இனிய காலை வணக்கம் ."
தனது நாடகங்களில் கருணை காட்டுவதையும், மன்னிப்பதையும் மாபெரும் நெறியாக ஷேக்ஸ்பியர் வலியுறுத்துகிறார்.
அவருடைய 'விரும்பியபடி' நாடகத்தில் ஆலிவர் என்கிறவனுக்கு ஆர்லண்டோ என்பவன் தம்பி .தம்பி சிறுவனாக இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். இறக்கும்போது ஆலிவரை அழைத்துத் தம்பியை நன்கு வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .ஆனால் அண்ணனோ மோசமானவன். தம்பியை நன்றாகப் படிக்க வைக்கவில்லை. இருந்தாலும்
ஆர்லண்டோ அனைவரும் விரும்பும் படி நற்குணங்கள் பெற்றான். ஆலிவருக்குப் பொறாமை. அரண்மனையில் மல்யுத்தப் போட்டி. அதில் ஆர்லண்டோ கலந்து கொண்டான். மல்யுத்த வீரன்
ஆலிவரிடம் சென்று 'உன் தம்பிக்கு ஏதாவது தீங்கு ஏற்படலாம் 'என்று சொன்னபோது 'நீ அவனை மல்யுத்தத்தில் தீர்த்துக் கட்டி விடு' என்று சொல்கிறான். ஆனால் ஆர்லண்டோ வீரத்தால் வெற்றி பெறுகிறான். அவன் பெற்ற வெற்றி, அந்நாட்டு அரசனுக்குப் பிடிக்கவில்லை. அவனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து அவனைக் கொண்டு வர வேண்டும் என்று ஆலிவருக்கு ஆணையிடுகிறான். அவனும் தம்பியைத் தேடி அவன் மறைந்து வாழும் காட்டுக்கு வருகிறான். அங்கே அவனைத் தாக்கச் சிங்கம் ஒன்று பாய்ந்து வருகிறது. தனக்கு இத்தனை கொடுமைகள் செய்திருந்தாலும் ,
ஆர்லண்டோ கருணையும், பெருந்தன்மையும் கொண்டு அவன் உயிரைச் சிங்கத்திடம் இருந்து காப்பாற்றுகிறான்
ஆலிவரும் திருந்துகிறான்
' மறப்போம் மன்னிப்போம் 'என்கிற புகழ்பெற்ற வாசகங்கள் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 397..இந்த நாள்
மறந்து, மன்னித்து மகிழ்வுறும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக