புத்தகம் : பெண் ஏன் அடிமையானாள்?
ஆசிரியர் : தந்தை பெரியார்
பதிப்பகம் : பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஈரோடு.
* பெண் அடிமையான, அதற்கு முதன்மை காரணம், பெண் சமூகம் ஒப்புக் கொண்டு உதவி புரிந்து வருவதால் தான் இது உரம் பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும்;
*பெண் மக்கள் தாங்கள் ஆண் மக்களின் சொத்துக்கள் என்றும் ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றும் அவர்களது கோபத்திற்கு ஆளாக கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றனர்;
* கற்பமுறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேட்சை கற்புமுறை ஏற்படவேண்டும்.
*கற்புக்காக புருஷனின் மிருக செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாய வேண்டும்.
*இக்கொடுமைகள் நீங்கன இடத்தில் மாத்திரம் மக்கள் பிரிவில் உண்மை கற்பை இயற்கை கற்பை சுதந்திரக்கற்பை காணலாம்.
*பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும் ஒன்றிடம் பலவற்றில் ஒன்றிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையே ஆகும் ஆகவே ஆசையைவிட அன்பைவிட நட்பை விட காதல் என்பதாக வேறு ஒன்றும் இல்லை என்றும் அந்த அன்பு ஆசை நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அக்ரினை பொருட்கள் இடத்திலும் மற்ற உயர்திணை பொருட்கள் இடத்திலும் ஏற்படுவதுபோல தானே ஒழிய வேறில்லை.
*ருசியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம் போல் பாவிக்கப்பட்டு வருகின்றது
*ஜெர்மனியில் புருஷனுக்கும் பெண் சாதிக்கும் இஷ்டம் இல்லையேயானால் உடனே காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாம்.
*பரோடா அரசாங்கத்தாலும் "கல்யாணரத்துக்கு" சட்டம் நிறைவேற்றி விட்டார்கள்.
*ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் - மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையை போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது.நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாக கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை.
அவ்விதக் கல்யாணத்திற்கு தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற போலி பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக் கின்றோம்.
*பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கு மனிதத் தன்மையும் மனித உரிமையும் சுய மரியாதையையும் ஏற்படுத்த வேண்டுமானால் ஆண்களுக்கு திருப்தியும் இன்பமும் உண்மையான காதலும் ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாணரத்திற்கு இடம் அளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும்.அப்படி இல்லாத வரையில் ஆண் பெண் இருவருக்கும் உண்மை இன்பத்திற்கும் சுதந்திரம் வாழ்க்கைக்கும் இடமே இல்லாமல் போய்விடும்.
*ஏதோ கல்யாணம் என்பதாக ஒன்றை செய்தாகிவிட்டது அது எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதான் இருக்கவேண்டும் என்று கருதித் துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பது அப்படி செய்வதும் மனிதத் தன்மையும் சுயமரியாதையும் மற்ற காரியம் ஆகும். ஒருநாளும் அறிவுடைமை ஆகாது.
விபச்சாரி என்ற வார்த்தையானது பெண்களை மட்டுமே சாடுகிறது ஆண்களை விபச்சாரர்கள் என்று வைக்கின்ற வழக்கம் கிடையாது.இம்முறை மாறுதல் வேண்டும்.
*விதவை முறை - இது உலக இயற்கை அல்ல எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிபதே ஆகும் .
* உலகில் மனித வர்க்கத்தினர் உள்ளிருக்கும் அடிமைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழிய வேண்டும்.அது அழிந்த நிலையே சமத்துவம் சுதந்திரம் துளிர்விடும் இடமாம். இதற்கு விதவைகளுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை ஏற்படுத்துவதே முதல் காரியமாகும்.
*பெண்கள் விடுதலை அடையவும் சுயேட்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியம்.
*"ஆண்மை "என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி.சுதந்திரம் வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ஆண்மைக்கு தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை எந்த சமயத்திலும் சுதந்திரமாய் இருக்க விடக்கூடாது என்றும், குழந்தைப்பருவத்தில் தகப்பனுக்கு கீழும் வயோதிக பருவத்தில் பிள்ளைகளுக்குக் கீழும் இளம் பருவத்தில் கணவருக்கு கீழும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
உலகத்தில் மற்றெல்லா தாவரங்கள் ஜீவப் பிராணிகள் முதலியவைகள் இயற்கை வாழ்வு நடத்தும் போது மனிதர்கள் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாக அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகிறார்கள்.
யாரும் யாரையும் சார்ந்து வாழாத போது ஒரு பெண் மட்டும் ஏன் ஒரு ஆணை சார்ந்து வாழ வேண்டும் என்பதே கேள்வி?

கருத்துகள்
கருத்துரையிடுக