி. இராமசாமி .மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் .யாதவர் கல்லூரி திருப்பலை.மதுரை .
வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீன. தயாளு தெரு,தியாகராயர் நகர்.சென்னை.17.பக்கங்கள் 84 விலை ரூபாய் 80. தொலைபேசி எண்கள் 044 24342810./ 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
ஹைக்கூ திலகம் தமிழ்ச்செம்மல் இரவியின் மின்னல் ஹைக்கூ கவிதைகளில் படித்ததில் பிடித்தவை :
(1) புத்தகத்தின் மதிப்பு, வானதி ராமநாதனின் அணிந்துரை, செயபிரியங்காவின் புரிதலில் அமைந்த படங்கள், கவிஞரின் வாழ்வியல், சாதனைகள், செய்ந்நன்றி பாராட்டும் உள்ளத்தை வெளிப்படுத்தும் வகையில் மாமனிதர் இறையன்பு இ.ஆ.ப.-வின் தந்தையார் படம், தரமான தாள், நூற்கட்டு யாவும் நெஞ்சில் நிற்கின்றன.
(2) படத்தினால் கவிதை உயிர் பெறுகிறதா? கவிதையால் படம் உயிர் பெறுகிறதா? என்று பாராட்டியுள்ளார் இராமநாதன். கவிதையால் படம் உயிர் பெறுகிறது.
(3) குளிர்பானம் வேகமாக விற்பனை/
ஆகின்றது. அதனைப் பார்த்து/
வருந்துகிறதாம் இளநீர்.
வாழ்ந்து/
மடிந்தவருக்காக/
வாழும் தாஜ்மகால்.
சிற்பி இல்லை/
சிற்பம் உண்டு/
எது நிலை?
யுகங்கள் கடந்தும்/
இளமை குன்றவில்லை/
தமிழ். (எதார்த்தம் அப்படி இல்லை)
மாதா பிதா குரு/
ஒரே வடிவில்/
மனைவி.
இப்படிச் சொற்சிப்பங்களோடு கருத்தியல் வளம் கொழிக்கின்றது. சமூக அவலங்களை ரவியின் படைப்புகளில் காண முடிகின்றது. அவை என்னமோ செய்கின்றன.

கருத்துகள்
கருத்துரையிடுக